Just In
- 4 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 6 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 7 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 7 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மலிவு விலை காரின் விலையை உயர்த்தியது நிஸான்... எவ்வளவு உயர்த்தியிருக்கு தெரியுமா?.. ஷாக்காயிடாதீங்க!!
நிஸான் நிறுவனம் அதன் மலிவு விலை காரான மேக்னைட்டின் விலையை தற்போது உயர்த்தியுள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

நிஸான் நிறுவனத்தின் புதுமுக காராக மேக்னைட் இருக்கின்றது. இக்காரை கடந்த டிசம்பர் மாதம் 2ம் தேதி அன்றே நிறுனம் இந்தியாவில் விற்பனக்கு அறிமுகப்படுத்தியது. இக்காருக்கு அறிமுக விலையாக ரூ. 4.99 லட்சம் என்ற விலை அது நிர்ணயித்தது. இத்தகைய மிக குறைந்த விலையின் காரணமாக ஹேட்ச்பேக் கார்களுக்கே டஃப் கொடுக்கின்ற வகையில் மேக்னைட் அமோகமான புக்கிங்கைப் பெற்றது.

vஇந்த நிலையிலேயே மேக்னைட் காரின் விலையை ஐம்பதாயிரம் ரூபாய் வரை நிஸான் உயர்த்தியிருக்கின்றது. இதனால் ரூ. 4.99 லட்சமாக இருந்த நிஸான் மேக்னைட் காரின் ஆரம்ப விலை தற்போது ரூ. 5.49 ஆயிரமாக மாறியிருக்கின்றது. இது நிஸான் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்த விலையுயர்வு திடீரென செய்யப்பட்டது அல்ல. ஏற்கனவே இதுகுறித்து நிஸான் நிறுவனம் தகவல் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது. அறிமுகத்தை முன்னிட்டே ரூ. 4.99 லட்சம் நிர்ணயித்தாக அது கூறியிருந்தது. மேலும், ஜனவரி 1ம் தேதி முதல் இதன் விலையை உயர்த்த இருப்பதாக கூறியிருந்தது.

இந்த நிலையிலேயே திட்டமிட்டபடி காரின் விலை தற்போது உயர்த்தப்பட்டிருக்கின்றது. காரின் புதிய விலையை புகைப்படப்பமாக கீழே காணலாம்.

நிஸான் மேக்னைட் கார் ஒட்டுமொத்தமாக 20 வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில் ஆரம்பநிலை வேரியண்டின் விலை மட்டுமே உயர்த்தப்பட்டிருக்கின்றது. ஆமாங்க, ரூ. 50 ஆயிரம் விலையுயர்வு நிஸான் மேக்னைட்டின் ஆரம்ப நிலை தேர்வான எக்ஸ்இ-க்கு மட்டுமே பொருந்தும்.

ஆகையால், பிற தேர்வுகள் அனைத்தும் அதன் பழைய விலையிலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றது. மறு அறிவிப்பு வரும் வரை அவற்றின் விலையை உயர்த்த வேண்டாம் என நிஸான் நிர்வாகம் விற்பனையாளர்களுக்கு கூறியுள்ளது. தற்போது நிஸான் மேக்னைட் காருக்கு நல்ல டிமாண்ட் நிலவி வருவதை அடுத்தே இந்த முடிவை நிஸான் எடுத்திருக்கின்றது.

விலையுயர்வு காரின் புக்கிங்கில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தி விடக் கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 32,800 யூனிட் நிஸான் மேக்னைட் கார்களுக்கான புக்கிங் கிடைத்திருப்பதாக நிஸான் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதவிர 1,80,000 ஆயிரம் பேர் கார் பற்றி விசாரித்திருப்பதாகவும் அது தகவல் வெளியிட்டிருக்கின்றது.

இந்த அமோக புக்கிங்கைத் தொடர்ந்து 1000 பணியாளர்களை கூடுதலாக நியமிக்க நிஸான் திட்டமிட்டுள்ளது. அதிக புக்கிங்கின் காரணமாக தற்போது நிஸான் மேக்னைட் காரை புக் செய்வோர் 2 முதல் 3 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகின்றது. இதனைக் குறைக்கும் நோக்கிலும் ஆயிரம் பணியாளர்களை நியமிக்க நிஸான் திட்டமிட்டிருக்கின்றது.