50 வருடங்களை நிறைவு செய்யும் ஒபேலின் முதல் பேட்டரி கார்!! அப்போவே இப்படிப்பட்ட கார்களா!!

ஒபேல் நிறுவனம் எலெக்ட்ரோ ஜிடி எலக்ட்ரிக் கார் தயாரிக்கப்பட்டு 50ஆம் ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடி வருகிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

50 வருடங்களை நிறைவு செய்யும் ஒபேலின் முதல் பேட்டரி கார்!! அப்போவே இப்படிப்பட்ட கார்களா!!

ஒபேலின் மாடிஃபைடு எலெக்ட்ரோ ஜிடி, அது முதன்முதலில் தயாரிக்கப்பட்ட சமயத்தில் பேட்டரி-எலக்ட்ரிக் ஆற்றலில் இயங்கும் கார்களுக்கு மிகவும் அட்வான்ஸ்டு மாடலாக விளங்கியது.

50 வருடங்களை நிறைவு செய்யும் ஒபேலின் முதல் பேட்டரி கார்!! அப்போவே இப்படிப்பட்ட கார்களா!!

ஒபேல் ஜிடி காரில் 1.1 லிட்டர் மற்றும் 1.8 லிட்டர் 4-சிலிண்டர் என்ஜின் தேர்வுகள் வழங்கப்பட்டன. இவை அதிகப்பட்சமாக முறையே 67 எச்பி மற்றும் 102 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக இருந்தன.

50 வருடங்களை நிறைவு செய்யும் ஒபேலின் முதல் பேட்டரி கார்!! அப்போவே இப்படிப்பட்ட கார்களா!!

என்ஜின் உடன் இந்த காரில் இரு போஸ்ச் டிசி மோட்டார்களையும் ஒபேல் வழங்கியது. இந்த எலக்ட்ரிக் மோட்டார்கள் 120 எச்பி வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியவைகளாக இருந்தன. ஆனால் மோட்டர்-என்ஜின் என இரண்டையும் சேர்த்து 160 எச்பி வரையிலான ஆற்றலையே பெற முடிந்தது.

50 வருடங்களை நிறைவு செய்யும் ஒபேலின் முதல் பேட்டரி கார்!! அப்போவே இப்படிப்பட்ட கார்களா!!

இருப்பினும் எலக்ட்ரிக் உந்துவிசை மோடில் இந்த ஜிடி கார் கூடுதல் ஆற்றலை பெற்றது. ஒபேல் ஜிடி காரின் மாடிஃபைடு வெர்சன் 1968ல் இருந்து 1973 வரையில் தயாரிப்பில் இருந்தது. இந்த மாடிஃபைடு வெர்சனுக்கே எலெக்ட்ரோ ஜிடி என பெயராகும்.

50 வருடங்களை நிறைவு செய்யும் ஒபேலின் முதல் பேட்டரி கார்!! அப்போவே இப்படிப்பட்ட கார்களா!!

எலெக்ட்ரோ ஜிடி, பேட்டரி-எலக்ட்ரிக் காராக ஆறு உலக சாதனைகளை படைத்துள்ளது. இந்த காரில் ஓட்டுனருக்கு அருகில், ஓட்டுனருக்கு பின்பகுதியில் என நான்கு நிக்கல்-காட்மியம் பேட்டரிகள் பொருத்தப்பட்டன.

50 வருடங்களை நிறைவு செய்யும் ஒபேலின் முதல் பேட்டரி கார்!! அப்போவே இப்படிப்பட்ட கார்களா!!

இவற்றின் காரணமாக வாகனத்தின் எடை கணிசமாக அதிகரித்தது. காரின் எடை மொத்த எடை 1,550 கிலோ ஆகும். இதில் 590 கிலோ 280 செல்களை பேட்டரிகளுடையது ஆகும். அதேநேரம் அதிக சாதனைகளை புரிவதற்காக 740 கிலோவிலும் நிக்கல்-காட்மியம் பேட்டரிகளை ஒபேல் நிறுவனம் வழங்கியது.

50 வருடங்களை நிறைவு செய்யும் ஒபேலின் முதல் பேட்டரி கார்!! அப்போவே இப்படிப்பட்ட கார்களா!!

தோற்றத்தை பொறுத்தவரையில், ஒபேல் எலெக்ட்ரோ ஜிடி காரின் முன்பக்கத்தில் அனைத்து காற்று ஏற்பான் துளைகளும் மூடப்பட்டு இருந்தன. இந்த காரை மிகவும் எதிர்கால வாகனமாக கொண்டுவர ஒபேல் முயற்சித்தது.

50 வருடங்களை நிறைவு செய்யும் ஒபேலின் முதல் பேட்டரி கார்!! அப்போவே இப்படிப்பட்ட கார்களா!!

இதனால் தான் என்னவோ, காரின் பக்கவாட்டு கண்ணாடிகள், முன்பக்க பம்பர்கள் மற்றும் கதவு கைப்பிடிகள் வழங்கப்படவில்லை. சுழலும்போது ஏற்படும் தடைகளை குறைப்பதற்காக பிரத்யேகமான அதி-அழுத்தம் கொண்ட டயர்கள் இந்த காரில் பயன்படுத்தப்பட்டன.

50 வருடங்களை நிறைவு செய்யும் ஒபேலின் முதல் பேட்டரி கார்!! அப்போவே இப்படிப்பட்ட கார்களா!!

கால் மைல் தூரத்தை வெறும் 16.8 வினாடிகளில் எட்டிவிடும் ஒபேலின் முதல் பேட்டரி-எலக்ட்ரிக் வாகனமான எலெக்ட்ரோ ஜிடி சமகால ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு சரியான போட்டியினை அளிக்கக்கூடிய எலக்ட்ரிக் வாகனமாக தன்னை நிரூபித்து காட்டியது.

இத்தகைய பேட்டரி கார் தயாரிக்கப்பட்டு இன்றுடன் 50 வருடங்களாகிவிட்டது. தற்போது எத்தனையோ எலக்ட்ரிக் கார்கள் புதியது புதியதாக வெளிவந்தாலும், இவை அனைத்திற்கும் ஒரு வகையில் முன்னோடி, ஒபேல் எலெக்ட்ரோ ஜிடி இவி ஆகும்.

Most Read Articles

English summary
Opel celebrates 50th anniversary of Elektro GT EV that set six world records.
Story first published: Wednesday, April 28, 2021, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X