Just In
- 2 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 2 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 3 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 4 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2021 ஸ்கார்பியோவை தொடர்ச்சியாக சாலையில் சோதித்துவரும் மஹிந்திரா- அறிமுகம் எப்போதுதான்?
அறிமுகத்திற்கு தயாரான நிலையில் புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ மீண்டும் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

விற்பனையில் கொடிக்கட்டி பறந்துவந்த டாடா சாஃபாரிக்கு போட்டியாக மஹிந்திரா கொண்டுவந்த ஸ்கார்பியோ, அவ்வளவு பிரபலமான காருக்கு மாற்றாக கொண்டுவரப்பட்டதாலோ என்னவோ ஆரம்பத்தில் பெரிய அளவில் கவனத்தை பெறவில்லை.

ஆனால் இப்போது இந்த நிலையே வேறு. ஸ்கார்பியா மஹிந்திரா பிராண்டின் அடையாளங்களுள் ஒன்றாக திகழ்கிறது. இதற்கு இந்த வாகனத்தின் விசாலமான கேபினை முக்கிய காரணமாக சொல்லலாம்.

இருப்பினும் அதிகரித்துவரும் போட்டியினாலும், அப்கிரேட் செய்யப்பட்டு பல வருடங்கள் ஆனாதினாலும் ஸ்கார்பியோவின் அடுத்த தலைமுறையை கொண்டுவர வேண்டிய கட்டாயம் மஹிந்திராவிற்கு ஏற்பட்டுள்ளது. இதன்படி அடுத்த தலைமுறை ஸ்கார்பியோ இந்த 2021ன் இறுதியில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதன் காரணமாக புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ குறிப்பாக கடந்த சில மாதங்களாக தீவிர சோதனை ஓட்டங்களை ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது. அத்தகைய சோதனை ஓட்டங்களின் தொடர்ச்சியாக மீண்டும் சாலை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்ட ஸ்கார்பியோவைதான் கீழேயுள்ள படத்தில் பார்க்கிறீர்கள்.

இது விலை குறைவான வேரியண்ட்டாக இருக்க வேண்டும், ஏனெனில் டீம்பிஎச்பி செய்திதளம் கிடைத்துள்ள ஸ்பை படங்களில் இந்த சோதனை ஸ்கார்பியோவில் 6-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் மற்றும் 17-இன்ச் இரும்பு சக்கரங்கள் என விலை குறைவான பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இசட்101 என்ற குறியீட்டு பெயரால் அழைக்கப்பட்டு வரும் புதிய ஸ்கார்பியோ அதே லேடார் ஃப்ரேம் சேசிஸில்தான் தயாரிக்கப்பட்டு வருகிறது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 2021 மாடலில் இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அதிகப்பட்சமாக 158 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 மாடலை காட்டிலும் உயரம் அதிகம் கொண்டதாக தோற்றமளிக்கும் புதிய ஸ்கார்பியோவின் கேபின் கருப்பு- பழுப்பு என்ற இரு நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2021 எக்ஸ்யூவி500-இல் வழங்கப்பட்டுள்ளதுபோல் இதில் மெர்சிடிஸ் கார்களுக்கு இணையான தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை எதிர்பார்க்க முடியாது.

ஆனால் பல-வண்ணங்களில் வேகமானி வழங்கப்படலாம். புதிய ஸ்கார்பியோ 7 பேர் அமரக்கூடிய வாகனமாக வெளிவரவிருந்தாலும், இந்த குறிப்பிட்ட சோதனை மாதிரியில் மூன்றாவது இருக்கை வரிசை இல்லை. அனைத்து விதமான சாலைக்கும் ஏற்ற வாகனமாக விளங்கும் மஹிந்திரா ஸ்கார்பியோ புதிய தலைமுறை அப்கிரேடினால் வாடிக்கையாளர்கள் பலரது தேர்வாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.