இவ்ளோ அதிக விலையா! Porsche Macan ஆடம்பர கார் இந்தியாவில் அறிமுகம்... விலைய மட்டும் கேட்காதீங்க!

புதிய போர்ஷே மசான் சொகுசு எஸ்யூவி கார் ரக கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இக்கார் குறித்த கூடுதல் விபரத்தையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இவ்ளோ அதிக விலையா! Porsche Macan ஆடம்பர கார் இந்தியாவில் அறிமுகம்... விலைய மட்டும் கேட்காதீங்க!

பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான போர்ஷே, புதிய மசான் சொகுசு காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இது ஓர் ஆடம்பர அம்சங்கள் கொண்ட எஸ்யூவி ரக கார் மாடலாகும். மூன்று விதமான தேர்வுகளில் இந்த சொகுசு கார் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும்.

இவ்ளோ அதிக விலையா! Porsche Macan ஆடம்பர கார் இந்தியாவில் அறிமுகம்... விலைய மட்டும் கேட்காதீங்க!

மசான், மசான் எஸ் மற்றும் மசான் ஜிடிஎஸ் ஆகிய மூன்று விதமான தேர்வுகளிலேயே புதிய மசான் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இத்துடன் பிரத்யேகமாக 14 விதமான நிற தேர்வுகளையும் இக்கார் மாடலுக்கு வழங்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனம், இக்காரை மட்டுமில்லைங்க புதிதாக எலெக்ட்ரிக் வெர்ஷன் டேகான் காரையும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

இவ்ளோ அதிக விலையா! Porsche Macan ஆடம்பர கார் இந்தியாவில் அறிமுகம்... விலைய மட்டும் கேட்காதீங்க!

போர்ஷே மசான் ஒவ்வொரு தேர்வும் வெவ்வேறு விதமான திறன் வெளிப்பாட்டைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. மசான் 195 கிலோவாட் திறனை வெளியேற்றும் திறன் கொண்டது. இது 265 பிஎஸ் பவருக்கு இணையானது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை வெறும் 6.2 செகண்டுகளிலேயே இத்திறன் வாயிலாக தொட்டுவிட முடியும்.

இவ்ளோ அதிக விலையா! Porsche Macan ஆடம்பர கார் இந்தியாவில் அறிமுகம்... விலைய மட்டும் கேட்காதீங்க!

இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 232 கிமீ ஆகும். மசான் கார் மாடலின் உயர்நிலை வேரியண்டாக இருக்கும் மசான் ஜிடிஎஸ் அதிகபட்சமாக 324 கிலோவாட் திறனை வெளியேற்றும். இது 440 பிஎஸ் பவருக்கு இணையாகும். இத்தகைய உச்சபட்ச திறனுக்காக 2.9 லிட்டர் வி6 பைடர்போ எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவ்ளோ அதிக விலையா! Porsche Macan ஆடம்பர கார் இந்தியாவில் அறிமுகம்... விலைய மட்டும் கேட்காதீங்க!

இந்த எஞ்ஜின் வெறும் 4.3 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறனை கொண்டுள்ளது. இந்த தேர்வின் உச்சபட்ச வேகம் மணிக்கு 272 கிமீ ஆகும். இதற்கு முந்தைய இடத்தில் இருக்கும், நடு நிலை தேர்வான மாசன் எஸ் தேர்வில் 2.9 லிட்டர் வி6 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவ்ளோ அதிக விலையா! Porsche Macan ஆடம்பர கார் இந்தியாவில் அறிமுகம்... விலைய மட்டும் கேட்காதீங்க!

இந்த எஞ்ஜின் 280 கிலோவாட் (380 பிஎஸ் பவரை) வெளியேற்றும் திறனைக் கொண்டது. இது 4.6 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும். ஆரம்ப நிலை வேரியண்டைக் காட்டிலும் மற்ற இரு தேர்வுகளும் அதி திறன் வெளியேற்றம் கொண்டவையாக காட்சியளிக்கின்றன.

இவ்ளோ அதிக விலையா! Porsche Macan ஆடம்பர கார் இந்தியாவில் அறிமுகம்... விலைய மட்டும் கேட்காதீங்க!

இந்த எஞ்ஜின் உடன் 7 ஸ்பீடு ட்யூவல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் (PDK) மற்றும் டிராக்ஷன் மேனேஜ்மென்ட் (PTM) ஆகிய தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இந்த கியர்பாக்ஸ் உடன் அனைத்து வீல்களுக்கும் இயங்கும் திறனை எஞ்ஜின்கள் வழங்குகின்றன. இது வழக்கமான அம்சமாகும். ஆகையால், மூன்று தேர்வுகளும் அனைத்து வீல் இயங்கும் திறன் கொண்டவையாக காட்சியளிக்கின்றன.

இவ்ளோ அதிக விலையா! Porsche Macan ஆடம்பர கார் இந்தியாவில் அறிமுகம்... விலைய மட்டும் கேட்காதீங்க!

முன்னதாக விற்பனையில் இருந்த மாசன் கார் மாடலைக் காட்டிலும் லேசான மாற்றங்களுடன் புதிய மசான் விற்பனைக்கு வந்திருக்கின்றது. ஆம், தற்போது விற்பனைக்கு வந்திருப்பது புதுப்பிக்கப்பட்ட வெர்ஷன் மசான் ஆகும். இதன் முகப்பு மற்றும் பின் பக்கம் என பல பகுதிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இவ்ளோ அதிக விலையா! Porsche Macan ஆடம்பர கார் இந்தியாவில் அறிமுகம்... விலைய மட்டும் கேட்காதீங்க!

உயர் நிலை வேரியண்டான ஜிடிஎஸ் தேர்வின் மைய மூக்கு பகுதியில் புதிய மாற்றமாக கருப்பு நிற அணிகலன் பொருத்தப்பட்டிருக்கின்றது. இத்துடன், புதிய எல்இடி மின் விளக்குகள், டைனமிக் மின் விளக்குகள் மற்றும் ஸ்போர்ட் டிசைன் எக்ஸ்டீரியர் மிர்ரர் ஆகியவற்றையும் நிறுவனம் புதிய மசானில் வழங்கியிருக்கின்றது. இவை வழக்கமான அம்சங்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், அனைத்து தேர்வு மசானிலும் இது இடம் பெற்றிருக்கின்றது.

இவ்ளோ அதிக விலையா! Porsche Macan ஆடம்பர கார் இந்தியாவில் அறிமுகம்... விலைய மட்டும் கேட்காதீங்க!

புதிய மசான் நிறுவனத்தின் அனைத்து விற்பனையாளர்களிடத்திலும் விற்பனைக்குக் கிடைக்கும். இத்துடன், கூடுதலாக நான்கு புதிய ஷோரூம்களை இந்தியாவில் தொடங்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. 2022ம் ஆண்டின் முதல் அரையாண்டிற்குள் புதிய விற்பனையகங்கள் நாட்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. வாடிக்கையாளர்களை எளிதில் கவரும் வகையில் இந்த விற்பனையகங்களை விரிவாக்கும் செய்யும் பணியில் போர்ஷே களமிறங்கியிருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #போர்ஷே #porsche
English summary
Porsche launches new macan luxury suv in india at rs 83 21 lakh
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X