மஹிந்திராவின் ‘உடனடி கவனத்தில்’ புதிய தலைமுறை ஸ்கார்பியோ!! 2022இல் அறிமுகம்

மஹிந்திரா நிறுவனத்தில் அடுத்ததாக, மிக விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள மாடலாக புதிய தலைமுறை ஸ்கார்பியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மஹிந்திராவின் ‘உடனடி கவனத்தில்’ புதிய தலைமுறை ஸ்கார்பியோ!! 2022இல் அறிமுகம்

மஹிந்திரா நிறுவனம் சமீப காலமாக பல வெற்றிக்கரமான மாடல்களை அறிமுகப்படுத்தி வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த 2020ஆம் ஆண்டின் இறுதியில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இரண்டாம் தலைமுறை தார் வாகனம் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

மஹிந்திராவின் ‘உடனடி கவனத்தில்’ புதிய தலைமுறை ஸ்கார்பியோ!! 2022இல் அறிமுகம்

அதன்பின் டியூவி300 மாடலின் இடத்திற்கு மாற்றாக பொலிரோ நியோ அறிமுகப்படுத்தப்பட்டது. பொலிரோ நியோ பல மிடில்-கிளாஸ் வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வாக மாறி வருகிறது. இவை எல்லாவற்றையும் விட மஹிந்திராவை பொறுத்தவரையில் மிக முக்கிய மாடலாக எக்ஸ்யூவி700 சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது.

மஹிந்திராவின் ‘உடனடி கவனத்தில்’ புதிய தலைமுறை ஸ்கார்பியோ!! 2022இல் அறிமுகம்

முன்பு விற்பனையில் இருந்த எக்ஸ்யூவி500க்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட எக்ஸ்யூவி700 மஹிந்திரா பிராண்டின் புதிய லோகோ உடன் அறிமுகப்படுத்தப்பட்டது. முன்பதிவுகளை குவித்துவரும் எக்ஸ்யூவி700க்கு அடுத்து புதிய தலைமுறை ஸ்கார்பியோ தான் வெளிவரும் என நாம் கிட்டத்தட்ட கடந்த 1 வருடமாக எதிர்பார்த்து வருகிறோம்.

மஹிந்திராவின் ‘உடனடி கவனத்தில்’ புதிய தலைமுறை ஸ்கார்பியோ!! 2022இல் அறிமுகம்

இந்த நிலையில் தற்போது இதனை உறுதிப்படுத்தும் வகையில் மஹிந்திரா & மஹிந்திரா க்ரூப்பின் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் ஜேஜூரிகர் சமீபத்திய பேட்டி ஒன்றில், புதிய தலைமுறை தார், எக்ஸ்யூவி300, பொலிரோ நியோ மற்றும் எக்ஸ்யூவி700 மாடலை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து தற்சமயம் நிறுவனம் சரியான பாதையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மஹிந்திராவின் ‘உடனடி கவனத்தில்’ புதிய தலைமுறை ஸ்கார்பியோ!! 2022இல் அறிமுகம்

மஹிந்திராவின் அடுத்த அறிமுகம் புதிய தலைமுறை ஸ்கார்பியோ தான் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திய ராஜேஷ் ஜேஜூரிகர், பிராண்டின் உடனடி நோக்கமாக உள்ள இது அடுத்த ஆண்டில் (2022) வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். புதிய தலைமுறை ஸ்காபியோ கடந்த மாதங்களில் பலமுறை முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

மஹிந்திராவின் ‘உடனடி கவனத்தில்’ புதிய தலைமுறை ஸ்கார்பியோ!! 2022இல் அறிமுகம்

மஹிந்திரா ஸ்கார்பியோவிற்கு இந்தியாவில் உள்ள வரவேற்பை பற்றி நான் கூற வேண்டிய அவசியம் இருக்காது என்றே நினைக்கிறேன். ஏனெனில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனையில் உள்ள ஸ்கார்பியோவிற்கு இத்தனை வருடங்களில் பெரிய அளவில் எந்தவொரு அப்கிரேடையும் மஹிந்திரா வழங்கியதுபோல் தெரியவில்லை. இருப்பினும் தற்போதைக்கு அதிகளவில் விற்பனையாகும் எஸ்யூவி கார்களின் பெயர்களை எடுத்து பார்த்தால், அதில் நிச்சயம் ஸ்கார்பியோவின் பெயரும் ஒன்றாக இருக்கும்.

மஹிந்திராவின் ‘உடனடி கவனத்தில்’ புதிய தலைமுறை ஸ்கார்பியோ!! 2022இல் அறிமுகம்

அப்கிரேட்களை பெறாமல் ஒரு வாகனம் தொடர்ந்து சிறப்பாக விற்பனையாகி கொண்டிருப்பது உண்மையில் அரிதான விஷயமே. ஆனால் இதனை ஸ்கார்பியோ சாத்தியமாக்கி வருகிறது. இதற்கு காரணம், இந்தியாவில் ஆரம்பத்திலேயே இந்த மஹிந்திரா தயாரிப்பு ஏற்படுத்திய தாக்கம் தான். எனவே புதிய தலைமுறை மாடல் அறிமுகப்படுத்தப்பட்டால் ஸ்கார்பியோ கார்களின் விற்பனை புதிய உச்சத்திற்கு சென்றாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை.

மஹிந்திராவின் ‘உடனடி கவனத்தில்’ புதிய தலைமுறை ஸ்கார்பியோ!! 2022இல் அறிமுகம்

இருப்பினும் தற்சமயம் குறைக்கடத்திகளுக்கான உலகளாவிய பற்றாக்குறை மஹிந்திராவை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. இதில் இருந்து மீள மஹிந்திரா சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், எக்ஸ்யூவி700 கார்களை முன்பதிவு செய்பவர்களுக்கு பல மாதங்களுக்கு காத்திருப்பு காலம் நிர்ணயித்து வருகின்றனர். கடந்த நவம்பரில் இந்த காரினை புக் செய்த வாடிக்கையாளர்கள் 2023 மே மாதம் வரையில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதாக தெரிவித்திருந்தனர்.

மஹிந்திராவின் ‘உடனடி கவனத்தில்’ புதிய தலைமுறை ஸ்கார்பியோ!! 2022இல் அறிமுகம்

இதேபோல் புதிய தலைமுறை மஹிந்திரா தார் வாகனத்தை முன்பதிவு செய்பவர்களும் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழலே தற்சமயம் உள்ளது. குறைக்கடத்திகளுக்கான பற்றாக்குறை குறித்து மஹிந்திரா & மஹிந்திரா க்ரூப்பின் நிர்வாக இயக்குனர் பேசுகையில், இதனை விரைவாக சமாளிக்க தங்களது நிறுவனம் சிறப்பானதை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மஹிந்திராவின் ‘உடனடி கவனத்தில்’ புதிய தலைமுறை ஸ்கார்பியோ!! 2022இல் அறிமுகம்

இதன்படி சிப்-களுக்கான பிரச்சனையை சமாளிக்கவும், வாடிக்கையாளர்களுக்கு குறைந்த காத்திருப்பு காலத்தை நிர்ணயிக்க வேண்டியும் அதிநவீன ஓட்டுனர் உதவி அம்சங்கள் இல்லாத எக்ஸ்யூவி700 காரை மஹிந்திரா அறிமுகப்படுத்த உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் இதுகுறித்து மஹிந்திரா நிறுவனம் சார்பில் எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

மஹிந்திராவின் ‘உடனடி கவனத்தில்’ புதிய தலைமுறை ஸ்கார்பியோ!! 2022இல் அறிமுகம்

புதிய ஸ்கார்பியோவை தொடர்ந்து ஐந்து-கதவு தார், புதிய தலைமுறை பொலிரோ மற்றும் எக்ஸ்யூவி300 மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன்களை மஹிந்திரா அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கிறோம். இவை மட்டுமின்றி எக்ஸ்யூவி ஏரோ கான்செப்ட்டின் அடிப்படையிலான கூபே எஸ்யூவி காரையும் எதிர்காலத்தில் கொண்டுவர மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. இதன் பெயர் எக்ஸ்யூவி900 என சூட்டப்படலாம். 2027ஆம் ஆண்டிற்குள் மொத்தம் 13 புதிய வாகனங்களை இந்தியாவில் மஹிந்திரா அறிமுகப்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Next gen mahindra scorpio is the immediate focus
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X