இந்திய சந்தைக்காக புதிய எம்பிவி காரை தயாரிக்கிறதா நிஸான்? எப்போது அறிமுகமாகும்?

இந்திய சந்தைக்கான புதிய, மலிவான 7-இருக்கை எம்பிவி காரை நிஸான் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றியும், இந்திய சந்தையில் எம்பிவி கார்களுக்கு இடையேயுள்ள போட்டியினை பற்றியும் இனி செய்தியில் விரிவாக பார்ப்போம்.

இந்திய சந்தைக்காக புதிய எம்பிவி காரை தயாரிக்கிறதா நிஸான்? எப்போது அறிமுகமாகும்?

கடந்த ஆண்டு டிசம்பரில் நிஸான் இந்தியா நிறுவனம் மேக்னைட் காம்பெக்ட் எஸ்யூவி காரை சந்தையில் அறிமுகப்படுத்தி இருந்தது. நிஸானின் புதிய இன்னிங்ஸ் போல் அமைந்த மேக்னைட்டின் அறிமுகம் இந்த ஜப்பானிய பிராண்டிற்கு பலத்தரப்பட்ட மக்கள் மத்தியில் இருந்து வரவேற்பை பெற்று தந்துள்ளது.

இந்திய சந்தைக்காக புதிய எம்பிவி காரை தயாரிக்கிறதா நிஸான்? எப்போது அறிமுகமாகும்?

மேக்னைட்டின் மூலமாக நிஸானின் கார்கள் விற்பனை நம் நாட்டில் சற்று மேம்பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் இந்த காம்பெக்ட் எஸ்யூவி காரை போன்று விற்பனையை அதிகரிக்கும் வகையில் முற்றிலும் இந்திய வாடிக்கையாளர்களின் இரசனைக்கு மற்றும் இந்திய சாலைகளுக்கு ஏற்ற மாடல்களை களமிறக்க நிஸான் திட்டமிட்டுள்ளது.

இந்திய சந்தைக்காக புதிய எம்பிவி காரை தயாரிக்கிறதா நிஸான்? எப்போது அறிமுகமாகும்?

நமக்கு கிடைத்துள்ள சமீபத்திய தகவல்களின்படி, நிஸான் இந்திய சந்தைக்காக புதியதாக 3-இருக்கை வரிசை எம்பிவி காரை தயாரித்து வருகிறது. இதுதவிர்த்து இந்த புதிய நிஸான் எம்பிவி காரை பற்றிய மற்ற விபரங்கள் தற்போதைக்கு ரகசியமாக பாதுகாக்கப்படுகின்றன. விற்பனையில் உள்ள ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி காரை உருவாக்க பயன்படுத்தப்பட்ட சிஎம்எஃப்-ஏ ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் இந்த புதிய எம்பிவி காரையும் நிஸான் வடிவமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தைக்காக புதிய எம்பிவி காரை தயாரிக்கிறதா நிஸான்? எப்போது அறிமுகமாகும்?

மேக்னைட்டில் வழங்கப்படுகின்ற அதே 1.0 லி நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் & 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் தேர்வுகள் தான் இந்த புதிய நிஸான் எம்பிவி காரிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம். அதேபோல் டிரான்ஸ்மிஷனுக்கு மேனுவல் & ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படலாம்.

இந்திய சந்தைக்காக புதிய எம்பிவி காரை தயாரிக்கிறதா நிஸான்? எப்போது அறிமுகமாகும்?

7-இருக்கை மாடலாக வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படும் நிஸானின் இந்த புதிய எம்பிவி காரிலும் ட்ரைபரில் வழங்கப்படும் அதே 'ஈஸிஃபிக்ஸ்' வசதி கொடுக்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த வசதி ஆனது காரின் உட்புறத்தில் மூன்றாவது இருக்கை வரிசையை 50:50 என்கிற விகிதத்தில் பிரித்து கொள்ள அனுமதிக்கிறது. இவ்வளவு ஏன், மூன்றாவது இருக்கை வரிசையை முழுவதுமாக கூட நீக்கி கொள்ளலாம்.

இந்திய சந்தைக்காக புதிய எம்பிவி காரை தயாரிக்கிறதா நிஸான்? எப்போது அறிமுகமாகும்?

இதன்மூலமாக உட்புறத்தில் பொருட்களை வைத்து செல்ல பெரிய அளவில் இட வசதி கிடைக்கும். நிஸானின் இந்த புதிய எம்பிவி காரின் விலை ரூ.10 லட்சத்தில் நிர்ணயிக்கப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிஸானின் இந்திய கார்கள் வரிசையில் மற்றுமொரு மலிவான காராக கொண்டுவரப்பட்டாலும், இந்த புதிய கார் தற்போதைய ரெனால்ட் ட்ரைபர் மற்றும் டட்சன் கோ ப்ளஸ் கார்களை காட்டிலும் ப்ரீமியம் தரத்தில் விளங்கவுள்ளது.

இந்திய சந்தைக்காக புதிய எம்பிவி காரை தயாரிக்கிறதா நிஸான்? எப்போது அறிமுகமாகும்?

மேலும் இந்த விலையினால் மாருதி சுஸுகி எர்டிகா & எக்ஸ்.எல்6 கார்களுக்கு நேரடி போட்டி மாடலாக இந்த புதிய நிஸான் எம்பிவி கார் இருக்கும். இந்தியாவின் சிறந்த விற்பனை எம்பிவி காராக விளங்கும் மாருதி எர்டிகாவிற்கு போட்டியளிக்கும் விதத்தில் ஏகப்பட்ட நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை சந்தையில் களமிறக்க தயாராகி வருகின்றன.

இந்திய சந்தைக்காக புதிய எம்பிவி காரை தயாரிக்கிறதா நிஸான்? எப்போது அறிமுகமாகும்?

இந்த வகையில், தென்கொரியாவை சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான கியாவும் விரைவில் அதன் புதிய எம்பிவி காராக கரென்ஸை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி உள்ளது. இது மாருதி எர்டிகாவிற்கு பிரீமியம் மாற்று மாடலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரென்ஸை உருவாக்க பயன்படுத்தப்பட்ட ப்ளாட்ஃபாரத்தை பயன்படுத்தி மற்றொரு தென்கொரிய நிறுவனமான ஹூண்டாயும் தனது பிராண்டில் ஒரு எம்பிவி காரை உருவாக்கும் என தெரிகிறது.

இந்திய சந்தைக்காக புதிய எம்பிவி காரை தயாரிக்கிறதா நிஸான்? எப்போது அறிமுகமாகும்?

அதேநேரம் மாருதி சுஸுகி நிறுவனமும் எர்டிகாவின் பிரீமியம் வேரியண்ட்டாக விளங்கும் எக்ஸ்.எல்6-இன் புதிய தலைமுறை மாடலை வடிவமைக்க தயாராகி வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருந்தன. 2018இல் மாருதி நிறுவனம் இரண்டாம் தலைமுறை எர்டிகா எம்பிவி காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. தோற்றத்தில் மட்டுமில்லாமல், காரின் தொழிற்நுட்ப அம்சங்களிலும் குறிப்பிடத்தக்க அளவில் அப்டேட்கள் கொண்டுவரப்பட்டிருந்ததால் எர்டிகாவின் விற்பனை அதன்பின்பே வேகமெடுக்க ஆரம்பித்தது.

இந்திய சந்தைக்காக புதிய எம்பிவி காரை தயாரிக்கிறதா நிஸான்? எப்போது அறிமுகமாகும்?

அளவில் பெரியதாக இருப்பினும், மலிவான விலையில் விற்பனை செய்யப்படுவதே எர்டிகாவின் ஹைலைட்டாக விளங்குகிறது. இருப்பினும் பிரிமீயம் தர வாடிக்கையாளர்களை கவரும் பொருட்டு எக்ஸ்.எல்6 காரினை விற்பனைக்கு மாருதி சுஸுகி கொண்டுவந்தது. சரி மீண்டும் நிஸானின் புதிய எம்பிவி காருக்கு வருவோம், இந்த காரின் அறிமுக தேதி எதையும் தற்போதைக்கு உறுதியாக கூற முடியவில்லை.

Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan is developing new 3 row mpv for india report
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X