கால் டாக்சி, மின் வாகன உற்பத்தியை அடுத்து புதிய தொழிலில் களமிறங்கும் ஓலா... மாருதி, மஹிந்திராவிற்கு போட்டி!

கால் டாக்சி மற்றும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆகியவற்றைத் தொடர்ந்து பிரபல கால் டாக்சி நிறுவனமான ஓலா மற்றுமொரு புதிய தொழிலில் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாருதி சுசுகி மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே அத்தொழிலில் தீவிரம் காட்டி வரும் வேலையில் ஓலா அவற்றிற்கு போட்டியாக களமிறங்கியிருக்கின்றது. இதுகுறித்த முழு விபரத்தையும் இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

கால் டாக்சி, எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை தொடர்ந்து புதிய தொழிலில் களமிறங்கும் ஓலா... மாருதி, மஹிந்திராவிற்கு போட்டி!

பிரபல கால் டாக்சி சேவை நிறுவனமான ஓலா, கால் டாக்சி துறையில் மட்டுமின்றி மின் வாகன உற்பத்தி பணியிலும் ஈடுபட்டு வருகின்றது. ஏற்கனவே இந்நிறுவனம் தனது புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உலகிற்கு அறிமுகம் செய்துவிட்டது. எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ ஆகிய இரு விதமான தேர்வுகளில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வந்திருக்கின்றன.

கால் டாக்சி, எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை தொடர்ந்து புதிய தொழிலில் களமிறங்கும் ஓலா... மாருதி, மஹிந்திராவிற்கு போட்டி!

தற்போது இந்த ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு பணிகள் ரூ. 499 என்ற மிகக் குறைந்த தொகையில் நடைபெற்று வருகின்றது. ஓலா ஆப் மற்றும் இணைய தளத்தின் வாயிலாக புக்கிங் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஓலா நிறுவனம் மற்றுமொரு வர்த்தகத்திலும் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கால் டாக்சி, எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை தொடர்ந்து புதிய தொழிலில் களமிறங்கும் ஓலா... மாருதி, மஹிந்திராவிற்கு போட்டி!

பழைய கார்களை வாங்கும் மற்றும் விற்பனைச் செய்யும் தொழிலிலேயே ஓலா களமிறங்கியிருக்கின்றது. இதற்கான தளத்தை உருவாக்கும் பணியில் நிறுவனம் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் புதிய கார்களுக்கு கிடைத்து வருவதைப் போலவே அதிக வரவேற்பு பயன்படுத்திய கார்களுக்கும் கிடைத்து வருகின்றது.

கால் டாக்சி, எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை தொடர்ந்து புதிய தொழிலில் களமிறங்கும் ஓலா... மாருதி, மஹிந்திராவிற்கு போட்டி!

எனவேதான் நாட்டின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள்கூட இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில், மாருதி சுசுகி தொடங்கி மஹிந்திரா நிறுவனம் வரை இந்த துறையில் வெற்றி நடைப் போட்டுக் கொண்டிருக்கின்றன. அண்மையில்கூட மஹிந்திரா நிறுவனம் ஒரே நாளில் 75 விற்பனையகங்களை திறந்தது.

கால் டாக்சி, எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை தொடர்ந்து புதிய தொழிலில் களமிறங்கும் ஓலா... மாருதி, மஹிந்திராவிற்கு போட்டி!

இவையனைத்தும் பயன்படுத்திய கார்களை விற்பனைச் செய்வதற்காக மட்டுமே திறக்கப்பட்ட நிலையங்கள் ஆகும். இவ்வாறு, செகண்டு ஹேண்டு கார் விற்பனை சந்தையில் அனைத்து நிறுவனங்களும் அதிக தீவிரம் காட்டி வரும் வேலையில், அவற்றிற்கு போட்டியாக ஓலா நிறுவனமும் இந்த வர்த்தகத்தில் களமிறங்கியிருக்கின்றது.

கால் டாக்சி, எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை தொடர்ந்து புதிய தொழிலில் களமிறங்கும் ஓலா... மாருதி, மஹிந்திராவிற்கு போட்டி!

'Try and Buy' எனும் பெயரில் இந்த வர்த்தகத்தில் ஓலா களமிறங்கி இருக்கிறது. இதற்காக பிரத்யேக தளம் ஒன்றையும் நிறுவனம் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தளத்தின் வாயிலாகவே பழைய பயன்படுத்திய வாகனங்களை வாங்குதல் மற்றும் விற்பனைச் செய்தல் உள்ளிட்ட பணிகளை நிறுவனம் மேற்கொள்ள இருக்கின்றது.

கால் டாக்சி, எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை தொடர்ந்து புதிய தொழிலில் களமிறங்கும் ஓலா... மாருதி, மஹிந்திராவிற்கு போட்டி!

மேலும், தான் விற்பனைச் செய்யும் பயன்படுத்திய கார்களுக்கு ஒரு வாரண்டி மற்றும் இஎம்ஐ (கடன்) உள்ளிட்ட வசதிகளை வழங்கவும் ஓலா திட்டமிட்டுள்ளது. ஆகையால், கால் டாக்சி சேவையில் கொடிக் கட்டி பறக்கும் ஓலா இந்தியாவின் பயன்படுத்திய கார்களை விற்பனைச் செய்யும் சந்தையிலும் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கால் டாக்சி, எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை தொடர்ந்து புதிய தொழிலில் களமிறங்கும் ஓலா... மாருதி, மஹிந்திராவிற்கு போட்டி!

இந்தியாவில் செகண்ட் ஹேண்ட் கார்களுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக பி அண்ட் எஸ் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலின்படி 2030ம் ஆண்டிற்குள் பயன்படுத்தப்பட்ட கார் சந்தை 70.8 பில்லியன் டாலர்களாக உயரும் என தெரிவித்திருக்கின்றது. 2020 நிலவரப்படி இந்த சந்தை 18.3 பில்லியனாக இருந்தது. தற்போது இது பல மடங்கு உயர்ந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கால் டாக்சி, எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை தொடர்ந்து புதிய தொழிலில் களமிறங்கும் ஓலா... மாருதி, மஹிந்திராவிற்கு போட்டி!

இந்த சந்தையில் ஏற்கனவே கார்24, கார் ட்ரேட், ட்ரூம், ஸ்பின்னி மற்றும் கார்தேக்கோ உள்ளிட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே பயன்படுத்திய கார்களை விற்க மற்றும் வாங்க புதிய தளத்தை உருவாக்கும் பணியில் ஓலா நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது.

கால் டாக்சி, எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை தொடர்ந்து புதிய தொழிலில் களமிறங்கும் ஓலா... மாருதி, மஹிந்திராவிற்கு போட்டி!

கடந்த மாதம் 15ம் தேதி அன்று ஓலா நிறுவனம் இரு புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. மேலே பார்த்தபடி ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ ஆகியவையே விற்பனைக்குக் களமிறக்கப்பட்டன. இதில், எஸ்1 தேர்வுக்கு ரூ. 99,999 என்ற விலையும், எஸ்1 ப்ரோ மாடலுக்கு ரூ. 1,29,999 என்ற விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கால் டாக்சி, எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை தொடர்ந்து புதிய தொழிலில் களமிறங்கும் ஓலா... மாருதி, மஹிந்திராவிற்கு போட்டி!

இந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்வதற்கான தயாரிப்பு ஆலை தமிழகத்தின் ஓசூரில் உருவாக்கப்பட்டு வருகின்றது. சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் மிகவும் பிரமாண்டமாக இந்த ஆலை தயாராகி வருகின்றது. இங்கு மனிதர்கள் மற்றும் தானியங்கி ரோபோக்கள் என இருவரும் சேர்ந்து இணைந்து பணியாற்ற இருக்கின்றனர்.

Most Read Articles
English summary
Ola launches try and buy for used cars marketplace
Story first published: Saturday, September 4, 2021, 12:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X