நிஸான் மேக்னைட்டில் புதிய எக்ஸ்வி எக்ஸிக்யூட்டிவ் வேரியண்ட்!! விரைவில் அறிமுகம், விபரங்கள் கசிந்தன

புதிய நிஸான் மேக்னைட் எக்ஸ்வி எக்ஸிக்யூட்டிவ் வேரியண்ட்டின் அறிமுகம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

நிஸான் மேக்னைட்டில் புதிய எக்ஸ்வி எக்ஸிக்யூட்டிவ் வேரியண்ட்!! விரைவில் அறிமுகம், விபரங்கள் கசிந்தன

இந்திய சந்தையில் நிஸான் மேக்னைட்டின் எக்ஸ்.எல் மற்றும் எக்ஸ்வி வேரியண்ட்களுக்கு மத்தியில் நிலைநிறுத்தப்பட உள்ள இந்த புதிய எக்ஸ்வி எக்ஸிக்யூட்டிவ் வேரியண்ட்டின் விலை எக்ஸ்.எல் வேரியண்ட்டின் விலையை காட்டிலும் ரூ.52,000 அளவில் அதிகமாக நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

நிஸான் மேக்னைட்டில் புதிய எக்ஸ்வி எக்ஸிக்யூட்டிவ் வேரியண்ட்!! விரைவில் அறிமுகம், விபரங்கள் கசிந்தன

இந்த கூடுதல் தொகைக்கு புதிய வசதிகளை வாடிக்கையாளர்கள் பெறலாம். இந்த கூடுதல் வசதிகள் அனைத்தும் வாடிக்கையாளர்களின் கருத்துகளை பொறுத்து வழங்கப்பட உள்ளதாம். இந்திய சந்தையில் சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்களுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து வருவது உங்களுக்கே நன்றாக தெரியும்.

நிஸான் மேக்னைட்டில் புதிய எக்ஸ்வி எக்ஸிக்யூட்டிவ் வேரியண்ட்!! விரைவில் அறிமுகம், விபரங்கள் கசிந்தன

இந்த போட்டியினை சமாளிக்கும் ஒரு பகுதியாகவே விரைவில் மேக்னைட் எக்ஸ்வி எக்ஸிக்யூட்டிவ் வேரியண்ட் கொண்டுவரப்படுகிறது. வெளிப்பக்கத்தில் நிஸான் மேக்னைட்டின் இந்த புதிய வேரியண்ட் 16-இன்ச் டைமண்ட்-கட் இரட்டை-நிற அலாய் சக்கரங்களையும், கதவுகளில் சில்வர் நிறத்திலான பக்கவாட்டு க்ளாடிங்கை பெற்றுவரவுள்ளது.

நிஸான் மேக்னைட்டில் புதிய எக்ஸ்வி எக்ஸிக்யூட்டிவ் வேரியண்ட்!! விரைவில் அறிமுகம், விபரங்கள் கசிந்தன

உட்புற கேபினில் பின் இருக்கை வரிசையில் கப் ஹோல்டர்களுடன் ஆர்ம்ரெஸ்ட், 60:40 என்ற விகிதத்தில் பிரிக்கக்கூடிய இருக்கை, உயரம் அட்ஜெஸ்ட்மெண்ட் வசதியுடன் ஓட்டுனர் இருக்கை, முன் இருக்கைகளின் பின்பக்கத்தில் பாக்கெட்கள் மற்றும் ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கைக்கான ஹேங்கர் உள்ளிட்டவற்றை இந்த புதிய மேக்னைட் காரில் எதிர்பார்க்கலாம்.

நிஸான் மேக்னைட்டில் புதிய எக்ஸ்வி எக்ஸிக்யூட்டிவ் வேரியண்ட்!! விரைவில் அறிமுகம், விபரங்கள் கசிந்தன

இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக புதிய 9-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் புதிய எக்ஸ்வி எக்ஸிக்யூட்டிவ் வேரியண்ட்டில் வழங்கப்பட உள்ளது. இது ஆண்ட்ராய்டு ஆட்டோ, நிலையான-அம்சமாக நாவிகேஷன், வயர் உடன்/ வயர் இல்லா வெளிப்புற கண்ணாடிகள் இணைப்பு மற்றும் பொழுதுப்போக்கு முதலிய அம்சங்களை வழங்கும்.

நிஸான் மேக்னைட்டில் புதிய எக்ஸ்வி எக்ஸிக்யூட்டிவ் வேரியண்ட்!! விரைவில் அறிமுகம், விபரங்கள் கசிந்தன

இவற்றுடன் ரிவர்ஸில் பார்க்கிங் செய்வதற்கு உதவியாக ரியர் பார்க்கிங் கேமிராவையும் இந்த புதிய வேரியண்ட்டில் நிஸான் நிறுவனம் வழங்கலாம். இவை தவிர்த்த மற்ற வசதிகள் அனைத்தும் நிஸானின் தற்போதைய எக்ஸ்.எல் ட்ரிம் நிலையில் இருந்து அப்படியே பகிர்ந்து வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிஸான் மேக்னைட்டில் புதிய எக்ஸ்வி எக்ஸிக்யூட்டிவ் வேரியண்ட்!! விரைவில் அறிமுகம், விபரங்கள் கசிந்தன

நிஸான் மேக்னைட் காம்பெக்ட் எஸ்யூவி காரின் உள்ளே பல-செயல்பாட்டு ஸ்டேரிங் சக்கரம், எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், பவர் ஜன்னல் கண்ணாடிகள், சாவியில்லா நுழைவு, பவர் பூட், பின்பக்க கண்ணாடிக்கும் வைபர் & டீஃபாக்கர் போன்றவை வழங்கப்படுகின்றன.

நிஸான் மேக்னைட்டில் புதிய எக்ஸ்வி எக்ஸிக்யூட்டிவ் வேரியண்ட்!! விரைவில் அறிமுகம், விபரங்கள் கசிந்தன

பயணிகளின் பாதுகாப்பிற்கு முன்பக்க இரட்டை காற்றுப்பைகள், இபிடி உடன் ஏபிஎஸ், ரிவர்ஸ் பார்க்கிங்கிற்கு சென்சார்கள் மற்றும் பவர் கதவு பூட்டுகள் உள்ளிட்டவை கொடுக்கப்படுகின்றன. இந்திய சந்தையில் மேக்னைட் இரு விதமான பெட்ரோல் என்ஜின் தேர்வுகளுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நிஸான் மேக்னைட்டில் புதிய எக்ஸ்வி எக்ஸிக்யூட்டிவ் வேரியண்ட்!! விரைவில் அறிமுகம், விபரங்கள் கசிந்தன

இதில் 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 71 பிஎச்பி மற்றும் 96 என்எம் டார்க் திறனையும், 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு என்ஜின் 99 பிஎச்பி மற்றும் 160 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன. இதில் நேச்சுரலி அஸ்பிரேட்டட் என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் மட்டுமே வழங்கப்படுகிறது.

நிஸான் மேக்னைட்டில் புதிய எக்ஸ்வி எக்ஸிக்யூட்டிவ் வேரியண்ட்!! விரைவில் அறிமுகம், விபரங்கள் கசிந்தன

அதுவே டர்போசார்ஜ்டு என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் & சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. ரெனால்ட் கிகரின் ஃப்ளாட்பாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் இந்த சப்காம்பெக்ட் க்ராஸ்ஓவரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.5.71 லட்சத்தில் இருந்து ரூ.10.15 லட்சம் வரையில் உள்ளன.

நிஸான் மேக்னைட்டில் புதிய எக்ஸ்வி எக்ஸிக்யூட்டிவ் வேரியண்ட்!! விரைவில் அறிமுகம், விபரங்கள் கசிந்தன

எக்ஸ்.இ, எக்ஸ்.எல், எக்ஸ்வி, எக்ஸ்வி பிரீமியம் மற்றும் எக்ஸ்வி பிரீமியம் (O) என்ற ஐந்து விதமான வேரியண்ட்களில் இந்த நிஸான் காம்பெக்ட் எஸ்யூவி கார் விற்பனை செய்யப்படுகிறது. விற்பனையில் இந்த நிஸான் காருக்கு ரெனால்ட் கிகர், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, மஹிந்திரா எக்ஸ்யூவி300, டாடா நெக்ஸான், கியா சொனெட் மற்றும் ஹூண்டாய் வென்யூ உள்ளிட்டவை போட்டியாக விளங்குகின்றன.

நிஸான் மேக்னைட்டில் புதிய எக்ஸ்வி எக்ஸிக்யூட்டிவ் வேரியண்ட்!! விரைவில் அறிமுகம், விபரங்கள் கசிந்தன

இதற்கிடையில் சமீபத்தில் ஜப்பானிய நிஸான் நிறுவனம் இந்திய சந்தையில் மேக்னைட்டின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை உயர்த்தி இருந்தது. இந்த ஆண்டிலேயே கடந்த ஜனவரி, மார்ச் மற்றும் ஜூலை மாதங்களை தொடர்ந்து இந்த அக்டோபர் மாத துவக்கத்தில் மேக்னைட் காம்பெக்ட் எஸ்யூவி காரின் விலைகள் ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.17 ஆயிரம் வரையில் உயர்த்தப்பட்டு இருந்தன.

Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan will launch new trim called XV Executive of Magnite.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X