பக்கா அமெரிக்கன் எஸ்யூவியாக புதிய தலைமுறை ஃபோர்டு எண்டேவியர்!! முதல் டீசர் வீடியோ வெளியீடு!

புதிய தலைமுறை ஃபோர்டு எண்டேவியர் காரின் முதல் அதிகாரப்பூர்வ டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள விஷயத்தை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பக்கா அமெரிக்கன் எஸ்யூவியாக புதிய தலைமுறை ஃபோர்டு எண்டேவியர்!! முதல் டீசர் வீடியோ வெளியீடு!

சர்வதேச சந்தைகளில் எவரெஸ்ட் என்கிற பெயரிலும், இந்திய சந்தையில் எண்டேவியர் என்கிற பெயரிலும் விற்பனை செய்யப்பட்டு வந்த ஃபோர்டின் இந்த எஸ்யூவி காருக்கு உலகளவில் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இத்தகைய பிரபலமான காரின் புதிய தலைமுறை மாடலின் தயாரிப்பு பணிகளில் ஃபோர்டு உள்ளது என்பது ஏற்கனவே சிலமுறை வெளியாகி இருந்த ஸ்பை படங்களின் மூலம் தெரிய வந்திருந்தது.

பக்கா அமெரிக்கன் எஸ்யூவியாக புதிய தலைமுறை ஃபோர்டு எண்டேவியர்!! முதல் டீசர் வீடியோ வெளியீடு!

இந்த நிலையில் தற்போது, அடுத்த 2022இல் உலகளவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் அப்டேட் செய்யப்பட்ட புதிய எண்டேவியர் எஸ்யூவி தொடர்பான வீடியோ ஒன்றை ஃபோர்டு அதன் அதிகாரப்பூர்வ யுடியூப் சேனலில் வெளியிட்டுள்ளது. கீழுள்ள அந்த வீடியோவில் அப்டேட் செய்யப்பட்ட எண்டேவியரின் தோற்றம் மறைப்பால் மறைக்கப்பட்டுள்ளதை காணலாம்.

தற்போதைய எண்டேவியர் அதன் பெரும்பான்மையான உடற்பாகங்களையும், என்ஜின்களையும் ரேஞ்சர் பிக்அப் ட்ரக் உடன் பகிர்ந்து கொள்கிறது. அதேபோல் புதியதாக வெளிவரவுள்ள புதிய தலைமுறை எண்டேவியரும் பெரும்பாலான டிசைனை அதன் பிரபலமான ரேஞ்சர் மாடலுடன் பகிர்ந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் 2022 ஃபோர்டு எண்டேவியரின் டிசைனை பற்றிய சில புதிய தகவல்கள் தெரியவந்துள்ளன.

பக்கா அமெரிக்கன் எஸ்யூவியாக புதிய தலைமுறை ஃபோர்டு எண்டேவியர்!! முதல் டீசர் வீடியோ வெளியீடு!

ரேஞ்சர் & எண்டேவியர், இரண்டும் ஒரே லேடார்-ஆன்-ஃப்ரேம் சேசிஸின் அடிப்படையில் தான் உருவாக்கப்படுகின்றன. இவை இரண்டையும் வாகனத்தின் பின்பக்க துணை ஃப்ரேம் மற்றும் பின்பக்க சஸ்பென்ஷன் அமைப்பே வேறுப்படுத்துகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், பக்கா அமெரிக்கன் எஸ்யூவி காருக்கு உண்டான பருத்த முன்பக்கத்துடன் புதிய எவரெஸ்ட் (எ) எண்டேவியர் வடிவமைக்கப்பட்டுள்ளதை காண முடிகிறது.

பக்கா அமெரிக்கன் எஸ்யூவியாக புதிய தலைமுறை ஃபோர்டு எண்டேவியர்!! முதல் டீசர் வீடியோ வெளியீடு!

இதன் முன்பக்கத்தில் C-வடிவில் பொருத்தப்பட்ட எல்இடி ஹெட்லைட்களை, செங்குத்தாக பொருத்தப்பட்ட ஸ்லாட்களை கொண்ட 3டி க்ரில்லின் இரு பக்கங்களிலும் காண முடிகிறது. ஹெட்லைட்களை இரு தடிமனான கம்பிகள் இணக்க, க்ரில்லிற்கு மத்தியில், இந்த கம்பிகளின் மீது ஃபோர்டு லோகோ வழங்கப்பட்டுள்ளது. இவற்றுடன் முன்பக்கத்தின் அடிப்பகுதியில் சில்வர் நிறத்திலான பேஷ் தட்டினை பார்க்கலாம்.

பக்கா அமெரிக்கன் எஸ்யூவியாக புதிய தலைமுறை ஃபோர்டு எண்டேவியர்!! முதல் டீசர் வீடியோ வெளியீடு!

மற்றப்படி பக்கவாட்டு பகுதியில் தற்போதைய எண்டேவியரில் இருந்து பெரிய அளவில் புதிய தலைமுறை எண்டேவியர் வேறுப்படவில்லை. 2022 எண்டேவியரில் மற்ற கவனிக்கத்தக்க அம்சங்கள் நீட்டிக்கப்பட்ட முன்பக்க கண்ணாடி, பெரிய அலாய் சக்கரங்கள், மேற்கூரை கம்பிகள், பெரியதாக்கப்பட்ட பக்கவாட்டு படிக்கட்டு மற்றும் சற்று நிமிர்த்தப்பட்ட மேற்கூரையை தாங்கி நிற்கும் பில்லர்கள் உள்ளிட்டவற்றை சொல்லலாம்.

பக்கா அமெரிக்கன் எஸ்யூவியாக புதிய தலைமுறை ஃபோர்டு எண்டேவியர்!! முதல் டீசர் வீடியோ வெளியீடு!

இந்த வீடியோவின்படி பார்க்கும்போது புதிய எண்டேவியரின் பின்பக்கத்தில் வழக்கம்போல் C-வடிவிலான எல்இடி டெயில்லேம்ப்களே தொடரப்பட உள்ளன. அதேபோல் மேற்கூரையில் பொருத்தப்பட்ட ஸ்பாய்லர், உயரத்தில் பொருத்தப்படும் பிரேக் விளக்கு மற்றும் உட்புற கேபினின் அளவு முதலியவற்றையும் புதிய எண்டேவியரில் பெரியதாக ஃபோர்டு மாற்றவில்லை.

பக்கா அமெரிக்கன் எஸ்யூவியாக புதிய தலைமுறை ஃபோர்டு எண்டேவியர்!! முதல் டீசர் வீடியோ வெளியீடு!

ஆனால் கேபினிற்கு உள்ளே அகலமான திரை கொண்ட புதிய டிஜிட்டல் இன்ட்ரூமெண்ட் கன்சோல், அளவில் பெரிய மாத்திரை வடிவிலான இன்ஃபோடெயின்மெண்ட் திரை உள்பட இணைப்பு-கார் தொழிற்நுட்பங்களும் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் ரிவர்ஸில் வரும்போது குறுக்காக வேறு வாகனம் வந்தால் எச்சரிக்கும் வசதி, ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதியில் ஏற்படும் மோதலை எச்சரிக்கும் வசதி மற்றும் அதிநவீன தானியங்கி அவசரகால ப்ரேக்கிங் அமைப்பு உள்ளிட்டவை அடங்கிய அதிநவீன ஓட்டுனர் உதவி அமைப்பை பாதுகாப்பு அம்சமாக புதிய எண்டேவியர் பெற்றுவரலாம்.

பக்கா அமெரிக்கன் எஸ்யூவியாக புதிய தலைமுறை ஃபோர்டு எண்டேவியர்!! முதல் டீசர் வீடியோ வெளியீடு!

இவ்வாறான காரை பற்றிய கூடுதல் விபரங்கள் வரும் வாரங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மிக முக்கிய அப்டேட் காரின் அடியில் பொருத்தப்படும் என்ஜின் அமைப்பில் தான் கொண்டுவரப்பட உள்ளது. புதிய தலைமுறை எண்டேவியர் 2.0 லிட்டர், 4-சிலிண்டர், இரட்டை-டர்போ ஈக்கோ ப்ளூ டீசல் மற்றும் புதிய 3.0 லிட்டர் வி6 டர்போ டீசல் என்ஜின் உடன் விற்பனை செய்யப்பட உள்ளது.

பக்கா அமெரிக்கன் எஸ்யூவியாக புதிய தலைமுறை ஃபோர்டு எண்டேவியர்!! முதல் டீசர் வீடியோ வெளியீடு!

இதில் புதிய என்ஜின் தேர்வு அதிகப்பட்சமாக 254 பிஎச்பி மற்றும் 600 என்எம் டார்க் திறன் வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் 10-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இவை இரண்டுடனும் வழங்கப்பட உள்ளதாம். 4x4 ட்ரைவ்ட்ரெயின் அமைப்பும் கூடுதல் தேர்வாக புதிய எண்டேவியரில் கொடுக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

பக்கா அமெரிக்கன் எஸ்யூவியாக புதிய தலைமுறை ஃபோர்டு எண்டேவியர்!! முதல் டீசர் வீடியோ வெளியீடு!

அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு இந்தியாவில் இருந்து வெளியேறியதால் எண்டேவியர் உள்பட அதன் அனைத்து கார்களின் விற்பனையும் நிறுத்தி கொள்ளப்பட்டது. நஷ்டத்தால் எடுக்கப்பட்ட முடிவு இது என்றாலும், இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட எண்டேவியர் காரை மீண்டும் கொண்டுவர முயற்சிகள் நடப்பதாக சமீபத்தில் வதந்திகள் வெளியாகின. புதிய தலைமுறை எண்டேவியர் மாடலாவது இந்தியாவிற்கு மீண்டும் வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Most Read Articles

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Next-Gen Ford Everest Teaser.
Story first published: Thursday, December 16, 2021, 17:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X