இனி அரபு நாடுகளிடம் கையேந்தக்கூடாது... பயன்பாட்டிற்கு வரும் ஹைட்ரஜன் பஸ்கள்... . மத்திய அரசின் சூப்பர் திட்டம்

டெல்லி- ஜெய்ப்பூர் வழித்தடத்தில் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் மூலமாக இயங்கும் பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை தேசிய அனல்மின் நிறுவனம் சார்பில் செயல்படுத்தப்பட உள்ளது. இரு முக்கிய நகரங்களுக்கு இடையே நீண்டதூர வழித்தடத்தில் அறிமுகமாகும் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் பேருந்து திட்டமாகவும் இது குறிப்பிடப்படுகிறது.

டெல்லி - ஜெய்ப்பூர் இடையே ஹைட்ரஜனில் இயங்கும் பஸ்... காற்று மாசுபாட்டை குறைக்க மத்திய அரசின் சூப்பர் திட்டம்!

பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கு பெரும் சீர்கேடு ஏற்பட்டு வருவதுடன், கச்சா எண்ணெய் இறக்குமதியும் பெரிய பொருளாதார பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை மனதில் வைத்து, பெட்ரோல், டீசல் வாகனங்களை பயன்பாட்டில் இருந்து அப்புறப்படுத்துவதற்கான முயற்சிகளையும், திட்டங்களையும் மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், மாற்று எரிபொருள் வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கும் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மின்சார வாகனங்கள் சிறந்த தேர்வாக கருதப்படும் நிலையில், ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் வாகனங்களையும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன.

டெல்லி - ஜெய்ப்பூர் இடையே ஹைட்ரஜனில் இயங்கும் பஸ்... காற்று மாசுபாட்டை குறைக்க மத்திய அரசின் சூப்பர் திட்டம்!

இதன்படி, டெல்லி - ஜெய்ப்பூர் வழித்தடத்தில் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருளாக கொண்டு இயங்கும் பஸ்சை பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, மும்பையில் ஹைட்ரஜன் பஸ் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டாலும், முதல்முறையாக நீண்ட தூர வழித்தடத்திலும் இந்த பஸ் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

டெல்லி - ஜெய்ப்பூர் இடையே ஹைட்ரஜனில் இயங்கும் பஸ்... காற்று மாசுபாட்டை குறைக்க மத்திய அரசின் சூப்பர் திட்டம்!

'Go Electric' என்ற பெயரில் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான திட்ட நிகழ்ச்சி நேற்று டெல்லியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கூறுகையில்,"டெல்லி- ஜெய்ப்பூர் இடையே ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் பஸ்சை இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளோம்.

டெல்லி - ஜெய்ப்பூர் இடையே ஹைட்ரஜனில் இயங்கும் பஸ்... காற்று மாசுபாட்டை குறைக்க மத்திய அரசின் சூப்பர் திட்டம்!

இதே வழித்தடத்தில் மின்சார பஸ்சையும் இயக்கவும் முடிவு செய்துள்ளோம். இந்த புதிய திட்டம் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்ய இருக்கிறோம். முதல்முறையாக இரு முக்கிய நகரங்களுக்கு இடையிலான ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் பஸ் மாடலாக இருக்கும்.

டெல்லி - ஜெய்ப்பூர் இடையே ஹைட்ரஜனில் இயங்கும் பஸ்... காற்று மாசுபாட்டை குறைக்க மத்திய அரசின் சூப்பர் திட்டம்!

சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத வகையில் இயங்கும் இந்த பஸ்சின் எரிபொருள் சிக்கனம் எந்த அளவுக்கு சிறப்பானதாக இருக்கிறது, நடைமுறை பயன்பாட்டிற்கு எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து ஆய்வுகள் செய்யப்படும்," என்று தெரிவித்துள்ளார்.

டெல்லி - ஜெய்ப்பூர் இடையே ஹைட்ரஜனில் இயங்கும் பஸ்... காற்று மாசுபாட்டை குறைக்க மத்திய அரசின் சூப்பர் திட்டம்!

இந்த நிலையில், ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் மூலமாக இயங்கும் பஸ் எப்போது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் உள்ளிட்ட தகவல்களை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவிக்கவில்லை. எனினும், இந்த திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என்பதால், கூடிய விரைவில் இந்த ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் மூலமாக இயங்கும் பஸ் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி - ஜெய்ப்பூர் இடையே ஹைட்ரஜனில் இயங்கும் பஸ்... காற்று மாசுபாட்டை குறைக்க மத்திய அரசின் சூப்பர் திட்டம்!

ஹைட்ரஜன் எரிபொருளில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு பேட்டரியில் சேமிக்கப்படும் தொழில்நுட்பம் மூலமாக இந்த பஸ் இயங்கும். பேட்டரியில் இருக்கும் மின்சாரத்தை பயன்படுத்தி, மின் மோட்டார்கள் மூலமாக ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் வாகனங்கள் இயங்கும். இது கிட்டத்தட்ட மின்சார வாகனம் போன்றவையாகவே இருக்கும். ஆனால், காற்றில் இருந்து பெறப்படும் ஆக்சிஜனுடன் ஹைட்ரஜன் சேர்ந்து ரசாயன மாற்றம் மூலமாக மின் உற்பத்தி செய்யப்பட்டு பேட்டரியில் சேமிக்கப்படும்.

டெல்லி - ஜெய்ப்பூர் இடையே ஹைட்ரஜனில் இயங்கும் பஸ்... காற்று மாசுபாட்டை குறைக்க மத்திய அரசின் சூப்பர் திட்டம்!

இது மின்சார வாகனங்களை விட சிறந்ததாக கருதப்படுகிறது. ஹைட்ரஜன் எரிபொருள் விலை மலிவாக இருப்பதுடன், ஹைட்ரஜன் எரிபொருளை சில நிமிடங்களில் நிரப்பிவிடலாம். மின்சார வாகனங்களை போல, பல மணிநேரம் சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் தவிர்க்கப்படும். அதேநேரத்தில், ஹைட்ரஜனை பாதுகாப்பாக சேமிப்பது சவாலான விஷயமாகவும் இருந்து வருகிறது.

Most Read Articles
English summary
NTPC is planning to start premium hydrogen fuel cell bus service from Delhi To Jaipur.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X