Just In
- 1 hr ago
உலகின் முதல் லிடார் தொழில்நுட்பம் கொண்ட மின்சார கார்... இது எந்த நாட்டின் நிறுவன தயாரிப்பு தெரியுமா?
- 1 hr ago
மெர்சிடிஸின் அடுத்த எலக்ட்ரிக் செடான்... இக்யுஎஸ்!! 700கிமீ ரேஞ்ச் உடன் தயாரிப்பு!
- 2 hrs ago
குட் நியூஸ்... சென்னையில் விற்பனைக்கு வருகிறது பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
- 3 hrs ago
செம்ம டிமேண்ட்! உற்பத்தியைவிட தேவை பல மடங்கு அதிகரிப்பு! க்ரெட்டா எஸ்யூவிக்கு தொடரும் பிரமாண்ட எதிர்பார்ப்பு!!
Don't Miss!
- News
சென்னை புதுவரவுக்கு கண்டிப்பாக அமைச்சரவையில் இடம் தரக் கூடாது- திமுகவில் இப்பவே அதிரிபுதிரி மோதல்
- Sports
குறி வைத்த கோலி.. தமிழக வீரரை இந்திய அணிக்கு தட்டி தூக்க ரெடி.. முதல் "பவர்-ஹிட்டர்" பேட்ஸ்மேன்!
- Lifestyle
செட்டிநாடு பீன்ஸ் காலிஃப்ளவர் பொரியல்
- Finance
16% சம்பள உயர்வு, 5 நாள் வேலை.. 1.14 லட்சம் எல்ஐசி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!
- Movies
விவேக் பெயரில் குழப்பிய மும்பை ஊடகங்கள்.. பதறியடித்து டிவிட்டிய பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தண்ணீரை மிச்சப்படுத்துங்க! நாங்க இலவசமா ஃபோம் வாஷ் செய்றோம்... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட பிரபல கார் நிறுவனம்!
பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்று இலவசமாக ஃபோம் வாஷ் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

உயிர் வாழ்வதற்கான அத்தியாவசிய தேவைகளில் தண்ணீரும் ஒன்று. எனவேதான், 'நீரின்றி அமையாது உலகு' எனும் குறளை வள்ளுவன் இந்த உலகிற்கு அப்போதே படைத்து சென்று விட்டார். இருப்பினும், தன்னுடைய சுய லாபத்திற்காக நீர் நிலைகள் அனைத்தையும் மாசுபடுத்தி வருகின்றது மனித இனம்.

இத்தகைய நிலையைப் போக்கி தண்ணீரின் அவசதியத்தை உணர்த்த வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22ம் தேதி 'உலக தண்ணீர் தினம்(ஆக) அனுசரிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில், இன்று உலக தண்ணீர் தினம் ஆகும். இந்த நாளில் தண்ணீரின் தேவையை உணர்த்தும் வகையில் நிஸான் நிறுவனம் சிறப்பு சேவை ஒன்றை அறிவித்திருக்கின்றது.

தண்ணீர் அதிகம் இல்லா வாகனம் கழுவும் சேவையை இலவசமாக வழங்க இருப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு 45 சதவீதத்திற்கும் குறைவான தண்ணீர் இருந்தாலே போதுமானது. இத்தகைய ஃபோம்களைக் கொண்டே வாகனங்களைக் கழுவ இருப்பதாக நிஸான் கூறியுள்ளது.

ஃபோம்களைக் கொண்டு வாகனங்களைக் கழுவுவதன் வாயிலாக, தண்ணீரைக் கொண்டு கழுவுவதைக் காட்டிலும் அதிக சுத்தமான தோற்றத்தைப் பெற முடியும். இதனால் காரின் பெயிண்ட் பூச்சிற்கு பக்க விளைவு எதுவும் ஏற்படாது. அதேசமயம், அதிக பளப்பளப்பு மற்றும் மினுமினுப்பைப் பெற முடியும்.

இத்தகைய ஃபோம் வாஷையே நிஸான் மற்றும் டட்சன் ஆகிய இரு நிறுவனங்களும் தங்களின் கார் விற்பனையாளர்கள் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. ஃபோம் வாஷ் செய்வதன் மூலம் வாகனங்களைக் கழுவுவதற்காக செலவு செய்யப்படும் பல லட்சம் நீர் வீணாவது தவிர்க்கப்படும்.

எனவேதான் ஃபோம் வாஷினை சூழலுக்கு உகந்த தொழில்நுட்பம் என வாகனத்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த முறை முதன்முறையாக 2014ம் ஆண்டிலேயே நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால், இதுவரை சுமார் 15 மில்லியன் லிட்டர் தண்ணீரை நிஸான் சேமித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

ஒரு காரை கழுவி முடிப்பதற்கு சுமார் 162 லிட்டர் நீர் தேவைப்படுமாம். இதன்படி கணக்கிட்டால் நாள் ஒன்றிற்கு சுமார் 86,400 லிட்டர் வரை தண்ணீரை நிஸான் சேமித்துள்ளது. அதேசமயம், தண்ணீர் கொண்டு கழுவுவதைக் காட்டிலும் அதிக தூய்மை தன்மையை நிறுவனம் கொடுத்திருக்கின்றது.

இந்த நிலையிலேயே இத்தனை நாட்களாக கட்டணத்தின் வாயிலாக வழங்கி வந்த ஃபோம் வாஷ் சேவையினை உலக தண்ணீர் தினத்தை இலவசமாக குறிப்பிட்ட நாட்களுக்கு வழங்க நிஸான் மற்றும் டட்சன் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த சலுகை இன்று நாள் மட்டுமே என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இச்சேவையைப் பெற நேரடியாக ஷோரூமை அணுக வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

நிஸான் நிறுவனம், மிக சமீபத்தில் இந்தியாவை அதகளப்படுத்தும் வகையில் மேக்னைட் காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது மிகக் குறைந்த விலைக் கொண்ட காராகும். இதுதவிர, இக்கார் அதிக பாதுகாப்பு திறன் கொண்ட காரும்கூட. அண்மையில் இக்காரை கிராஷ் டெஸ்ட் செய்ததில், ஐந்திற்கு 4 நட்சத்திர ரேட்டிங்கைப் பெற்றது. இதனைத் தொடர்ந்தே இக்கார் நல்ல பாதுகாப்பு திறன்மிக் கார் என்ற பட்டத்தைச் சூடியது.

தொடர்ந்து, இதன் மலிவு விலையின் காரணமாகவும் இந்தியர்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பைப் பெற தொடங்கியிருக்கின்றது. இதனால், இக்காருக்கு நாட்டிந் பல்வேறு பகுதிகளில் 1.5 மாதங்கள் தொடங்கி 2.5 மாதங்கள் வரையில் காத்திருக்கும் சூழல் உருவாகியிருக்கின்றது.