புதிய ஸ்கோடா ஆக்டேவியா இந்தியாவில் சோதனை!! இன்னும் சில வாரங்களில் விற்பனையில்...

உலகளவில் பிரபலமான ஸ்கோடா கார்களுள் ஒன்றான ஆக்டேவியாவின் நான்காம் தலைமுறை கார் ஒன்று சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

புதிய ஸ்கோடா ஆக்டேவியா இந்தியாவில் சோதனை!! இன்னும் சில வாரங்களில் விற்பனையில்...

இந்தியாவில் அவ்ரங்காபாத்தில் உள்ள தொழிற்சாலையில் இந்த ஸ்கோடா செடான் காரின் தயாரிப்புகள் பணிகள் சமீபத்தில் தான் துவங்கப்பட்டன. அதனை தொடர்ந்து தற்போது இந்த சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதிய ஸ்கோடா ஆக்டேவியா இந்தியாவில் சோதனை!! இன்னும் சில வாரங்களில் விற்பனையில்...

நவி மும்பை பகுதியில் நடத்தப்பட்டுள்ள இந்த சோதனை ஓட்டத்தில் புதிய தலைமுறை ஆக்டேவியா கார் மறைப்புகளால் மறைக்கப்படவில்லை. டீம் பிஎச்பி செய்திதளம் மூலம் கிடைத்துள்ள ஸ்பை படங்களில் புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரின் பின்பகுதியை மட்டுமே பார்க்க முடிகிறது.

புதிய ஸ்கோடா ஆக்டேவியா இந்தியாவில் சோதனை!! இன்னும் சில வாரங்களில் விற்பனையில்...

புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரின் அறிமுகம் இந்த ஏப்ரல் மாத இறுதியில் எதிர்பார்க்கப்படுகிறது. எம்க்யுபி ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய ஆக்டேவியா ஸ்கோடாவின் லேட்டஸ்ட் டிசைன் மொழியினை ஏற்றுள்ளது.

புதிய ஸ்கோடா ஆக்டேவியா இந்தியாவில் சோதனை!! இன்னும் சில வாரங்களில் விற்பனையில்...

முதல் ஸ்கோடா ஆக்டேவியா இந்தியாவில் 2002ல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே ஆக்டேவியா கார்களுக்கான வரவேற்பு இந்தியாவில் நல்லப்படியாகவே இருந்து வந்தது. ஆனால் 2012க்கு பின் வாடிக்கையாளர்களின் கவனம் எஸ்யூவி கார்களின் பக்கம் விழ துவங்கியது.

புதிய ஸ்கோடா ஆக்டேவியா இந்தியாவில் சோதனை!! இன்னும் சில வாரங்களில் விற்பனையில்...

இதனால் ஆக்டேவியாவின் விற்பனை சிறிது தடுமாறினாலும், உடனடியாக ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் 2013ல் மூன்றாம் தலைமுறை ஆக்டேவியாவை அறிமுகப்படுத்தியது. அதன்பின் ஆக்டேவியா கார்களின் விற்பனை சற்று வேகமெடுத்தது.

புதிய ஸ்கோடா ஆக்டேவியா இந்தியாவில் சோதனை!! இன்னும் சில வாரங்களில் விற்பனையில்...

ஆற்றல்மிக்க என்ஜின்களினாலும், விசாலமான உட்புறத்தினாலும் ஆக்டேவியாவின் விற்பனை ஓரளவிற்கு நல்லப்படியாக உள்ளது. இதனை அதிகரிக்கும் நோக்கில் தான் புதிய நான்காம் தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா விற்பனைக்கு வரவுள்ளது.

புதிய ஸ்கோடா ஆக்டேவியா இந்தியாவில் சோதனை!! இன்னும் சில வாரங்களில் விற்பனையில்...

2019ல் 10 தலைமுறை ஹோண்டா சிவிக் காரின் வருகைக்கு முன்பு வரையில் ஆக்டேவியா கார்களின் விற்பனை மிக நன்றாக இருந்தது. புதிய ஆக்டேவியா பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் உடன் விற்பனை செய்யப்பட உள்ளது.

புதிய ஸ்கோடா ஆக்டேவியா இந்தியாவில் சோதனை!! இன்னும் சில வாரங்களில் விற்பனையில்...

அதிகப்பட்சமாக 190 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் மட்டுமின்றி, 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் தேர்விலும் ஐரோப்பிய சந்தைகளில் ஸ்கோடா ஆக்டேவியா விற்பனை செய்யப்படுகிற்து.

புதிய ஸ்கோடா ஆக்டேவியா இந்தியாவில் சோதனை!! இன்னும் சில வாரங்களில் விற்பனையில்...

ஆனால் இரண்டாவது பெட்ரோல் என்ஜின் தேர்வு இந்திய வருகைக்கு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. புதிய ஆக்டேவியா தற்போதைய ஆக்டேவியாவை காட்டிலும் சுமார் 19மிமீ நீளம் மற்றும் 15மிமீ அகலம் அதிகம் கொண்டதாக இருக்கும்.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
The Skoda Octavia has been spotted testing once again. This time however, spy pictures of the test mule show that the car is undisguised and it did not have any camouflage on it. This is the Fourth-generation Skoda Octavia and it is expected to be launched in India soon.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X