ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் ஒரு வழியாக தொடங்கியது... வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் தொடங்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் ஒரு வழியாக தொடங்கியது... வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஒரு வழியாக தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது. முன்னதாக ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவரி பணிகள் அக்டோபர்-நவம்பர் மாதத்திலேயே தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிப் பற்றாக்குறை காரணமாக டெலிவரி பணிகளில் தாமதம் ஏற்பட்டது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் ஒரு வழியாக தொடங்கியது... வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

இந்த சூழலில் ஒரு வழியாக தற்போது டெலிவரி பணிகள் தொடங்கியுள்ளன. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு வழக்கமான டீலர்ஷிப் பாணியை பின்பற்றவில்லை. ஆனால் அதற்கு பதிலாக வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் நேரடியாக டெலிவரி செய்யப்படவுள்ளன.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் ஒரு வழியாக தொடங்கியது... வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

அப்படியானால் சர்வீஸ் செய்ய வேண்டுமென்றால் என்ன செய்வது? என்ற சந்தேகம் வரலாம். நீங்கள் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை டெலிவரி செய்ய வேண்டுமென்றால், ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். இதன்பின் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மெக்கானிக் உங்கள் வீட்டிற்கே வந்து சர்வீஸ் செய்து கொடுத்து விடுவார். சர்வீசும் உங்கள் வீட்டிலேயேதான் நடைபெறும்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் ஒரு வழியாக தொடங்கியது... வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

இதற்கிடையே ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாடிக்கையாளர்கள் டெஸ்ட் டிரைவ் செய்யும் பணிகளும் தற்போது தொடங்கியுள்ளன. ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை முன்பதிவு செய்வதற்கான அடுத்த புக்கிங் விண்டோ 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்படவுள்ளது. ஆனால் இதற்கான சரியான தேதியை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் ஒரு வழியாக தொடங்கியது... வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தற்போதைய நிலையில் 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அவற்றுக்கு எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ என பெயரிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதில், எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு மணிக்கு 90 கிலோ மீட்டர்கள்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் ஒரு வழியாக தொடங்கியது... வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை எட்டுவதற்கு இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 3.6 வினாடிகளை மட்டுமே எடுத்து கொள்ளும். அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 121 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் நார்மல் மற்றும் ஸ்போர்ட் என இரண்டு ரைடிங் மோடுகள் வழங்கப்படுகின்றன.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் ஒரு வழியாக தொடங்கியது... வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

மறுபக்கம் ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 115 கிலோ மீட்டர்களாக உள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 3 வினாடிகளில் எட்டி விடும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 181 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்யலாம்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் ஒரு வழியாக தொடங்கியது... வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் கூடுதலாக ஒரு ரைடிங் மோடு வழங்கப்படுகிறது. இது ஹைப்பர் என அழைக்கப்படுகிறது. அத்துடன் கூடுதல் வண்ண தேர்வுகள் உடனும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கிறது. மேலும் க்ரூஸ் கண்ட்ரோல், ரிவர்ஸ் மோடு மற்றும் ஹில் ஹோல்டு உள்ளிட்ட வசதிகளும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்படுகின்றன.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் ஒரு வழியாக தொடங்கியது... வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

இதுதவிர டிஜிட்டல் கீ, குரல் கட்டளைகள், மொபைல் போன் கனெக்ட்டிவிட்டி, ஜியோஃபென்சிங், நேவிகேஷன் மற்றும் 7 இன்ச் டச்ஸ்க்ரீன் உள்ளிட்ட வசதிகளையும் நீங்கள் பெறுவீர்கள். ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தமிழகத்தில்தான் தனது தொழிற்சாலையை அமைத்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த தொழிற்சாலை அமைந்துள்ளது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் ஒரு வழியாக தொடங்கியது... வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

இங்குதான் ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. வரும் காலங்களில் இன்னும் நிறைய எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பு இதற்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் ஒரு வழியாக தொடங்கியது... வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அரசு வழங்கி வரும் ஆதரவும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு பிரச்னையும் மக்களை எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி திருப்பி வருகின்றன. இதன் காரணமாக இந்திய சந்தையில் வரும் காலங்களில் நிறைய எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன.

Most Read Articles
English summary
Ola electric scooter delivery starts here are all the details
Story first published: Thursday, December 16, 2021, 10:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X