Just In
- 2 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 3 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 4 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 5 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2021ஆம் ஆண்டிற்கான மஹிந்திரா ஸ்கார்பியோ இவ்வாறுதான் இருக்கும்!! ஸ்பை படங்கள் வெளியீடு
தயாரிப்பு பணிகள் நிறைவு செய்த அடுத்த தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ கார் இந்தியாவில், நமது தமிழக நம்பர் ப்ளேட் உடன் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்த 2021ஆம் வருட இரண்டாம் பாதியில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ தற்சமயம் விற்பனையில் உள்ள ஸ்கார்பியோவை காட்டிலும் அளவில் பெரியதாக உள்ளது. அதுமட்டுமின்றி தோற்றத்திலும் புதியதாக உள்ளது.

இந்த நிலையில் தற்போது டீம் பிஎச்பி செய்திதளத்தின் மூலமாக கிடைத்துள்ள ஸ்பை படங்களில் 2021 ஸ்கார்பியோவின் முன்பக்கம் மறைக்கப்பட்டிருப்பினும், செங்குத்தான ஸ்லாட்களுடன் மஹிந்திராவின் அடையாள க்ரில் அமைப்பை பெற்றுள்ளதை பார்க்க முடிகிறது.

முன்பக்கத்தில் இந்த காரில் இரட்டை-பேட் ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. இது ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி டிஆர்எல் விளக்குகளை கொண்டிருக்கலாம். இந்த எஸ்யூவி காரின் பின்பக்கத்தில் டெயில்கேட்டும் வழக்கம்போல் வழங்கப்பட்டுள்ளது.

இவை மட்டுமின்றி பின்பக்கம் பார்க்க உதவும் பக்கவாட்டு கண்ணாடிகள் உடன் ஒருங்கிணைக்கப்பட்ட டர்ன் இண்டிகேட்டர்கள், மேற்கூரை தண்டவாளங்கள், பக்கவாட்டு படிக்கட்டுகள் மற்றும் பல-ஸ்போக் அலாய் சக்கரங்களும் வழங்கப்பட்டுள்ளன.

விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி காரை போல் அல்லாமல், 2021 ஸ்கார்பியோ தள்ளு வகையிலான கதவு கைப்பிடிகளை கொண்டுள்ளது. தற்சமயம் இசட்101 என்ற பெயரால் குறிப்பிடப்பட்டு வரும் புதிய ஸ்கார்பியோ ஏணி வடிவிலான சேசிஸை சார்ந்ததாக இருக்கலாம்.

அதேபோல் இந்த 2021ஆம் ஆண்டிற்கான மஹிந்திரா தயாரிப்பு மாடலில் அதிகப்பட்சமாக 158 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் டீசல் என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் வழங்கப்படவுள்ளன.
2021 மஹிந்திரா ஸ்கார்பியோவின் அறிமுகம் இந்த 2021ஆம் ஆண்டின் மத்தியில் இருக்கலாம்.