மீண்டும் இந்தியா வருகிறதா பியூஜியோட் பிராண்ட்? பியூஜியோட் 2008 எஸ்யூவி கார் இந்தியாவில் சோதனை!!

விற்பனையில் இல்லாத பியூஜியோட் 2008 எஸ்யூவி கார் ஒன்று இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுகுறித்த ஸ்பை படத்தினை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மீண்டும் இந்தியா வருகிறதா பியூஜியோட் பிராண்ட்? பியூஜியோட் 2008 எஸ்யூவி கார் இந்தியாவில் சோதனை!!

ஆட்டோகார் இந்தியா செய்திதளத்தின் மூலமாக கண்டறியப்பட்ட இந்த சோதனை ஓட்டம் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி கார் தயாரிக்கப்பட்டுவரும் பிஎஸ்ஏ தொழிற்சாலைக்கு அருகே நடத்தப்பட்டுள்ளது.

மீண்டும் இந்தியா வருகிறதா பியூஜியோட் பிராண்ட்? பியூஜியோட் 2008 எஸ்யூவி கார் இந்தியாவில் சோதனை!!

ஐரோப்பிய நாடுகளில் விற்பனையில் இருக்கும் இந்த பியூஜியோட் எஸ்யூவி காரின் புதிய தலைமுறை கடந்த ஆண்டில் தான் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த புதிய தலைமுறை பியூஜியோட் 2008 எஸ்யூவி கார் தற்போது இந்தியாவில் காட்சி தந்துள்ளது.

மீண்டும் இந்தியா வருகிறதா பியூஜியோட் பிராண்ட்? பியூஜியோட் 2008 எஸ்யூவி கார் இந்தியாவில் சோதனை!!

இதனால் சிட்ரோன் பிராண்டிற்கு பதிலாக பியூஜியோட் பிராண்டை மீண்டும் இந்திய சந்தைக்கு கொண்டுவர பிஎஸ்ஏ க்ரூப் முடிவெடுத்துள்ளதா என்ற கேள்வி எழுகிறது. இந்த இரு பிரெஞ்சு கார் பிராண்ட்களும் தங்களது கார் மாடல்களை உருவாக்க ஒரே ப்ளாட்ஃபாரத்தை பகிர்ந்து கொள்கின்றன.

மீண்டும் இந்தியா வருகிறதா பியூஜியோட் பிராண்ட்? பியூஜியோட் 2008 எஸ்யூவி கார் இந்தியாவில் சோதனை!!

இந்த வகையில் பியூஜியோட் 2008 எஸ்யூவி மாடலின் சிஎம்பி மாடுலர் ப்ளாட்ஃபாரம், என்ஜின்கள், கியர்பாக்ஸ் மற்றும் மற்ற பாகங்களை சிட்ரோனின் அடுத்த சப்-4 மீட்டர் எஸ்யூவி காரில் பயன்படுத்தப்படலாம். அதற்காக கூட இந்த சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்.

மீண்டும் இந்தியா வருகிறதா பியூஜியோட் பிராண்ட்? பியூஜியோட் 2008 எஸ்யூவி கார் இந்தியாவில் சோதனை!!

சி5 ஏர்க்ராஸிற்கு அடுத்து சிட்ரோனின் இரண்டாவது தயாரிப்பு மாடலாக வெளிவரும் இந்த சப்-4 மீட்டர் எஸ்யூவி கார் சிசி21 என்ற குறியீட்டு பெயரால் தற்போதைக்கு அழைக்கப்பட்டு வருகிறது. விற்பனையில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, கியா சொனெட், ஹூண்டாய் வென்யூ உள்ளிட்டவற்றிற்கு போட்டியாக இது விளங்கும்.

மீண்டும் இந்தியா வருகிறதா பியூஜியோட் பிராண்ட்? பியூஜியோட் 2008 எஸ்யூவி கார் இந்தியாவில் சோதனை!!

பியூஜியோட் 2008-இன் ப்ளாட்ஃபாரத்தில் உருவாக்கப்படுவதால் இந்த எஸ்யூவி காரின் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் சிட்ரோன் சிசி21 காரில் வழங்கப்படலாம். இந்த டர்போ பெட்ரோல் என்ஜினை 99எச்பி, 128எச்பி மற்றும் 153எச்பி என மூன்று விதமான ஆற்றல்களை அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் வகையில் பியூஜியோட் நிறுவனம் வடிவமைக்கிறது.

மீண்டும் இந்தியா வருகிறதா பியூஜியோட் பிராண்ட்? பியூஜியோட் 2008 எஸ்யூவி கார் இந்தியாவில் சோதனை!!

சிட்ரோன் சிசி21 காம்பெக்ட் எஸ்யூவி காரில் இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம். ஏற்கனவே கூறியதுபோல் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரின் மூலமாக அடுத்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்தியாவில் இன்னிங்ஸை துவங்க சிட்ரோன் இந்தியா நிறுவனம் தயாராகி வருகிறது.

மீண்டும் இந்தியா வருகிறதா பியூஜியோட் பிராண்ட்? பியூஜியோட் 2008 எஸ்யூவி கார் இந்தியாவில் சோதனை!!

இதனை தொடர்ந்து சிசி21 காம்பெக்ட் க்ராஸ்ஓவரின் அறிமுகம் இந்த 2021ஆம் ஆண்டின் இறுதியில் இருக்கலாம். இந்த இரு சிட்ரோன் கார்களும் தமிழ்நாடு, திருவள்ளூரில் உள்ள சிகே பிர்லா தொழிற்சாலையில் இருந்து வெளிவரவுள்ளன.

மீண்டும் இந்தியா வருகிறதா பியூஜியோட் பிராண்ட்? பியூஜியோட் 2008 எஸ்யூவி கார் இந்தியாவில் சோதனை!!

பிஎஸ்ஏ க்ரூப்பிற்கு தமிழ்நாட்டில் ஓசூர் மாவட்டத்திலும் தொழிற்சாலை உள்ளது. இங்கிருந்து தான் க்ரூப்பில் உள்ள பிராண்ட்களின் வாகனங்களுக்கு என்ஜின்கள் மற்றும் ட்ரான்ஸ்மிஷன்கள் தயாரிக்கப்பட்டு இந்தியா மட்டுமில்லாமல் உலகளவில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #பியூஜியட் #peugeot
English summary
Peugeot 2008 SUV spied in India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X