Just In
- 2 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 3 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 4 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 5 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஸ்டைலில் மட்டுமில்லை, பாதுகாப்பிலும் இது பெஸ்ட்!! பாதுகாப்பு சோதனையில் 4 நட்சத்திரங்களை அள்ளிய நிஸான் மேக்னைட்
இந்திய சந்தையில் மிக சமீபத்தில் அறிமுகமான நிஸானின் மேக்னைட் காம்பெக்ட்-எஸ்யூவி காரின் ஆசிய என்சிஏபி மோதல் சோதனைகளின் முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்னதாக வெளிவந்துள்ளது. அதனை பற்றியும் இந்த நிஸான் கார் எந்த அளவிற்கு பாதுகாப்பானது என்பதை பற்றியும் இந்த செய்தியில் பார்ப்போம்.

அனைவரையும் கவரும் விதமாக மிகவும் குறைவாக நிர்ணயிக்கப்பட்ட ஆரம்ப விலையினால் நிஸான் மேக்னைட்டிற்கான முன்பதிவுகள் ஒரு பக்கம் குவிந்து வருகிறது. இதற்கிடையில் ஆசிய என்சிஏபி மோதல் சோதனையில் மேக்னைட்டை நிஸான் ஈடுப்படுத்தியுள்ளது.

இந்த சோதனையில் ஒட்டு மொத்தமாக 4- நட்சத்திரங்களை மேக்னைட்டிற்கு ஆசியன்-என்சிஏபி அமைப்பு வழங்கியுள்ளது. ஆனால் பாதுகாப்பு அளவீடுகள் மோதல் சோதனை வாரியாக தற்போதைக்கு நமக்கு கிடைக்க பெறவில்லை, விரைவில் வெளியாகலாம்.

முழு 5 நட்சத்திரங்களுக்கு வெறும் 1 நட்சத்திரம் மட்டுமே குறைவாக 4 நட்சத்திரங்களை பெற்றுள்ளதால் இந்த சோதனைகளில் அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாக நிஸான் மேக்னைட் செயல்பட்டிருக்கும். ஆசியன்-என்சிஏபி மோதல் சோதனைகளில் காரின் வேகம் கிட்டத்தட்ட உலகளாவிய என்சிஏபி சோதனையை ஒத்திருக்கிறது.

இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் மேக்னைட்டை வெளிநாட்டு சந்தைகளுக்காக அனுப்பி வைக்கும் பணியினை இன்னும் நிஸான் நிறுவனம் துவங்கவில்லை. இதனால் இந்தியாவில் விற்பனையில் உள்ள மேக்னைட் மாடல்தான் ஆசிய என்சிஏபி சோதனையில் உட்படுத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியர்கள் எப்போதுமே காரின் பாதுகாப்பு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடியவர்கள். அப்படியிருக்க, ஆசியன்-என்சிஏபி மோதல் சோதனையில் 4-நட்சத்திரங்களை பெற்றுள்ளதால் மேக்னைட்டின் விற்பனை வரும் வாரங்களில் இன்னும் சூடுப்பிடிக்கும்.

நிஸான் மேக்னைட்டில் பாதுகாப்பு அம்சங்களாக எல்இடி தரத்தில் ஹெட்லேம்ப்கள், 8-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், சுற்றிலும் விளக்குகள், இரட்டை காற்றுப்பைகள், ஏபிஎஸ், இபிடி, வாகன டைனாமிக் கண்ட்ரோல், ட்ராக்ஷன் கண்ட்ரோல், 360 டிகிரி பார்க்கிங் கேமிரா மற்றும் பின்பக்க ஜன்னல் டிஃபாக்கர் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

ரூ.4.99 லட்சம் என்ற மிகவும் குறைவான எக்ஸ்ஷோரூம் விலையில் மேக்னைட் அறிமுகமாகி இருந்தாலும், இதன் ஆரம்ப விலை இந்த ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து சற்று அதிகப்படுத்தப்பட உள்ளது. அதிகப்பட்சமாக ரூ.9.59 லட்சம் விலை வரையில் இந்த நிஸான் கார் விற்பனைக்கு கிடைக்கிறது.

1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் 3-சிலிண்டர் பெட்ரோல் மற்றும் டர்போ-பெட்ரோல் என்ற இரு விதமான என்ஜின் தேர்வுகளில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றுடன் ட்ரான்ஸ்மிஷன் தேர்வாக 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும், டர்போ பெட்ரோல் என்ஜினிற்கு மட்டும் கூடுதல் தேர்வாக சிவிடி கியர்பாக்ஸும் வழங்கப்படுகின்றன.