நியோ இடி5 எலெக்ட்ரிக் கார் அறிமுகம்... ஒரு முறை சார்ஜ் செய்தால் எவ்ளோ கிமீ போகும் தெரியுமா? நம்பவே முடியல!

நியோ இடி5 எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நியோ இடி5 எலெக்ட்ரிக் கார் அறிமுகம்... ஒரு முறை சார்ஜ் செய்தால் எவ்ளோ கிமீ போகும் தெரியுமா? நம்பவே முடியல!

சீனாவை சேர்ந்த எலெக்ட்ரிக் கார் நிறுவனங்களில் ஒன்று நியோ. இந்த நிறுவனம் இடி5 (Nio ET5) என்ற எலெக்ட்ரிக் காரை வெளியிட்டுள்ளது. இது செடான் ரகத்தை சேர்ந்த எலெக்ட்ரிக் கார் ஆகும். நியோ இடி5 எலெக்ட்ரிக் செடான் காரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகள் 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளன.

நியோ இடி5 எலெக்ட்ரிக் கார் அறிமுகம்... ஒரு முறை சார்ஜ் செய்தால் எவ்ளோ கிமீ போகும் தெரியுமா? நம்பவே முடியல!

நியோ இடி5 எலெக்ட்ரிக் செடான் கார், டெஸ்லா மாடல் 3 எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக இருக்கும். நியோ இடி5 எலெக்ட்ரிக் செடான் காரின் முக்கியமான சிறப்பம்சமே அதன் ரேஞ்ச்தான். 75kWh (ஸ்டாண்டர்டு ரேஞ்ச்), 100kWh (லாங் ரேஞ்ச்) மற்றும் 150kWh (அல்ட்ராலாங் ரேஞ்ச்) என மொத்தம் 3 வகையான பேட்டரி தேர்வுகளுடன் நியோ இடி5 எலெக்ட்ரிக் செடான் கார் கிடைக்கும்.

நியோ இடி5 எலெக்ட்ரிக் கார் அறிமுகம்... ஒரு முறை சார்ஜ் செய்தால் எவ்ளோ கிமீ போகும் தெரியுமா? நம்பவே முடியல!

இதில், 75kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்ட ஸ்டாண்டர்டு ரேஞ்ச் மாடலை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 550 கிலோ மீட்டர்களுக்கும் மேல் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 100kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்ட லாங் ரேஞ்ச் மாடலை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 750 கிலோ மீட்டர்களுக்கும் மேல் பயணிக்க முடியும்.

நியோ இடி5 எலெக்ட்ரிக் கார் அறிமுகம்... ஒரு முறை சார்ஜ் செய்தால் எவ்ளோ கிமீ போகும் தெரியுமா? நம்பவே முடியல!

அதே சமயம் 150kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்ட அல்ட்ராலாங் ரேஞ்ச் மாடலை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 1,000 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமாக பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே மிகவும் சிறப்பான ரேஞ்ச் என்பதில் நமக்கு துளியும் சந்தேகமில்லை.

நியோ இடி5 எலெக்ட்ரிக் கார் அறிமுகம்... ஒரு முறை சார்ஜ் செய்தால் எவ்ளோ கிமீ போகும் தெரியுமா? நம்பவே முடியல!

நியோ இடி5 எலெக்ட்ரிக் செடான் காரின் அனைத்து மாடல்களிலும் ஸ்டாண்டர்டாக ட்யூயல் மோட்டார் கொடுக்கப்பட்டுள்ளது. நியோ இடி5 எலெக்ட்ரிக் செடான் காரின் முன் பக்க மோட்டார் 201 பிஹெச்பி பவரை உருவாக்கும். அதே நேரத்தில் இந்த காரின் பின் பக்க மோட்டார் கூடுதலாக 282 பிஹெச்பி பவரை உருவாக்க கூடியது.

நியோ இடி5 எலெக்ட்ரிக் கார் அறிமுகம்... ஒரு முறை சார்ஜ் செய்தால் எவ்ளோ கிமீ போகும் தெரியுமா? நம்பவே முடியல!

ஒட்டுமொத்தமாக பார்த்தால் இந்த காரின் பவர் அவுட்புட் 483 பிஹெச்பி ஆகும். அதே சமயம் இந்த கார் 700 என்எம் டார்க் திறனை உருவாக்கும் வல்லமை வாய்ந்தது. இடி5 எலெக்ட்ரிக் செடான் கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 4.3 வினாடிகளில் எட்டி விடும் என நியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

நியோ இடி5 எலெக்ட்ரிக் கார் அறிமுகம்... ஒரு முறை சார்ஜ் செய்தால் எவ்ளோ கிமீ போகும் தெரியுமா? நம்பவே முடியல!

ஆனால் இடி5 எலெக்ட்ரிக் செடான் காரின் டாப் ஸ்பீடு எவ்வளவு? என்பதை நியோ நிறுவனம் தெரிவிக்கவில்லை. நியோ இடி5 எலெக்ட்ரிக் செடான் காரின் உட்புறத்தில் செங்குத்தாக நிலைநிறுத்தப்பட்ட சென்ட்ரல் இன்போடெயின்மெண்ட் டிஸ்ப்ளே இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் இந்த எலெக்ட்ரிக் காரின் பெரும்பாலான அம்சங்களை கட்டுப்படுத்த முடியும்.

நியோ இடி5 எலெக்ட்ரிக் கார் அறிமுகம்... ஒரு முறை சார்ஜ் செய்தால் எவ்ளோ கிமீ போகும் தெரியுமா? நம்பவே முடியல!

இதுதவிர 10.2 இன்ச் ஹெச்டிஆர் டிரைவர் டிஸ்ப்ளேவையும், நியோ இடி5 எலெக்ட்ரிக் செடான் கார் பெற்றுள்ளது. இந்த காரை செலுத்துவதற்கு தேவையான அனைத்து தகவல்களையும் டிரைவருக்கு இது வழங்குகிறது. மேலும் 256 கலர் ஆம்பியண்ட் லைட்டிங்கையும் நியோ இடி5 எலெக்ட்ரிக் செடான் கார் பெற்றுள்ளது.

Most Read Articles

English summary
Nio et5 ev unveiled here are all the details
Story first published: Tuesday, December 21, 2021, 23:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X