Just In
- 1 hr ago
ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?
- 9 hrs ago
பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க!! புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது!!
- 11 hrs ago
200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? டாப்-10 பைக்குகள் இதோ...
- 14 hrs ago
பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு
Don't Miss!
- News
மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு
- Sports
ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்!
- Movies
இப்படியா போடுவீங்க? பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்!
- Finance
எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!
- Lifestyle
கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
காரின் விலையை அப்படியே கேஷ்பேக்காக தரப்போறாங்களாம்... நிஸான் அதிரடி அறிவிப்பு... இன்னும் பல சர்ப்ரைஸ் இருக்கு!
பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான நிஸான் காதலர் தின ஸ்பெஷல் லக்கி டிராவ் போட்டி பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

பிப்ரவரி 14 (நாளை) காதலர் தினம் கொண்டாட இருக்கும் அனைவருக்கும் எங்களுடைய வாழ்த்துக்கள். இந்த நாள் முரட்டு சிங்கிள்களுக்கு வேண்டுமானாலும் பிடிக்காத நாளாக இருக்கலாம், ஆனால் காதல் ஜோடிகள் மத்தியில் இது ஓர் புனித நாளாகவே பார்க்கப்படுகின்றது. மேலும், இந்த நாளில் தங்களின் ஜோடிக்கு ஆச்சரிய பரிசையும் அவர்கள் வழங்கி வருகின்றனர்.

இதுபோன்ற தங்களின் காதலன்-காதலியை ஆச்சரிய பரிசால் மகிழ்விக்கும் நபர்களுக்கு உதவும் விதமாக பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் நிஸான் சிறப்பு திட்டம் ஒன்றை தொடங்கியிருக்கின்றது. இதற்காக லக்கி டிராவ் போட்டி ஒன்றை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில், வெற்றி பெறும் வெற்றியாளருக்கு 100 சதவீத கேஷ்பேக் வழங்கப்பட இருக்கின்றது. அதாவது, காரை வாங்கிய எக்ஸ்-ஷோரூம் விலையை அப்படியே கேஷ்பேக் திட்டத்தின்கீழ் வழங்க திட்டமிட்டிருக்கின்றது. இது காரை இலவசமாக வழங்குவதற்கு சமம். இந்த சிறப்பு பரிசை ஒரு வாடிக்கையாளருக்கு மட்டும் வழங்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

இதேபோன்று, போட்டியில் தேர்வு செய்யப்படும் 8 வாடிக்கையாளர்களுக்கு அடுத்து வரும் வேரியண்டை இலவசமாக அப்கிரேட் செய்து கொள்ளும் வாய்ப்பை நிஸான் வழங்க இருக்கின்றது. தொடர்ந்து, மூன்றாவதாக 25 வாடிக்கையாளர்களுக்கு 1 வருட கூட்டப்பட்ட வாரண்டியையும், நான்காவதாக 66 வாடிக்கையாளர்களுக்கு 2 வருடம் அல்லது 20 ஆயிரம் கிமீ மெயின்டெனன்ஸ் பேக்கேஜை இலவசமாக வழங்கும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இவையனைத்தையும் நிறுவனம் லக்கி டிராவ் போட்டி மூலம் தேர்வு செய்யப்படும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்த போட்டிக்கான விண்ணப்பம் பிப்ரவரி 12ம் தேதியில் இருந்தே டீலர்கள் வாயிலாக பெறப்பட்டு வருகின்றன. இவர்களில் இருந்தே சுமார் 100 பேர் தேர்வு செய்யப்பட்டு, மேற்கூறிய சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன.

அதேசமயம், இந்த சலுகையானது நிஸான் நிறுவனத்தின் மலிவு விலை காரான மேக்னைட் மாடலை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். இவர்களுக்காக மட்டுமே இந்த பிரத்யேக லக்கி டிராவ் போட்டியை நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்த புதுமுக காருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

வெறும் 30 நாட்களில் 32,800க்கும் அதிகமான யூனிட்டுகளுக்கான புக்கிங் கிடைக்கப்பெற்றது. இந்த கார் டிசம்பர் மாதம்தான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது என்பது குறிப்பிடத்தகுந்தது. அதிகப்படியான புக்கிங் காரணத்தினால் நிஸான் நிறுவனம் கூடுதலாக பணியாளர்களை நியமித்து கார் உற்பத்தியை அதிகரிக்கச் செய்திருக்கின்றது.

ஆகையால், அதிகளவு புக்கிங்கால் ஏற்பட்டிருக்கும் காத்திருப்பு காலம் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காரின் ஆரம்பநில தேர்வின் விலை ரூ. 5.49 லட்சம் ஆகும். இதன் உயர்நிலை மாடலின் விலை ரூ. 9.59 லட்சம் ஆகும். இவையிரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது.