புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவிக்கு பெரும் தள்ளுபடி ஆஃபர்... மிஸ் பண்ணிடாதீங்க!

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவிக்கு பெரிய அளவிலான தள்ளுபடி ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆஃபர் பற்றிய முழுமையான விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

 புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவிக்கு பெரும் தள்ளுபடி ஆஃபர்... மிஸ் பண்ணிடாதீங்க!

இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் ஏராளமான தேர்வுகள் வந்துவிட்டன. ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ரெனோ டஸ்ட்டர், மாருதி எஸ் க்ராஸ், நிஸான் கிக்ஸ் என பல தேர்வுகள் உள்ளன. விரைவில் ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆகிய மாடல்களும் வர இருக்கின்றன.

 புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவிக்கு பெரும் தள்ளுபடி ஆஃபர்... மிஸ் பண்ணிடாதீங்க!

இதனால், இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட் அதிக சந்தைப் போட்டி கொண்டதாக மாறி இருக்கிறது. இந்த நிலையில், சந்தைப் போட்டியை சமாளிக்கும் வகையில், கிக்ஸ் எஸ்யூவிக்கு சிறப்புத் தள்ளுபடியை நிஸான் அறிவித்துள்ளது.

 புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவிக்கு பெரும் தள்ளுபடி ஆஃபர்... மிஸ் பண்ணிடாதீங்க!

மேலும், ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் சந்தையில் அதிக ஆதிக்கம் செலுத்தி வருவதால், வாடிக்கையாளர்களை கவரும் வகையில், கிக்ஸ் எஸ்யூவிக்கு இந்த சிறப்புத் தள்ளுபடியை வழங்குகிறது. அதாவது, புதிய கிக்ஸ் எஸ்யூவியை புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்கள், அதிகபட்சமாக ரூ.95,000 வரை தள்ளுபடி பெறும் வாய்ப்பு கொடுக்கப்பட உள்ளது.

 புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவிக்கு பெரும் தள்ளுபடி ஆஃபர்... மிஸ் பண்ணிடாதீங்க!

இதில், ரூ.25,000 நேரடி தள்ளுபடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பழைய காரை கொடுத்து புதிய நிஸான் கிக்ஸ் காரை வாங்குவோருக்கு ரூ.50,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸாக பெறும் வாய்ப்பு இருக்கிறது.

 புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவிக்கு பெரும் தள்ளுபடி ஆஃபர்... மிஸ் பண்ணிடாதீங்க!

தவிரவும், ஏற்கனவே நிஸான் கார் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு லாயல்டி போனஸாக ரூ.20,000 வரை பெறும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு எல்டிசி ஆஃபர் மூலமாக சேமிப்பு பெறும் வாய்ப்பும் இருக்கிறது. இந்த தள்ளுபடி, நிச்சயம் நிஸான் கிக்ஸ் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மதிப்பு மிக்கதாகவே இருக்கும்.

 புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவிக்கு பெரும் தள்ளுபடி ஆஃபர்... மிஸ் பண்ணிடாதீங்க!

அதேநேரத்தில், வரும் 31ந் தேதி வரை நிஸான் கிக்ஸ் எஸ்யூவியை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த சேமிப்புச் சலுகையை பெறும் வாய்ப்பு இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை அருகாமையிலுள்ள நிஸான் டீலரை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

 புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவிக்கு பெரும் தள்ளுபடி ஆஃபர்... மிஸ் பண்ணிடாதீங்க!

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி எக்ஸ்எல், எக்ஸ்வி, எக்ஸ்வி பிரிமீயம் மற்றும் எக்ஸ்வி பிரிமீயம் ஆப்ஷனல் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. இரண்டு விதமான பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. ரூ.9.49 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை முதல் கிடைக்கிறது.

Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan has offered heavy discount offers on Kicks SUV in India.
Story first published: Saturday, March 27, 2021, 13:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X