புதிய மேக்னைட் காரின் விலை கணிசமாக உயர்வு... வேரியண்ட் வாரியாக விலை உயர்வு விபரம்

ஸ்டைல், வசதிகள், விலை என அனைத்திலும் சிறந்த தேர்வாக உள்ள நிஸான் மேக்னைட் காரை புக்கிங் செய்ய காத்திருக்கிறீர்களா? உங்களுக்கு ஒரு கசப்பான செய்தி வந்துள்ளது. வேறு என்ன, விலை உயர்வுதான். இதுபற்றிய விரிவானத் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

 புதிய மேக்னைட் காரின் வேரியண்ட் வாரியாக விலை உயர்வு விபரம்

இந்தியாவின் சப்-காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் விலை குறைவான தேர்வாக களமிறக்கப்பட்ட நிஸான் மேக்னைட் கார் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த டிசம்பர் துவக்கத்தில் சந்தைக்கு கொண்டு வரப்பட்ட இந்த கார் ரூ.4.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் வந்தததால், சிறப்பான புக்கிங்கையும், விற்பனையையும் பதிவு செய்து வருகிறது. இதுவரை 40,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை இந்த கார் பெற்றுள்ளது.

 புதிய மேக்னைட் காரின் வேரியண்ட் வாரியாக விலை உயர்வு விபரம்

இந்த நிலையில், அறிமுகம் செய்யப்பட்டு ஒரு மாதத்திற்கு மட்டும் அறிமுகச் சலுகை விலையாக தெரிவிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜனவரியில் பேஸ் வேரியண்ட்டின் விலை மட்டுமே ரூ.50,000 அதிகரிக்கப்பட்டது. பிற வேரியண்ட்டுகளின் விலை அதிகரிக்கப்படவில்லை. இந்த நிலையில், மேக்னைட் காரின் டர்போ பெட்ரோல் மாடலின் விலை தற்போது உயர்த்தப்பட்டு இருக்கிறது.

 புதிய மேக்னைட் காரின் வேரியண்ட் வாரியாக விலை உயர்வு விபரம்

ஆனால், இதில் ஆறுதல் என்னவெனில், சாதாரண 1.0 லிட்டர் பெட்ரோல் மாடலின் விலை உயர்த்தப்படவில்லை. எனவே, மிக குறைவான பட்ஜெட்டில் இந்த காரை வாங்க இருப்போருக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், நிஸான் மேக்னைட் காரின் அதிகம் விற்பனையாகும் டர்போ பெட்ரோல் மாடலின் விலைதான் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, டர்போ பெட்ரோல் விலை அதிகபட்சமாக ரூ.30,000 உயர்த்தப்பட்டு இருக்கிறது.

 புதிய மேக்னைட் காரின் வேரியண்ட் வாரியாக விலை உயர்வு விபரம்

இது மேக்னைட் டர்போ பெட்ரோல் மாடலை வாங்குவோருக்கு இது கணிசமான விலை உயர்வுதான். எனினும், மேக்னைட் காரின் டாப் வேரியண்ட் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.10 லட்சத்திற்கு குறைவாகவே வைக்கப்பட்டு இருப்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

 புதிய மேக்னைட் காரின் வேரியண்ட் வாரியாக விலை உயர்வு விபரம்

நிஸான் மேக்னைட் காரின் சாதாரண பெட்ரோல் மாடல் எக்ஸ்இ, எக்ஸ்எல், எக்ஸ்வி, எக்ஸ்வி பி ஆகிய நான்கு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. ரூ.5.49 லட்சம் முதல் ரூ.7.55 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது. விலையில் எந்த மாற்றமும் இல்லை.

 புதிய மேக்னைட் காரின் வேரியண்ட் வாரியாக விலை உயர்வு விபரம்

டர்போ பெட்ரோல் எஞ்சின் மாடலானது ரூ.6.99 லட்சம் முதல் ரூ.9.45 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதாவது, ரூ.16,000 முதல் ரூ.30,000 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த டர்போ மாடல் இனி ரூ.7.29 லட்சம் முதல் ரூ.9.75 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.

Nissan Magnite New Prices Old Prices Price Hike
XL Turbo ₹7.29 Lakh ₹6.99 Lakh ₹30,000
XV Turbo ₹7.98 Lakh ₹7.82 Lakh ₹16,000
XV Turbo Premium O ₹8.85 Lakh ₹8.59 Lakh ₹26,000
XL Turbo CVT ₹8.19 Lakh ₹7.89 Lakh ₹30,000
XV Turbo CVT ₹8.88 Lakh ₹8.72 Lakh ₹16,000
XV Premium CVT O ₹9.75 Lakh ₹9.49 Lakh ₹26,000
 புதிய மேக்னைட் காரின் வேரியண்ட் வாரியாக விலை உயர்வு விபரம்

கடந்த மார்ச் 2ந் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே புக்கிங் செய்தவர்களுக்கு இந்த விலை உயர்வால் எந்த பிரச்னையும் இல்லை. புதிதாக முன்பதிவு செய்வோர் இந்த புதிய விலையிலேயே வாங்க முடியும்.

Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan has increased Magnite prices in India up to Rs. 30,000.
Story first published: Thursday, March 4, 2021, 11:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X