Just In
- 4 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 5 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 6 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 7 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விலை மிகவும் குறைவு என்பதால் கடும் போட்டி... 2020ம் ஆண்டில் அதிகம் முன்பதிவு செய்யப்பட்ட கார் நிஸான் மேக்னைட்?
நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி காருக்கு இந்திய சந்தையில் உச்சகட்ட வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் நிஸான் மேக்னைட் மிக சிறப்பான துவக்கம் கண்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி இந்த காம்பேக்ட் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. விற்பனைக்கு வந்தது முதல், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகளை நிஸான் மேக்னைட் குவித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ஈடி ஆட்டோ செய்தி வெளியிட்டுள்ளது.

அதாவது விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது முதல் ஒவ்வொரு நாளும் சராசரியாக நிஸான் மேக்னைட் காருக்கு 1,000 முன்பதிவுகள் குவிந்துள்ளன. இந்த 30 ஆயிரம் முன்பதிவுகள் என்பது கடந்த டிசம்பர் 31ம் தேதி மாலை நிலவரப்படி கிடைத்துள்ள எண்ணிக்கையாகும். இறுதி நிலவரம் இன்னும் வெளியாகவில்லை. இறுதி நிலவரப்படி முன்பதிவு எண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்கலாம் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிஸான் மேக்னைட் கார் 4.99 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற அறிமுக சலுகை விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. டிசம்பர் 31ம் தேதி வரை மட்டுமே இந்த விலையில் முன்பதிவு செய்ய முடியும் என விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட சமயத்திலேயே தெரிவிக்கப்பட்டது. டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு, அதாவது 2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் விலை உயர்ந்து விடும் எனவும் அப்போதே அறிவிக்கப்பட்டது.

எனவே விலை உயர்வை தவிர்த்து அறிமுக சலுகை விலையிலேயே வாங்க வேண்டும் என்பதற்காக கடைசி நேரத்தில் பலர் போட்டி போட்டு கொண்டு நிஸான் மேக்னைட் காரை முன்பதிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கடைசி இரண்டு வார கால அளவில் அதிகப்படியான முன்பதிவுகள் குவிந்ததாக கூறப்படுகிறது.

இந்தியா முழுவதும் கடைசி சில நாட்களில் நிஸான் மேக்னைட் காருக்கு உச்சகட்ட தேவை இருந்த காரணத்தால், ஒரு சில டீலர்கள் புதிய முன்பதிவுகளை ஏற்பதை முற்றிலுமாக நிறுத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2020ம் ஆண்டின் கடைசி நாளில், அதாவது அறிமுக சலுகை விலை காலம் முடிவதற்கு முன்னதாக வாடிக்கையாளர்கள் போட்டி போட்டு கொண்டு முன்பதிவு செய்ததாகவும் நிஸான் டீலர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

எனவே டிசம்பர் 31ம் தேதி ஒரே நாளில் மட்டும் நிஸான் மேக்னைட் காருக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அனேகமாக 2020ம் ஆண்டில் அதிகம் முன்பதிவு செய்யப்பட்ட காராக நிஸான் மேக்னைட் இருக்க கூடும் என ஆட்டோமொபைல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

ஆனால் நாம் ஏற்கனவே கூறியபடி இறுதி நிலவரம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இறுதி நிலவரம் வெளியாகும்போது, இது குறித்த தகவல்கள் நமக்கு உறுதியாக தெரியவரும். உச்சகட்ட வரவேற்பு கிடைத்துள்ளதால், நிஸான் நிறுவனம் மேக்னைட் காரின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி இந்தியாவில் நிஸான் நிறுவனத்திற்கு புதிய இன்னிங்ஸை தொடங்கி வைத்துள்ளது என்றே சொல்லலாம். கியா சொனெட், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட காம்பேக்ட் எஸ்யூவி கார்களுடன் நிஸான் மேக்னைட் போட்டியிட்டு வருகிறது.