தலைசுற்ற வைக்கும் விலையில் இந்தோனிஷியாவில் அறிமுகமானது நிஸான் மேக்னைட்!! இந்தியாவில் எவ்ளவோ பரவாயில்லை

கடந்த டிசம்பர் மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகமான நிஸான் மேக்னைட் காம்பெக்ட் எஸ்யூவி கார் இந்தோனிஷியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அங்கு இந்த காரில் எதாவது மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதா என்பதை இந்த செய்தியில் பார்ப்போம்.

தலைசுற்ற வைக்கும் விலையில் இந்தோனிஷியாவில் அறிமுகமானது நிஸான் மேக்னைட்!! இந்தியாவில் எவ்ளவோ பரவாயில்லை

இந்தியாவில் போட்டி மிகுந்த காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் நிலைநிறுத்தப்பட்ட நிஸான் மேக்னைட் நம் நாட்டில் எக்ஸ்இ, எக்ஸ்எல், எக்ஸ்வி, எக்ஸ்வி ப்ரீமியம் மற்றும் எக்ஸ்வி ப்ரீமியம் (O) என்ற ஐந்து விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.

தலைசுற்ற வைக்கும் விலையில் இந்தோனிஷியாவில் அறிமுகமானது நிஸான் மேக்னைட்!! இந்தியாவில் எவ்ளவோ பரவாயில்லை

ஆனால் இந்தோனிஷியாவில் இந்த கார் மேக்னைட் அப்பர் மற்றும் மேக்னைட் ப்ரீமியம் என்ற 2 ட்ரிம் நிலைகளில் மட்டும்தான் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோல் பெட்ரோல் மற்றும் டர்போ பெட்ரோல் என்ற இரு விதமான என்ஜின் தேர்வுகளில் நம் நாட்டு சந்தையில் இந்த கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தலைசுற்ற வைக்கும் விலையில் இந்தோனிஷியாவில் அறிமுகமானது நிஸான் மேக்னைட்!! இந்தியாவில் எவ்ளவோ பரவாயில்லை

ஆனால் இந்தோனிஷியாவில் ஒரே ஒரு டர்போ பெட்ரோல் என்ஜின் தேர்வில் மட்டும்தான் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த டர்போ என்ஜின் அதிகப்பட்சமாக 100 பிஎச்பி மற்றும் 160 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

தலைசுற்ற வைக்கும் விலையில் இந்தோனிஷியாவில் அறிமுகமானது நிஸான் மேக்னைட்!! இந்தியாவில் எவ்ளவோ பரவாயில்லை

இருப்பினும் இந்த என்ஜின் உடன் இந்தியாவை போல் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் எக்ஸ்-ட்ரோனிக் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது மேக்னைட் அப்பர் ட்ரிம்-ஐ பெறுபவர்கள் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் தேர்வை மட்டும் பெறுவார்கள்.

தலைசுற்ற வைக்கும் விலையில் இந்தோனிஷியாவில் அறிமுகமானது நிஸான் மேக்னைட்!! இந்தியாவில் எவ்ளவோ பரவாயில்லை

ஆனால் மேக்னைட் ப்ரீமியம் வேரியண்ட்டை வாங்குபவர்கள் மேனுவல், சிவிடி என்ற இரு ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளை பெறுவார்கள். இந்தோனிஷியாசில் நிஸான் மேக்னைட் அப்பர் வேரியண்ட்டின் விலை 208,800,000 இந்தோனிஷியா ரூபியாவாக (ரூ.10.74 லட்சம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தலைசுற்ற வைக்கும் விலையில் இந்தோனிஷியாவில் அறிமுகமானது நிஸான் மேக்னைட்!! இந்தியாவில் எவ்ளவோ பரவாயில்லை

அதாவது அங்கு மேக்னைட் காரை சொந்தமாக்க வேண்டும் என்றால் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக செலவழித்தாக வேண்டும். ஆனால் இந்தியாவில் நிஸான் மேக்னைட்டின் ஆரம்ப விலை அதில் பாதியாக ரூ.5 லட்சம் என்ற அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைசுற்ற வைக்கும் விலையில் இந்தோனிஷியாவில் அறிமுகமானது நிஸான் மேக்னைட்!! இந்தியாவில் எவ்ளவோ பரவாயில்லை

இந்த ரூ.5 லட்சம் அளவிலான விலை நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் மேக்னைட்டின் ஆரம்ப விலை ரூ.7 லட்சமாக இந்தியாவில் உள்ளது.

தலைசுற்ற வைக்கும் விலையில் இந்தோனிஷியாவில் அறிமுகமானது நிஸான் மேக்னைட்!! இந்தியாவில் எவ்ளவோ பரவாயில்லை

மேக்னைட் ப்ரீமியம் காரின் மேனுவல் ட்ரிம்மின் விலை இந்திய ரூபாயில் ரூ.11.34 லட்சமாகவும், சிவிடி ட்ரிம்மின் விலை அதிகப்பட்சமாக ரூ.12.28 லட்சமாகவும் உள்ளது. இந்தோனிஷியாவில் நிஸான் நிறுவனம் அதன் தொழிற்சாலையை 2020-லேயே மூடிவிட்டது.

தலைசுற்ற வைக்கும் விலையில் இந்தோனிஷியாவில் அறிமுகமானது நிஸான் மேக்னைட்!! இந்தியாவில் எவ்ளவோ பரவாயில்லை

இதனால் மேக்னைட் கார்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு அந்த நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. இந்தியாவில் முன்பதிவில் அதகளப்படுத்திவரும் மேக்னைட்டை மற்ற வெளிநாட்டு சந்தைகளுக்கும் அனுப்பி வைக்கவுள்ளதாக நிஸான் முன்பே கூறியிருந்தது இங்கு நினைவுக்கூரத்தக்கது.

Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan Magnite launched in Indonesia
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X