Just In
- 2 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 2 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 3 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 4 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
25 வருடங்களாக விற்பனையில் போர்ஷே பாக்ஸ்டர்...!! ஸ்பெஷல் எடிசனுடன் கொண்டாடும் போர்ஷே!
போர்ஷே நிறுவனம் அதன் ரோட்ஸ்டர் மாடலின் விற்பனையில் வெற்றிகரமாக 25 வருடத்தை நிறைவு செய்துள்ளது. இதனை கொண்டாடும் விதத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் பாக்ஸ்டர் 25வது ஆண்டு நிறைவு எடிசன் காரை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

வெறும் 1,250 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ள பாக்ஸ்டர் 25வது ஆண்டு நிறைவு எடிசன் போர்ஷேவின் 718 பாக்ஸ்டர் ஜிடிஎஸ் 4.0 மாடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

அதேநேரம் ஸ்டைலிங் வளைவுகள் 1993 டெட்ராய்டு மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட ஒரிஜினல் பாக்ஸ்டர் கான்செப்ட் மாடலில் இருந்து பெறப்பட்டுள்ளன. நான்கு தலைமுறைகளை கடந்து நிற்கும் போர்ஷே பாக்ஸ்டர் இதுவரையில் 357,000க்கும் அதிகமான யூனிட்கள் உலகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்பெஷல் எடிசனில் 4.0 லிட்டர் 6-சிலிண்டர் பாக்ஸர் என்ஜின் வழங்கப்படவுள்ளது. 6-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் மற்றும் 7-ஸ்பீடு ட்யுல்-க்ளட்ச் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் வழங்கப்படவுள்ள இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 400 பிஎஸ் பவரை காருக்கு வழங்கும் ஆற்றல் கொண்டது.

0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 4 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த லிமிடேட் எடிசன் காரை அதிகப்பட்சமாக மணிக்கு 293கிமீ வேகத்தில் இயக்கி செல்லலாம் என போர்ஷே நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜிடி சில்வர் மெட்டாலிக் நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் எடிசனின் முன்பக்க அப்ரான், மோனோ பார் உடன் உள்ள பக்கவாட்டு காற்று ஏற்பான்கள் மற்றும் 20-இன்ச் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை பளபளக்கும் பழுப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது.

‘போர்ஷே' & ‘பாக்ஸ்டர் 25' முத்திரைகள் அடர் நீல மெட்டாலிக் மற்றும் கராரா வெள்ளை மெட்டாலிக் நிறங்களில் காட்சியளிக்கின்றன. எரிபொருள் நிரப்பும் பகுதியின் மூடி அலுமினியத்தால் செய்யப்பட்டிருக்கலாம். இது மட்டுமின்றி பளபளக்கும் எக்ஸாஸ்ட் குழாய்களும் அலுமினியத்தின் நிறத்தில் தென்படுகின்றன.

முன்பக்க கண்ணாடியை சுற்றிலும் பளிச்சிடும் கருப்பு நிறத்தால் பார்டர் வழங்கப்பட்டுள்ளது. உட்பக்க கேபின் போர்டியாக்ஸ் லெதரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பாக்ஸ்டர் 25 முத்திரையுடன் மடக்கக்கூடிய மேற்கூரை சிவப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது.

உட்புறத்தில் வழங்கப்பட்டுள்ள அம்சங்கள் என்று பார்த்தால், 14 விதங்களில் எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஸ்போர்ட்ஸ் இருக்கைகள், ‘பாக்ஸ்டர் 25' எழுத்துகள் பொறிக்கப்பட்ட கதவு சில் ட்ரிம்கள் மற்றும் ஹீட்டட் ஜிடி பல செயல்பாட்டு ஸ்போர்ட்ஸ் லெதர் ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவற்றை சொல்லலாம்.

இவற்றுடன் 10மிமீ தாழ்வான ஆக்டிவ் சஸ்பென்ஷன் நிர்வாக ஸ்போர்ட்ஸ் சஸ்பென்ஷன் மற்றும் மெக்கானிக்கல் லிமிடேட்-ஸ்லிப் டிஃப்ரென்ஸியல் உடன் டார்க் வெக்டரிங் உள்ளிட்டவற்றையும் இந்த லிமிடேட் எடிசன் ஏற்றுள்ளது.

போர்ஷே பாக்ஸ்டர் 25வது ஆண்டு நிறைவு எடிசன் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக தயாரித்து வழங்கப்படவுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிசன் போர்ஷே டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு 2021 மார்ச் மாத இறுதியில் இருந்து பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.