இந்த ஆண்டில் இந்தியாவை விட்டு சென்ற முக்கிய 5 கார்கள்!! நீங்க எத வாங்க ஆசப்பட்டீங்க?

2020ஐ போல் 2021ஆம் ஆண்டும் நம்மை செம்மத்தையாக தாக்கிவிட்டு சென்றுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இந்திய ஆட்டோமொபைல் துறைக்கும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பரவல், குறைக்கடத்திகளுக்கான உலகளாவிய பற்றாக்குறை என இந்த ஆண்டு சரியாக அமையவில்லை.

இந்த ஆண்டில் இந்தியாவை விட்டு சென்ற முக்கிய 5 கார்கள்!! நீங்க எத வாங்க ஆசப்பட்டீங்க?

ஒமைக்ரான் வைரஸ் வேறு ஒருபக்கம் தலைத்தூக்க ஆரம்பித்துள்ளது. இதனால் இந்த வருடத்தில் இருந்து நம்மில் பெரும்பாலானோர்க்கு பிடித்தமான கார்கள் நமது இந்திய சந்தையை விட்டு சென்றுள்ளன. அவை என்னனென்ன என்பதையும், அவற்றில் 5 மாடல்களை பற்றியும் இனி இந்த செய்தியில் விரிவாக பார்போம்.

இந்த ஆண்டில் இந்தியாவை விட்டு சென்ற முக்கிய 5 கார்கள்!! நீங்க எத வாங்க ஆசப்பட்டீங்க?

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

நல்ல விற்பனையாகி கொண்டிருந்த காரின் விற்பனையை நிறுத்தி கொள்ள வேண்டிய சூழல் எந்தவொரு ஆட்டோமொபைல் நிறுவனத்திற்கும் வரக்கூடாது. ஆனால் இந்த 2021ஆம் வருடத்தில் அத்தகைய சூழலை அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு சந்தித்தது. இதனால் இந்திய சந்தையை விட்டு வெளியேறுதல் என்கிற அதிரடியான நடவடிக்கையினை ஃபோர்டு மேற்கொண்டது. இதன் காரணமாக ஈக்கோஸ்போர்ட்டின் விற்பனையை இந்த நிறுவனம் நிறுத்தி கொண்டது.

இந்த ஆண்டில் இந்தியாவை விட்டு சென்ற முக்கிய 5 கார்கள்!! நீங்க எத வாங்க ஆசப்பட்டீங்க?

இந்தியாவில் சப்காம்பெக்ட் எஸ்யூவி கார்களுக்கான சந்தை அதிகரிக்க துவங்கிய நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதால் ஈக்கோஸ்போர்டை வாங்குவோரின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது. கிட்டத்தட்ட 9 வருடங்களுக்கு எந்தவொரு அப்கிரேடையும் ஈக்கோஸ்போர்ட் பெறவில்லை. இது பெட்ரோல் & டீசல் என்ஜின் தேர்வுகளில் விற்பனை செய்யப்பட்டது.

இந்த ஆண்டில் இந்தியாவை விட்டு சென்ற முக்கிய 5 கார்கள்!! நீங்க எத வாங்க ஆசப்பட்டீங்க?

ஸ்கோடா ராபிட்

செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா, கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு ராபிட் செடான் கார்களின் விற்பனையை இந்த ஆண்டில் நிறுத்தியுள்ளது. இந்த மாடலின் விற்பனையையும் போதிய வாடிக்கையாளர்கள் கிடைக்காததால் ஸ்கோடா நிறுத்தி கொண்டுள்ளது. விற்பனையாகததால் அப்கிரேடையும் கடந்த பல வருடங்களாக ராபிட் பெறவில்லை.

இந்த ஆண்டில் இந்தியாவை விட்டு சென்ற முக்கிய 5 கார்கள்!! நீங்க எத வாங்க ஆசப்பட்டீங்க?

இதற்கு பதிலாக ஸ்லாவியா செடான் காரினை அறிமுகப்படுத்த ஸ்கோடா திட்டமிட்டுள்ளது. கடைசியாக ராபிட் செடான் மாடலில் ஸ்பெஷல் மேட் எடிசன் அறிமுகப்படுத்தப்பட்டது. ராபிட்டில் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜினை தயாரிப்பு நிறுவனம் வழங்கி வந்தது. இதனுடன் மேனுவல் & ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்பட்டன.

இந்த ஆண்டில் இந்தியாவை விட்டு சென்ற முக்கிய 5 கார்கள்!! நீங்க எத வாங்க ஆசப்பட்டீங்க?

டொயோட்டா யாரிஸ்

செடான் கார்களின் ட்ரெண்ட் மெல்ல மெல்ல சரிந்து வருவதை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் இந்த 2021ஆம் ஆண்டில் அரங்கேறியுள்ள மற்றொரு விற்பனை நிறுத்தம், டொயோட்டா யாரிஸ் உடையது ஆகும். வெறும் மூன்றே வருடங்களில் விற்பனை நிறுத்தத்தை யாரிஸ் செடான் மாடல் சந்தித்துள்ளது.

இந்த ஆண்டில் இந்தியாவை விட்டு சென்ற முக்கிய 5 கார்கள்!! நீங்க எத வாங்க ஆசப்பட்டீங்க?

இந்தியாவில் பெரிதாக விற்பனையாகாத டொயோட்டா கார்களில் யாரிஸும் ஒன்றாக இருந்தது. யாரிஸின் இடத்தை நிரப்பும் விதத்தில் டொயோட்டா நிறுவனம் மாருதி சுஸுகி சியாஸின் அடிப்படையிலான ரீ-பேட்ஜ்டு காரை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெற்காசிய நாடுகளில் விற்பனையில் உள்ள இது பெல்டா என்கிற பெயரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிகிறது.

இந்த ஆண்டில் இந்தியாவை விட்டு சென்ற முக்கிய 5 கார்கள்!! நீங்க எத வாங்க ஆசப்பட்டீங்க?

ஃபோர்டு ஃபிகோ, ஃப்ரீஸ்டைல், அஸ்பியர்

ஈக்கோஸ்போர்ட், எண்டேவியர் போன்றவை சற்று வசதிமிக்கவர்கள் வாங்கக்கூடிய ஃபோர்டு கார்களாகவே இருந்தன. பட்ஜெட் ரக கார்களை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களை சென்றடைந்த ஃபோர்டு கார்களாக ஃபிகோ, ஃப்ரீஸ்டைல், அஸ்பியர் விளங்கின. ஃபிகோ குடும்பத்தின் ஒரு பகுதியாக விளங்கிய இந்த 3 கார்களும் ஒரே ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டன.

இந்த ஆண்டில் இந்தியாவை விட்டு சென்ற முக்கிய 5 கார்கள்!! நீங்க எத வாங்க ஆசப்பட்டீங்க?

ஒரே ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்படுவதால், ஒரே மாதிரியான பெட்ரோல் & டீசல் என்ஜின் தேர்வுகளை தான் இந்த 3 ஃபோர்டு கார்களும் கொண்டிருந்தன. கடந்த செப்டம்பர் மாதத்தில் தனது கார்களின் விற்பனையை நிறுத்தி கொள்வதற்கு சில வாரங்களுக்கு முன்பு தான் ஃபோர்டு நிறுவனம் ஃபிகோ ஹேட்ச்பேக்கில் 1.2 லிட்டர் ஆட்டோமேட்டிக் வெர்சனை அறிமுகப்படுத்தியது.

இந்த ஆண்டில் இந்தியாவை விட்டு சென்ற முக்கிய 5 கார்கள்!! நீங்க எத வாங்க ஆசப்பட்டீங்க?

ஃபோக்ஸ்வேகன் டி-ராக்

ஸ்கோடாவின் கூட்டணி நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் இந்த 2021இல் இந்திய சந்தையில் விற்பனை ரத்து செய்த மாடல்களுள் ஒன்று டி-ராக். டைகுன் காரை அறிமுகப்படுத்தும் வரையில் இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் ரூ.20 லட்சத்திற்குள் விற்பனை செய்த கார் டி-ராக் ஆகும். முற்றிலும் தயாரிக்கப்பட்ட நிலையில் சிபியூ (CBU) முறையில் இந்த எஸ்யூவி கார் விற்பனை செய்யப்பட்டது.

இந்த ஆண்டில் இந்தியாவை விட்டு சென்ற முக்கிய 5 கார்கள்!! நீங்க எத வாங்க ஆசப்பட்டீங்க?

டைகுனின் வருகை வரையில் விற்பனையில் இருந்த ஃபோக்ஸ்வேகன் டி-ராக்கில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் பொருத்தப்பட்டது. டிரான்ஸ்மிஷனுக்கு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்பட்டது. புதிய டைகுன் எஸ்யூவி மாடலின் விலை வெறும் ரூ.10.5 லட்சத்தில் இருந்தே துவங்குகிறது. அதிகப்பட்சமாக ரூ.17.5 லட்சங்கள் வரையில் உள்ளது.

Most Read Articles

English summary
Cars That Were Discontinued In 2021.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X