நிஸான் மேக்னைட் VS ரெனால்ட் கைகர்... இந்தியர்கள் எந்த காரை அதிகம் விரும்பி வாங்கறாங்க தெரியுமா?

இந்திய சந்தையில் கடந்த ஏப்ரல் மாத விற்பனையில் ரெனால்ட் கைகரை, நிஸான் மேக்னைட் வீழ்த்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நிஸான் மேக்னைட் VS ரெனால்ட் கைகர்... இந்தியர்கள் எந்த காரை அதிகம் விரும்பி வாங்கறாங்க தெரியுமா?

நிஸான் நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டின் கடைசியில் மேக்னைட் மூலமாக இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் நுழைந்தது. அதற்கு சிறிது காலத்திற்கு பிறகு ரெனால்ட் நிறுவனம் கைகர் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. தற்போதைய நிலையில் இந்த செக்மெண்ட்டில் இந்த இரண்டும்தான் விலை குறைவான கார்கள் ஆகும்.

நிஸான் மேக்னைட் VS ரெனால்ட் கைகர்... இந்தியர்கள் எந்த காரை அதிகம் விரும்பி வாங்கறாங்க தெரியுமா?

விலை குறைவு என்ற அம்சம் நிஸான் மற்றும் ரெனால்ட் ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஒவ்வொரு மாதமும் ஓரளவிற்கு சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்வதற்கு உதவி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் நிஸான் நிறுவனம் இந்திய சந்தையில் 2,904 மேக்னைட் கார்களை விற்பனை செய்துள்ளது. அதே சமயம் ரெனால்ட் நிறுவனம் 2,800 கைகர் கார்களை விற்பனை செய்துள்ளது.

நிஸான் மேக்னைட் VS ரெனால்ட் கைகர்... இந்தியர்கள் எந்த காரை அதிகம் விரும்பி வாங்கறாங்க தெரியுமா?

இதன் மூலம் ஏப்ரல் மாத விற்பனையில் ரெனால்ட் கைகர் காரை, நிஸான் மேக்னைட் வீழ்த்தியுள்ளது. நிஸான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் ஆகிய இரண்டு கார்களிலும், 1.0 லிட்டர் மூன்று-சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் என மொத்தம் 2 இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

நிஸான் மேக்னைட் VS ரெனால்ட் கைகர்... இந்தியர்கள் எந்த காரை அதிகம் விரும்பி வாங்கறாங்க தெரியுமா?

வசதிகளை பொறுத்தவரை நிஸான் மேக்னைட் காரில், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வசதிகளுடன் 8 இன்ச் டச்ஸ்க்ரீன், டிரைவிங் மோடுகள், ஆம்பியன்ட் லைட்டிங், கப் ஹோல்டர் மற்றும் மொபைல் ஹோல்டர்கள் உடன் ரியர் ஆர்ம்ரெஸ்ட், வயர்லெஸ் சார்ஜிங், ரியர் ஏசி வெண்ட்கள், ஏர் ப்யூரிஃபையர் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.

நிஸான் மேக்னைட் VS ரெனால்ட் கைகர்... இந்தியர்கள் எந்த காரை அதிகம் விரும்பி வாங்கறாங்க தெரியுமா?

மேலும் 7 இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோ க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், கனெக்டட் கார் தொழில்நுட்பம் மற்றும் புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் உள்ளிட்ட வசதிகளையும் நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி பெற்றுள்ளது. அதேபோல் ரெனால்ட் கைகர் காரிலும் ஏராளமான வசதிகள் வழங்கப்படுகின்றன.

நிஸான் மேக்னைட் VS ரெனால்ட் கைகர்... இந்தியர்கள் எந்த காரை அதிகம் விரும்பி வாங்கறாங்க தெரியுமா?

இதில், 7 இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், மூன்று டிரைவிங் மோடுகள், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி உடன் 8 இன்ச் டச்ஸ்க்ரீன், வயர்லெஸ் போன் சார்ஜர், ஏர் ப்யூரிஃபையர், ஆம்பியண்ட் லைட்டிங், க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோ க்ளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

நிஸான் மேக்னைட் VS ரெனால்ட் கைகர்... இந்தியர்கள் எந்த காரை அதிகம் விரும்பி வாங்கறாங்க தெரியுமா?

இந்திய சந்தையில், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, டொயோட்டா அர்பன் க்ரூஸர், கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட கார்களுடன், நிஸான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் ஆகிய இரண்டு காம்பேக்ட் எஸ்யூவிகளும் போட்டியிட்டு வருகின்றன.

நிஸான் மேக்னைட் VS ரெனால்ட் கைகர்... இந்தியர்கள் எந்த காரை அதிகம் விரும்பி வாங்கறாங்க தெரியுமா?

இந்திய சந்தையில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே அனைத்து நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு, இந்த செக்மெண்ட்டில் புதிய கார்களை அறிமுகம் செய்து வருகின்றன. இந்த வகையில் களமிறங்கிய நிஸான் மேக்னைட், ரெனால்ட் கைகர் ஆகிய கார்களால் இந்த செக்மெண்ட்டில் போட்டி அதிகரித்துள்ளது.

Most Read Articles
English summary
Nissan Magnite, Renault Kiger April 2021 Sales Report. Read in Tamil
Story first published: Friday, May 7, 2021, 19:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X