சென்னையில் தயாராகிறது... உற்பத்தியில் புதிய மைல்கல்லை எட்டியது நிஸான் மேக்னைட்... என்னனு தெரியுமா?

நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி உற்பத்தியில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சென்னையில் தயாராகிறது... உற்பத்தியில் புதிய மைல்கல்லை எட்டியது நிஸான் மேக்னைட்... என்னனு தெரியுமா?

இந்திய சந்தையில் நிஸான் நிறுவனத்திற்கு மேக்னைட் புத்துயிர் கொடுத்துள்ளது. விற்பனை சிறப்பாக இல்லாத காரணத்தால், நிஸான் நிறுவனம் இந்திய சந்தையை விட்டு வெளியேறக்கூடும் என்ற பேச்சு ஒரு சமயத்தில் இருந்தது. அப்படிப்பட்ட ஒரு சூழலில், இந்திய சந்தையில் நிஸான் நிறுவனத்திற்கு கடைசி நம்பிக்கையாக வந்ததுதான் மேக்னைட்.

சென்னையில் தயாராகிறது... உற்பத்தியில் புதிய மைல்கல்லை எட்டியது நிஸான் மேக்னைட்... என்னனு தெரியுமா?

உண்மையில் இந்திய சந்தையில் நிஸான் நிறுவனத்தை மேக்னைட் காப்பாற்றியுள்ளது. ஒரு சமயத்தில் நிஸான் நிறுவனம் இந்திய சந்தையில் மாதத்திற்கு சில நூறு கார்களை மட்டுமே விற்பனை செய்து கொண்டிருந்தது. ஆனால் தற்போது ஒரு மாதத்திற்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கு மேக்னைட்தான் காரணம்.

சென்னையில் தயாராகிறது... உற்பத்தியில் புதிய மைல்கல்லை எட்டியது நிஸான் மேக்னைட்... என்னனு தெரியுமா?

தற்போது நிஸான் மேக்னைட் காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரு சில வேரியண்ட்களுக்கு 10 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் நிலவி வருகிறது. சென்னைக்கு அருகே ஒரகடம் பகுதியில் உள்ள ஆலையில்தான் நிஸான் மேக்னைட் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

சென்னையில் தயாராகிறது... உற்பத்தியில் புதிய மைல்கல்லை எட்டியது நிஸான் மேக்னைட்... என்னனு தெரியுமா?

இந்த தொழிற்சாலை பத்தாயிரமாவது நிஸான் மேக்னைட் காரை தற்போது உற்பத்தி செய்துள்ளது. இதே ஆலையில்தான் ரெனால்ட் நிறுவன கார்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே நிஸான் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் இந்திய சந்தையில் 4,012 கார்களை விற்பனை செய்துள்ளது.

சென்னையில் தயாராகிறது... உற்பத்தியில் புதிய மைல்கல்லை எட்டியது நிஸான் மேக்னைட்... என்னனு தெரியுமா?

ஆனால் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் நிஸான் நிறுவனம் இந்தியாவில் 825 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் விற்பனையில் 826 சதவீத வளர்ச்சியை நிஸான் நிறுவனம் பதிவு செய்துள்ளது. இதற்கு மேக்னைட்தான் மிக முக்கியமான காரணம். ஆனால் நடப்பாண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிட்டால், நிஸான் நிறுவனத்தின் விற்பனை சரிந்துள்ளது.

சென்னையில் தயாராகிறது... உற்பத்தியில் புதிய மைல்கல்லை எட்டியது நிஸான் மேக்னைட்... என்னனு தெரியுமா?

ஏனெனில் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் நிஸான் நிறுவனம் 4,244 கார்களை விற்பனை செய்திருந்தது. இது 5.47 சதவீத வீழ்ச்சியாகும். நிஸான் மேக்னைட் கார், சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார் ஆகும். மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட கார்களுடன் நிஸான் மேக்னைட் போட்டியிட்டு வருகிறது.

சென்னையில் தயாராகிறது... உற்பத்தியில் புதிய மைல்கல்லை எட்டியது நிஸான் மேக்னைட்... என்னனு தெரியுமா?

இதுதவிர புதிதாக விற்பனைக்கு வந்துள்ள ரெனால்ட் கைகர் காருக்கும் நிஸான் மேக்னைட் சவால் அளித்து வருகிறது. பல்வேறு புதிய கார்களின் வருகையால், இந்தியாவில் சமீப காலமாக சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் போட்டி அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே ஏற்கனவே விற்பனையில் உள்ள கார்கள் கடுமையான சவாலை சந்தித்து வருகின்றன.

சென்னையில் தயாராகிறது... உற்பத்தியில் புதிய மைல்கல்லை எட்டியது நிஸான் மேக்னைட்... என்னனு தெரியுமா?

இதனை உணர்ந்து கொண்ட மாருதி சுஸுகி நிறுவனம் விட்டாரா பிரெஸ்ஸாவின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதுதவிர விட்டாரா பிரெஸ்ஸாவை விட குறைவான விலையில் புதிய சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார் ஒன்றை, மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
Nissan Magnite Compact SUV Crosses 10,000-unit Production Milestone - Here Are The Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X