டாடா நெக்ஸானை காட்டிலும் சிலருக்கு மஹிந்திரா எக்ஸ்யூவி300-ஐ பிடிப்பது ஏன்? புதிய உரிமையாளரின் அனுபவங்கள்!!

மஹிந்திரா, இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம் என்பதில் எந்தவொரு மாற்று கருத்தும் கிடையாது. குறிப்பாக அன்றாட பயன்பாட்டு வாகனங்களை உருவாக்குவதில் மஹிந்திரா முன்னிலையில் உள்ளது. மேலும் இதனாலேயே மஹிந்திரா உலகளவில் பிரபலமாகியுள்ளது.

டாடா நெக்ஸானை காட்டிலும் சிலருக்கு மஹிந்திரா எக்ஸ்யூவி300-ஐ பிடிப்பது ஏன்? புதிய உரிமையாளரின் அனுபவங்கள்!!

இந்திய சந்தையை பொறுத்தவரையில் காம்பெக்ட் எஸ்யூவி கார்களுக்கான மார்க்கெட் கடந்த சில வருடங்களாக பெரிய அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. இதனால் தான் நம் நாட்டில் கார்களை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் குறைந்தப்பட்சம் ஒரு சப்-4 மீட்டர் எஸ்யூவி காரையாவது விற்பனை செய்து வருகின்றன.

டாடா நெக்ஸானை காட்டிலும் சிலருக்கு மஹிந்திரா எக்ஸ்யூவி300-ஐ பிடிப்பது ஏன்? புதிய உரிமையாளரின் அனுபவங்கள்!!

இந்த வகையில் மஹிந்திரா விற்பனை செய்யும் மாடல் தான் எக்ஸ்யூவி300 ஆகும். விற்பனையில் இந்த சப்-4 மீட்டர் மஹிந்திரா காருக்கு டாடா நெக்ஸான், கியா சொனெட், ஹூண்டாய் வென்யூ மற்றும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா உள்ளிட்டவை போட்டியாக உள்ளன. இதில் டாடா நெக்ஸானை வைத்திருந்த இளைஞர் ஒருவர் அதனை விற்று அந்த பணத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரை வாங்கியுள்ளார்.

டாடா நெக்ஸானை காட்டிலும் சிலருக்கு மஹிந்திரா எக்ஸ்யூவி300-ஐ பிடிப்பது ஏன்? புதிய உரிமையாளரின் அனுபவங்கள்!!

இந்த மாற்றத்திற்கான காரணம் என்ன? ஏன் எக்ஸ்யூவி300 காருக்கு மாறினேன்? என்பது உள்ளிட்ட கேள்விக்களுக்கான பதில்களை அந்த இளைஞரே வீடியோ ஒன்றின் மூலமாக தெரிவித்துள்ளார். ஃப்யுல் இன்ஜெக்டட் என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள இது தொடர்பான வீடியோவினை கீழே காணலாம்.

இந்த வீடியோவினை பதிவிட்டவர், இந்த எக்ஸ்யூவி300 காரின் உரிமையாளரை அறிமுகம் செய்வதில் இருந்து வீடியோ ஆரம்பிக்கிறது. அதன்பின், தான் ஏன் டாடா நெக்ஸானில் இருந்து மஹிந்திரா எக்ஸ்யூவி 300 காருக்கு மாறினேன் என்பதை அந்த உரிமையாளர் ஒவ்வொன்றாக விளக்கி கூறுகிறார்.

டாடா நெக்ஸானை காட்டிலும் சிலருக்கு மஹிந்திரா எக்ஸ்யூவி300-ஐ பிடிப்பது ஏன்? புதிய உரிமையாளரின் அனுபவங்கள்!!

தான் ஏற்கனவே 140 பிஎஸ் என்ஜின் ஆற்றலில் இயங்கக்கூடிய டாடா ஹெரியர் காரை பயன்படுத்தியுள்ளதே இந்த மாற்றத்திற்கு மிக முக்கிய காரணம் என கூறியுள்ள அவர், தான் சில வருடங்களாக டாடா மோட்டார்ஸின் சிறந்த சேவைகளையும், மற்ற விஷயங்களையும் பெற்றுள்ளதாகவும், இருப்பினும் அதில் இருந்து மாறுப்பட விரும்பியதினாலேயே மஹிந்திரா பிராண்டின் பக்கம் சென்றதாகவும் வீடியோவில் கூறியுள்ளார்.

டாடா நெக்ஸானை காட்டிலும் சிலருக்கு மஹிந்திரா எக்ஸ்யூவி300-ஐ பிடிப்பது ஏன்? புதிய உரிமையாளரின் அனுபவங்கள்!!

முன்பு பயன்படுத்தி வந்த ஹூண்டாய் ஐ20 காரை விற்றவர், தனது இரண்டாவது காரை எஸ்யூவி உடலமைப்பில் பெற விரும்பியுள்ளார். அப்போது டாடா நெக்ஸானே இவரது நினைவிற்கு வந்துள்ளது. இருப்பினும் ஏற்கனவே டாடா ஹெரியரை பயன்படுத்தியுள்ளாதால், மீண்டும் டாடா காரையே வாங்க இவரது மனம் முழுவதுமாக சம்மதிக்கவில்லை.

டாடா நெக்ஸானை காட்டிலும் சிலருக்கு மஹிந்திரா எக்ஸ்யூவி300-ஐ பிடிப்பது ஏன்? புதிய உரிமையாளரின் அனுபவங்கள்!!

அந்த சமயத்தில் தனது மூளையில் பல கார் மாடல்கள் ரிங்காரமிட்டதாக கூறும் இவர், அதன்பின் மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரை டெஸ்ட் ட்ரைவ் செய்து பார்த்த பின்னரே நிலையான ஒரு முடிவுக்கு வர முடிந்ததாக கூறியுள்ளார். எஸ்யூவி கார் ஒன்றை பெட்ரோல் என்ஜின் உடன் வாங்குவதே இவரது விருப்பமாக இருந்துள்ளது.

டாடா நெக்ஸானை காட்டிலும் சிலருக்கு மஹிந்திரா எக்ஸ்யூவி300-ஐ பிடிப்பது ஏன்? புதிய உரிமையாளரின் அனுபவங்கள்!!

டாடா நெக்ஸான் சிறந்த கார் தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் பெட்ரோல் என்ஜின் உடன் நெக்ஸானின் செயல்திறன் வாடிக்கையாளர்களை பெரியதாக கவரவில்லை. இதனால் மஹிந்திரா எக்ஸ்யூவி300-இன் செயல்படுதிறன் உடனடியாக இவரை கவர்ந்துள்ளது.

டாடா நெக்ஸானை காட்டிலும் சிலருக்கு மஹிந்திரா எக்ஸ்யூவி300-ஐ பிடிப்பது ஏன்? புதிய உரிமையாளரின் அனுபவங்கள்!!

மற்ற காம்பெக்ட் எஸ்யூவி கார்களை காட்டிலும் நன்கு விசாலான கேபினை எக்ஸ்யூவி300 கொண்டிருப்பதாக கூறும் இவர், எக்ஸ்யூவி300 பெட்ரோல் மாடல் மிகவும் சிறப்பாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது, இந்த மஹிந்திரா காரின் சஸ்பென்ஷன் மிகவும் மென்மையானதாக உள்ளது, இந்த காரில் கியர் மாற்றம் தன்னை உடனடியாக இந்த எஸ்யூவி வாகனத்தின் ரசிகராக மாற்றியதாக இந்த நபர் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

டாடா நெக்ஸானை காட்டிலும் சிலருக்கு மஹிந்திரா எக்ஸ்யூவி300-ஐ பிடிப்பது ஏன்? புதிய உரிமையாளரின் அனுபவங்கள்!!

இதையெல்லாம் விட இவரது தந்தையின் ஆசையும் மஹிந்திரா எக்ஸ்யூஇ300-ஐ வாங்குவதில் தான் இருந்துள்ளது. எக்ஸ்யூவி300-இல் தொழிற்நுட்ப வசதிகள் பெரியதாக சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்றாலும், பெரும்பாலானோர் எதிர்பார்க்கும் அம்சங்கள் இந்த காரில் உள்ளன. டாடா வாகனங்களை காட்டிலும் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆனது எக்ஸ்யூவி300-இல் நன்றாகவே உள்ளது.

டாடா நெக்ஸானை காட்டிலும் சிலருக்கு மஹிந்திரா எக்ஸ்யூவி300-ஐ பிடிப்பது ஏன்? புதிய உரிமையாளரின் அனுபவங்கள்!!

இந்த உரிமையாளர் வைத்திருக்கும் குறிப்பிட்ட மாடல் இந்த மஹிந்திரா காம்பெக்ட் எஸ்யூவி காரின் டாப் டபிள்யூ8(O) வேரியண்ட் ஆகும். இதனால் லெதரில் உள்ளமைவு, பல-செயல்பாடுகள் கொண்ட ஸ்டேரிங் சக்கரம், எலக்ட்ரிக் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், 7 காற்றுப்பைகள் உள்பட ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை இந்த கார் கொண்டுள்ளது.

டாடா நெக்ஸானை காட்டிலும் சிலருக்கு மஹிந்திரா எக்ஸ்யூவி300-ஐ பிடிப்பது ஏன்? புதிய உரிமையாளரின் அனுபவங்கள்!!

மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரை பற்றி கூறும்போது இதன் பாதுகாப்பு சிறப்பம்சத்தை கூறாமல் இருக்க முடியாது. ஏனெனில் உலகளாவிய NCAP மோதல் சோதனையில் இந்த மஹிந்திரா வாகனம் முழு 5 நட்சத்திரங்களையும் பெற்றுள்ளது. குழந்தை பாதுகாப்பு விஷயத்தில் நெக்ஸானை காட்டிலும் சிறந்ததாக உள்ளது.

Most Read Articles

English summary
Owner shares why he chose Mahindra XUV300 over Tata Nexon.
Story first published: Tuesday, September 21, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X