நிஸான் வெளியிட்ட வெற்றியாளர்கள் பட்டியல்... 100 சதவீத கேஷ்பேக்கை வென்ற அதிர்ஷ்டசாலி யார்?.. இதோ முழு விபரம்!

காதலர் தினத்தை முன்னிட்டு நடைபெற்று வரும் லக்கி டிராவ் போட்டியின் முதல் மாத வெற்றியாளர்கள் பட்டியலை நிஸான் நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இப்போட்டியில் தேர்வு செய்யப்படும் 100 வெற்றியாளர்களுக்கு, அவர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் வெவ்வேறு விதமான சிறப்பு சலுகைகள் அல்லது பரிசுகள் வழங்கப்படும் என நிறுவனம் அறிவித்திருந்தது. மாதம் 100 பேர் என மூன்று மாதங்களுக்கு நடைபெறும் இப்போட்டியின் முதல் மாத (மார்ச்) வெற்றியாளர்களின் பெயர் பட்டியலை நிஸான் நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது.

நிஸான் வெளியிட்ட வெற்றியாளர்கள் பட்டியல்... 100 சதவீத கேஷ்பேக்கை வென்ற அதிர்ஷ்டசாலி யார்?.. இதோ முழு விபரம்!

நிஸான் நிறுவனத்தின் லக்கி டிராவ் போட்டியின் முக்கிய அம்சங்கள்:

1 வாடிக்கையாளருக்கு அப்படியே எக்ஸ்-ஷோரூம் விலை முழுவதுமாக (100%) கேஷ்பேக்

8 வாடிக்கையாளர்களுக்கு ஒரு வேரியண்டை இலவசமாக அப்கிரேட் செய்துகொள்ளும் வாய்ப்பு

25 வாடிக்கையாளர்களுக்கு 1 ஆண்டு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம்

66 வாடிக்கையாளர்களுக்கு 2 ஆண்டுகள் / 20 ஆயிரம் கிமீ பராமரிப்பு தொகுப்பு இலவசம். இந்த சலுகைகளை நிறுவனம் அறிவித்திருந்தது.

நிஸான் வெளியிட்ட வெற்றியாளர்கள் பட்டியல்... 100 சதவீத கேஷ்பேக்கை வென்ற அதிர்ஷ்டசாலி யார்?.. இதோ முழு விபரம்!

இதில், 100 சதவீத கேஷ்பேக்கை உபி மாநிலத்தின், காஸியாபாத்தைச் சேர்ந்த சவுரப் பட்டாச்சார்யா எனும் நபர் வென்றிருப்பதாக நிறுவனம் அறிவித்திருக்கின்றது. இவரே, தான் செலுத்திய காரின் எக்ஸ்-ஷோரூம் விலையை அப்படியே 100 சதவீதம் கேஷ்பேக்காக திரும்பப் பெற இருக்கின்றார்.

நிஸான் வெளியிட்ட வெற்றியாளர்கள் பட்டியல்... 100 சதவீத கேஷ்பேக்கை வென்ற அதிர்ஷ்டசாலி யார்?.. இதோ முழு விபரம்!

இவரைத் தொடர்ந்து, அடுத்த வேரியண்டை அப்கிரேட் செய்யும் வாய்ப்பை மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த பிரேம் சிங் ஹர்வன்ஸி, பரய்லியைச் சேர்ந்த ராமன் சிங், அவுரங்காபாத்தைச் சேர்ந்த கணேஷ் தோய்போட், மொஹலியைச் சேர்ந்த பசந்த் குமார் பன்சால், பெங்களூருவைச் சேர்ந்த கோகுல்நாத் ஜெயக்குமார், தெலங்கானாவைச் சேர்ந்த மொஹ்ஸின் ஷரீஃப், ஹைதராபாத்தைச் சேர்ந்த அஹமத் ஷெய்க் மற்றும் மேற்கு கோதாவரியைச் சேர்ந்த மந்தா பிரமாநந்தா ராவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.

நிஸான் வெளியிட்ட வெற்றியாளர்கள் பட்டியல்... 100 சதவீத கேஷ்பேக்கை வென்ற அதிர்ஷ்டசாலி யார்?.. இதோ முழு விபரம்!

அடுத்தடுத்த வெற்றியாளர்களின் பெயர் பற்றிய தகவல்களும்ம் நிஸான் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலை தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதுபோன்றே அடுத்து வரும் இரு மாதங்களுக்கான வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட இருக்கின்றது.

நிஸான் வெளியிட்ட வெற்றியாளர்கள் பட்டியல்... 100 சதவீத கேஷ்பேக்கை வென்ற அதிர்ஷ்டசாலி யார்?.. இதோ முழு விபரம்!

நிஸான் மேக்னைட் கார் தற்போது ரூ. 5.49 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த அறிமுகத்தின்போது ரூ. 4.99 லட்சம் மிக குறைந்த விலையிலேயே விற்பனைக்கு அறிமுகமானது. அறிமுக சிறப்பு கொண்டாட்டமாக இந்த குறைந்த விலையில் மேக்னைட் களமிறக்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. மிகக் குறைந்த விலை மற்றும் அதிக சிறப்பம்சங்கள் ஆகியவற்றை இக்கார் கொண்டிருந்த காரணத்தினால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

நிஸான் வெளியிட்ட வெற்றியாளர்கள் பட்டியல்... 100 சதவீத கேஷ்பேக்கை வென்ற அதிர்ஷ்டசாலி யார்?.. இதோ முழு விபரம்!

மேக்னைட் கார் 1.0 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்ட் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் ஆகிய இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், நேட்சுரல்லி அஸ்பயர்ட் எஞ்ஜின் அதிகபட்சமாக 72 பிஎஸ் மற்றும் 96 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடியது. டர்போசார்ஜட் எஞ்ஜின் 99பிஎஸ் மற்றும் 160 என்எம் டார்க்கை வெளியேற்றும். இந்த எஞ்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

நிஸான் வெளியிட்ட வெற்றியாளர்கள் பட்டியல்... 100 சதவீத கேஷ்பேக்கை வென்ற அதிர்ஷ்டசாலி யார்?.. இதோ முழு விபரம்!

ஆனால், நேட்சுரல்லி அஸ்பயர்ட் எஞ்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே கிடைக்கின்றது. இக்காரை சிஎம்எஃப்-ஏ+ பிளாட்பாரத்தில் வைத்தே நிஸான் நிறுவனம் உற்பத்தி செய்து வருகின்றது. இதே பிளாட்பாரத்தைப் பயன்படுத்தியே ரெனால்டின் கைகர் மற்றும் ட்ரைபர் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan Announced Valentine’s Day Lucky Draw Program Winners Details. Read In Tamil.
Story first published: Tuesday, March 16, 2021, 10:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X