Just In
- 5 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 6 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 7 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 8 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மேக்னைட் காருக்கு உச்சகட்ட வரவேற்பு... காத்திருப்பு காலத்தை குறைப்பதற்காக நிஸான் அதிரடி நடவடிக்கை...
மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவியின் காத்திருப்பு காலத்தை குறைப்பதற்காக நிஸான் நிறுவனம் புதிதாக பணியாளர்களை பணியமர்த்தி வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. எனவே இந்த செக்மெண்ட்டில் அனைத்து நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு புதிய கார்களை அறிமுகம் செய்து வருகின்றன. ஏற்கனவே மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகிய கார்கள் இந்த செக்மெண்ட்டில் பிரபலமாக உள்ளன.

இந்த வரிசையில் கியா சொனெட் மற்றும் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவின் ரீ-பேட்ஜ் வெர்ஷனான டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஆகிய கார்கள் கடந்த 2020ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. இதுதவிர நிஸான் மேக்னைட் காரும் கடந்த டிசம்பர் 2ம் தேதி இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நிஸான் மேக்னைட் காருக்கு தற்போது அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. வெறும் 4.99 லட்ச ரூபாய் என்ற அறிமுக சலுகை விலையில் (எக்ஸ் ஷோரூம்) விற்பனைக்கு கொண்டு வரப்பட்டதே இதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. விலையை குறைவாக நிர்ணயம் செய்ததற்காக நிஸான் நிறுவனம் வசதிகளில் குறை வைக்கவில்லை.

எனவே நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவியை இந்திய வாடிக்கையாளர்கள் போட்டி போட்டு கொண்டு முன்பதிவு செய்து வருகின்றனர். நிஸான் நிறுவனம் எதிர்பார்த்ததை விட மேக்னைட் காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் மறுபக்கம் இதன் விளைவாக நிஸான் மேக்னைட் காருக்கு காத்திருப்பு காலம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

காரை டெலிவரி பெறுவதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்தால், வாடிக்கையாளர்களின் ஆர்வம் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் அவர்கள் முன்பதிவை ரத்து செய்து விட்டு, வேறு கார்களுக்கும் மாறக்கூடும். ஆனால் அப்படி நடந்து விடக்கூடாது என்பதில் நிஸான் இந்தியா நிறுவனம் உறுதியாக உள்ளது.

மேக்னைட் காரின் காத்திருப்பு காலத்தை 2 முதல் 3 மாதங்களாக குறைப்பதற்காக, தனது தொழிற்சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை புதிதாக பணியமர்த்தும் பணிகளில் நிஸான் இந்தியா நிறுவனம் தற்போது ஈடுபட்டு வருகிறது. அந்த நிறுவனம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள பத்திரிக்கை குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 2ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, நிஸான் மேக்னைட் காருக்கு 32,800க்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளதாகவும் அந்த பத்திரிக்கை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் 1.80 லட்சத்திற்கும் மேற்பட்டோர் காரை வாங்குவது குறித்து விசாரித்துள்ளனர்.

இதுகுறித்து நிஸான் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தலைவர் சினன் ஓஸ்கோக் கூறுகையில், 2 முதல் 3 மாதங்கள் என்ற குறுகிய காத்திருப்பு காலம் மூலமாக எங்களது வாடிக்கையாளர்களின் திருப்தியை மேம்படுத்துவதுதான் எங்களது முயற்சி. உற்பத்தி மற்றும் டெலிவரி திறனை அதிகரிக்க வேண்டுமென்றால், கூடுதல் பணியாளர்கள் தேவை.

எனவே எங்களது தொழிற்சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை பணியமர்த்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்'' என்றார். இதுதவிர டீலர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் முயற்சிகளையும் நிஸான் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்திய சந்தையில் நிஸான் நிறுவனத்திற்கு மேக்னைட் புதிய இன்னிங்ஸை தொடங்கி வைத்துள்ளது என்று சொல்வது மிகையாகாது.