என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான் உடன் வரும் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! புதிய ஸ்பை படங்கள் வெளியீடு

2021 மஹிந்திரா ஸ்கார்பியோவின் உட்புறத்தில் வழங்கப்பட்டுள்ள சில வசதிகளை வெளிக்காட்டும் விதத்திலான ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான் உடன் வரும் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! புதிய ஸ்பை படங்கள் வெளியீடு

மஹிந்திராவின் புதிய தலைமுறை ஸ்கார்பியோ கடந்த பல மாதங்களாக வெவ்வேறு காரணங்களுக்காக சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் தற்போது மீண்டும் பொது சாலையில் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள இந்த 2021 மாடலின் ஸ்பை படங்கள் ரஷ்லேன் செய்திதளம் மூலமாக நமக்கு கிடைத்துள்ளன.

என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான் உடன் வரும் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! புதிய ஸ்பை படங்கள் வெளியீடு

இந்த ஸ்பை படங்களின் மூலம் புதிய ஸ்கார்பியோ காரின் உட்புறத்தில் வழங்கப்பட்டுள்ள சில வசதிகள் பற்றிய விபரங்கள் நமக்கு தெரியவந்துள்ளன. அதுமட்டுமில்லாமல் மேற்கூரையின் தோற்றமும் ஓரளவிற்கு நமது கண்களுக்கு புலப்படுகிறது.

என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான் உடன் வரும் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! புதிய ஸ்பை படங்கள் வெளியீடு

இந்த படங்களையும், இதற்கு முன் வெளியாகி இருந்த படங்களையும் வைத்து பார்க்கும்போது புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ புத்துணர்ச்சியான டிசைனில், முன்பக்க பயணிகளுக்கு கூடுதலான இட வசதியை வழங்கும் விதத்தில் டேஸ்போர்டை பெற்றுவரும் என எதிர்பார்க்கிறோம்.

என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான் உடன் வரும் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! புதிய ஸ்பை படங்கள் வெளியீடு

கருப்பு & பழுப்பு என்ற இரட்டை நிறத்தில் இந்த ஸ்பை படங்களில் காட்சியளிக்கும் டேஸ்போர்டில் புதிய ஸ்டேரிங் சக்கரம் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இந்த படங்களை இன்னும் நெருங்கி பார்த்தால் என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தானையும் பார்க்க முடிகிறது.

என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான் உடன் வரும் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! புதிய ஸ்பை படங்கள் வெளியீடு

இதனால் இது ஸ்கார்பியோவின் டாப் வேரியண்ட்டாக இருக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் இந்த சோதனை மாதிரியில் சன்ரூஃப்-ஐயும் பார்க்க முடிகிறது. ஆனால் இது புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500-ல் வழங்கப்பட்டுள்ளதை போன்றதான பனோராமிக் சன்ரூஃப் கிடையாது.

என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான் உடன் வரும் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! புதிய ஸ்பை படங்கள் வெளியீடு

டேஸ்போர்டின் வலது முனையில் சில்வர் நிற பார்டரை கொண்ட ஏசி துளைகளை பார்க்கலாம். இவற்றுடன் தற்போதைய நடுத்தர அளவு எஸ்யூவி வாகனங்களை சமாளிக்க ஏகப்பட்ட தொழிற்நுட்ப அம்சங்களை புதிய ஸ்கார்பியோவில் மஹிந்திரா நிறுவனம் வழங்கும் என்பது உறுதி.

என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான் உடன் வரும் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! புதிய ஸ்பை படங்கள் வெளியீடு

மொத்த பரிமாண அளவுகளில் முந்தைய தலைமுறையை காட்டிலும் 2021 ஸ்கார்பியோ சற்று பெரியதாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இயக்க ஆற்றலை வழங்குவதற்கு வழக்கமான 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் என்ஜின் உடன் 2020 தாரில் அறிமுகமான 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் தேர்விலும் புதிய ஸ்கார்பியோ விற்பனை செய்யப்படும் என நம்புகிறோம்.

என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான் உடன் வரும் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! புதிய ஸ்பை படங்கள் வெளியீடு

மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு விதமான ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளிலும் கிடைக்கவுள்ள 2021 ஸ்கார்பியோவின் டாப் வேரியண்ட்களில் 4X4 ட்ரைவ் சிஸ்டம் வழங்கப்படலாம். ஸ்கார்பியோவிற்கு போட்டியாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சஃபாரியை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
2021 Mahindra Scorpio Interior Spied. Gets Sunroof, Engine Start Stop Button.
Story first published: Saturday, February 27, 2021, 9:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X