இந்தியாவில் போலோ காரை அப்கிரேட் செய்ய தயாராகும் ஃபோக்ஸ்வேகன்!! விலை எவ்வளவு நிர்ணயிக்கப்படலாம்?

போலோ ஹேட்ச்பேக் காரின் புதிய தலைமுறையை இந்திய சந்தைக்கு கொண்டுவர திட்டமிட்டு வருவதாக ஃபோக்ஸ்வேகன் பயணிகள் கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் இயக்குனர் அஷிஷ் குப்தா தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களையும், புதிய ஆறாம்-தலைமுறை போலோ காரை பற்றியும் தொடர்ந்து பார்ப்போம்.

இந்தியாவில் போலோ காரை அப்கிரேட் செய்ய தயாராகும் ஃபோக்ஸ்வேகன்!! விலை எவ்வளவு நிர்ணயிக்கப்படலாம்?

இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் ஐந்தாம் தலைமுறை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக விற்பனையில் உள்ளது. இதனால் இந்த ஹேட்ச்பேக் கார் புதிய தலைமுறை அப்கிரேடை பெறுவதற்கு இது சரியான நேரமே.

இந்தியாவில் போலோ காரை அப்கிரேட் செய்ய தயாராகும் ஃபோக்ஸ்வேகன்!! விலை எவ்வளவு நிர்ணயிக்கப்படலாம்?

ஆறாம் தலைமுறை ஃபோக்ஸ்வேகன் போலோ கடந்த 2017ல் உலகளாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போதைய ஐந்தாம் தலைமுறை போலோ பழைய பிக்யு25 ப்ளாட்ஃபாரத்தை சார்ந்தது ஆகும். ஆனால் புதிய போலோ, எம்க்யுபி ஏ0 கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் போலோ காரை அப்கிரேட் செய்ய தயாராகும் ஃபோக்ஸ்வேகன்!! விலை எவ்வளவு நிர்ணயிக்கப்படலாம்?

சர்வதேச ஆறாம் தலைமுறை போலோவின் நீளம் 4,05மிமீ-ஆக உள்ளது. ஆனால் இந்தியாவில் மற்ற கார்களுடன் போட்டியிடுவதற்காக 4 மீட்டருக்கும் குறைவான நீளத்திலேயே இந்த புதிய தலைமுறை கார் கொண்டுவரப்படுவதற்கு வாய்ப்புள்ளது. இந்திய சந்தைக்கான தங்களது எம்க்யுபி ஏ0 இன் ப்ளாட்ஃபாரத்தில் இதற்கான தேர்வு உள்ளதாகவும் அஷிஷ் குப்தா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் போலோ காரை அப்கிரேட் செய்ய தயாராகும் ஃபோக்ஸ்வேகன்!! விலை எவ்வளவு நிர்ணயிக்கப்படலாம்?

போலோ ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் முக்கியமான தயாரிப்பு வாகனம் என்றாலும், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றப்படி தங்களை எஸ்யூவி வாகனங்களுக்கு மாற்றி வருவதாகவும் கூறியுள்ள குப்தா, எஸ்யூவி கார்களை உருவாக்குவதில் தான் தங்களது முதல் நோக்கம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் போலோ காரை அப்கிரேட் செய்ய தயாராகும் ஃபோக்ஸ்வேகன்!! விலை எவ்வளவு நிர்ணயிக்கப்படலாம்?

இதன்படி இந்தியாவில் நான்கு புதிய எஸ்யூவி கார்களை இந்த ஆண்டிற்குள் அறிமுகப்படுத்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தயாராகி வருகிறது. இதில் டிகுவான், டைகுன் உள்ளிட்டவை அடங்குகின்றன. இவை எல்லாம் அறிமுகமான பின்பு, எஸ்யூவி தத்துவத்தில் வெற்றியடைந்த பின்பு மற்ற வாய்ப்புகளை நிச்சயம் பார்ப்போம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் போலோ காரை அப்கிரேட் செய்ய தயாராகும் ஃபோக்ஸ்வேகன்!! விலை எவ்வளவு நிர்ணயிக்கப்படலாம்?

இதனால் எப்படியிருந்தாலும், புதிய தலைமுறை போலோ நம் நாட்டு சந்தையில் அறிமுகமாகுவதற்கு 2- 3 ஆண்டுகளாவிடும். அதற்குள் உலகளவில் ஏழாம்-தலைமுறை போலோ கார் கூட அறிமுகமாகிவிடலாம். யாருக்கு தெரியும், 2- 3 வருடங்கள் கழித்து நேரடியாக ஏழாம் தலைமுறை போலோ காரே இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படலாம்.

இந்தியாவில் போலோ காரை அப்கிரேட் செய்ய தயாராகும் ஃபோக்ஸ்வேகன்!! விலை எவ்வளவு நிர்ணயிக்கப்படலாம்?

இந்தியாவில் ஹேட்ச்பேக் கார்களின் விலைகளும் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன. புதிய தலைமுறைகளையும், முற்றிலும் புதிய அல்ட்ராஸ் போன்றவற்றையும் ப்ரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் கார்களாக தயாரிப்பு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன.

இந்தியாவில் போலோ காரை அப்கிரேட் செய்ய தயாராகும் ஃபோக்ஸ்வேகன்!! விலை எவ்வளவு நிர்ணயிக்கப்படலாம்?

அதாவது ஃபோக்ஸ்வேகன் போலோ முதன்முதலாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட சமயத்தில் இந்த கார் விலையுயர்ந்த ஹேட்ச்பேக் காராக பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது மற்ற ஹேட்ச்பேக் கார்களின் விலைகள் போலோவிற்கு இணையானதாகவே வந்துவிட்டன.

இந்தியாவில் போலோ காரை அப்கிரேட் செய்ய தயாராகும் ஃபோக்ஸ்வேகன்!! விலை எவ்வளவு நிர்ணயிக்கப்படலாம்?

தற்சமயம் போலோ கார்களில் விலைகள் இந்தியாவில் ரூ.6.17 லட்சத்தில் இருந்து ரூ.10.00 லட்சம் வரையில் உள்ளன. அதேநேரம் மாருதி பலேனோவின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.5.90 லட்சத்தில் இருந்து ரூ.9.10 லட்சம் வரையிலும், அல்ட்ராஸ் கார்களின் விலைகள் ரூ.5.70- ரூ.9.46 லட்சம் வரையிலும், ஹோண்டா ஜாஸ் கார்களின் விலைகள் ரூ.7.55- ரூ.9.79 லட்சம் வரையிலும் உள்ளன.

இந்தியாவில் போலோ காரை அப்கிரேட் செய்ய தயாராகும் ஃபோக்ஸ்வேகன்!! விலை எவ்வளவு நிர்ணயிக்கப்படலாம்?

ஹூண்டாய் மோட்டார்ஸின் ப்ரீமியம் ஹேட்ச்பேக் மாடலான ஐ20 கடந்த ஆண்டில் தான் புதிய தலைமுறைக்கு அப்கிரேட் செய்யப்பட்டது. இதன் விலைகள் ரூ.6.80 லட்சத்தில் இருந்து ரூ.10.75 லட்சம் வரையில் உள்ளன. புதிய தலைமுறை அப்கிரேடினால் மாதத்திற்கு கிட்டத்தட்ட 8 ஆயிரம் ஐ20 கார்களை ஹூண்டாய் நிறுவனத்தால் விற்பனை செய்ய முடிகிறது.

Most Read Articles

English summary
Next-gen Volkswagen Polo could be launched in India. Read Full Details In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X