மஹிந்திரா புண்ணியத்தில் வேற லெவல் மின்சார ஹைப்பர் காரை களமிறக்கும் பினின்ஃபரீனா

மஹிந்திரா நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் பினின்ஃபரீனா நிறுவனம் மிக விரைவில் புத்தம் புதிய எலெக்ட்ரிக் ஹைப்பர் கார் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது. பெரும் கோடீஸ்வரர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த காரின் முக்கிய அம்சங்கள் குறித்த விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

மஹிந்திரா புண்ணியத்தில் வேற லெவல் மின்சார ஹைப்பர் காரை களமிறக்கும் பினின்ஃபரீனா

இத்தாலியை சேர்ந்த பினின்ஃபரீனா நிறுவனம் கார்களை வடிவமைத்துக் கொடுப்பதில் உலகின் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. உலகின் பல முன்னணி சொகுசு கார் நிறுவனங்களுக்கு கார்களை வடிவமைத்து கொடுத்து புகழ்பெற்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மஹிந்திரா நிறுவனம் பினின்ஃபரீனாவை கையகப்படுத்தியது.

மஹிந்திரா புண்ணியத்தில் வேற லெவல் மின்சார ஹைப்பர் காரை களமிறக்கும் பினின்ஃபரீனா

கடந்த நிதி ஆண்டு காலத்தின் நான்காவது காலாண்டு வர்த்தக முடிவுகள் குறித்து மஹிந்திரா விபரங்களை இரு தினங்களுக்கு முன் வெளியிட்டது. அதில், பினின்ஃபரீனா பேடிஸ்ட்டா கார் குறித்த அறிமுக விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

மஹிந்திரா புண்ணியத்தில் வேற லெவல் மின்சார ஹைப்பர் காரை களமிறக்கும் பினின்ஃபரீனா

மொத்தமாக 150 யூனிட்டுகள் மட்டுமே பினின்ஃபரீனா பேடிஸ்ட்டா கார் உற்பத்தி செய்யப்படும். இந்த காரில் 1900 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட பேட்டரி மற்றும் அதிசக்திவாய்ந்த மின் மோட்டார்கள் பொருத்தப்பட உள்ளன.

மஹிந்திரா புண்ணியத்தில் வேற லெவல் மின்சார ஹைப்பர் காரை களமிறக்கும் பினின்ஃபரீனா

குரோஷியாவை சேர்ந்த பிரபலமான எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமாக உள்ள ரிமாட் ஆட்டோமொபைல் நிறுவனத்திடம் இருந்துதான் பினின்ஃபரீனா நிறுவனம் தனது பேடிஸ்ட்டா காருக்கான பவர் ட்ரெயின்களை சப்ளை பெற உள்ளது. ரிமாக் சி டூ எலெக்ட்ரிக் ஹைப்பர் காரின் பல முக்கிய தொழில்நுட்ப அம்சங்கள் பினின்ஃபரீனா பேடிஸ்ட்டா காரிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கும்.

மஹிந்திரா புண்ணியத்தில் வேற லெவல் மின்சார ஹைப்பர் காரை களமிறக்கும் பினின்ஃபரீனா

பினின்ஃபரீனா பேடிஸ்ட்டா காரில் 4 மின் மோட்டார்கள் மற்றும் 120kWh பேட்டரி பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 1.9 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 350 கிமீ வேகம் வரை செல்லும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 450 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.

மஹிந்திரா புண்ணியத்தில் வேற லெவல் மின்சார ஹைப்பர் காரை களமிறக்கும் பினின்ஃபரீனா

இந்த ஹைப்பர் வகை கார் 1.95 டன் எடை கொண்டது. மோனோகாக் சேஸீயில் கட்டமைக்கப்பட்டு இருக்கும். இந்த காரில் 390 மிமீ டிஸ்க் பிரேக்குகள் மற்றும் 6 பாட் பிரேக் காலிபர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மஹிந்திரா புண்ணியத்தில் வேற லெவல் மின்சார ஹைப்பர் காரை களமிறக்கும் பினின்ஃபரீனா

இரண்டுவிதமான டயர் ஆப்ஷன்கள் கொடுக்கப்படும். பைரெல்லி பி ஸீரோ கார்ஸா டயர்கள் சாதாரண சாலை வகை பயன்பாட்டுக்கும், பந்தய களங்களில் பயன்படுத்துவதற்கான விசேஷ அம்சங்கள் கொண்ட மிச்செலின் பைலட் ஸ்போர்ட் கப் 2ஆர் டயர்களும் கொடுக்கப்படும். இலகுவான இம்பல்ஸோ சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மஹிந்திரா புண்ணியத்தில் வேற லெவல் மின்சார ஹைப்பர் காரை களமிறக்கும் பினின்ஃபரீனா

இந்த காரின் செயல்திறன் மற்றும் ஓட்டுதல் தரம் வேற லெவலில் இருக்கும் என்று ஃபார்முலா-1 மற்றும் ஃபார்முலா-இ கார் பந்தய வீரரான நிக் ஹெட்பெல்டு கூறி இருக்கிறார். இறுதிக்கட்ட டியூனிங்கில் இவரது பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்துள்ளது.

Most Read Articles
English summary
The Pininfarina Battista's launch is right around the corner. Pininfarina is gearing up to launch its first all-electric hypercar, the Battista. Even though the brand is owned by Mahindra, the new owners have clearly respected the heritage of the Italian brand and named its first EV hypercar after its founder, Battista Pininfarina.
Story first published: Monday, May 31, 2021, 10:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X