குற்றவாளியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நிஸான் ஜிடி-ஆர்!! அரசாங்க வாகனமாக மாறிய கதை...!

குற்ற சம்பவத்தின் போது கைப்பற்றப்பட்ட நிஸான் ஜிடி-ஆர் கார் ஒன்று போர்ச்சுகல் நாட்டின் தேசிய குடியரசு பாதுகாவலர்களின் வாகன படையில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

குற்றவாளியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நிஸான் ஜிடி-ஆர்!! அரசாங்க வாகனமாக மாறிய கதை...!

விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்களை பயன்படுத்தி குற்ற சம்பவங்களில் ஈடுப்படுவது நம் நாட்டை பொறுத்தவரையில் அரிதான ஒன்று. ஆனால் வெளிநாடுகளில், குறிப்பாக பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளில் சர்வ சாதாரணமாக நடக்கும் ஒன்றாகும்.

குற்றவாளியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நிஸான் ஜிடி-ஆர்!! அரசாங்க வாகனமாக மாறிய கதை...!

அவ்வாறான குற்ற சம்பவத்தின் போது கைப்பற்றப்பட்ட நிஸான் ஜிடி-ஆர் காரை தான் போர்ச்சுகல் அரசாங்கம் நல்ல விஷயத்திற்காக பயன்படுத்தவுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் விதத்தில், காரின் படத்துடன் போர்ச்சுக்கல் நாட்டின் தேசிய குடியரசு பாதுகாப்பு படையின் முகப்புத்தக்க பக்கத்தில் பதிவு ஒன்று பதிவிடப்பட்டுள்ளது.

குற்றவாளியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நிஸான் ஜிடி-ஆர்!! அரசாங்க வாகனமாக மாறிய கதை...!

இந்த பதிவில், இந்த நிஸான் ஜிடி-ஆர் ஸ்போர்ட்ஸ் கார் விரைவாக ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு உடற் உறுப்புகளை கொண்டுசெல்ல பயன்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றவாளியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நிஸான் ஜிடி-ஆர்!! அரசாங்க வாகனமாக மாறிய கதை...!

ஏனெனில் இவ்வாறான போக்குவரத்துகள் பெரும்பாலும் குறைவான நேரத்தில் அதிக தூரம் செல்லக்கூடியதாக இருக்கும். இதனால் இத்தகைய பயன்பாட்டிற்கு அதி வேகத்திற்கு பெயர் பெற்ற நிஸான் ஜிடி-ஆர் கார் மிகவும் ஏற்ற வாகனமே.

குற்றவாளியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நிஸான் ஜிடி-ஆர்!! அரசாங்க வாகனமாக மாறிய கதை...!

மேலும் இந்த பதிவில் இதுவரை 2,836 உடற் உறுப்பு போக்குவரத்துகளை மேற்கொண்டுள்ளதாகவும், இவற்றிற்காக இதுவரையில் சுமார் 5 லட்சம் கிமீ தூரம் பயணித்துள்ளதாகவும் போர்ச்சுகலின் தேசிய குடியரசு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குற்றவாளியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நிஸான் ஜிடி-ஆர்!! அரசாங்க வாகனமாக மாறிய கதை...!

மேலும், இந்த ஜப்பானிய ஸ்போர்ட்ஸ் கார், கைப்பற்றப்பட்ட மற்றொரு காருடன் போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் மற்றும் போர்டோ நகரங்களில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. முன்பக்கத்தை வைத்து பார்க்கும்போது, இந்த குறிப்பிட்ட மாடல் 2011ல் இருந்து 2017ஆம் ஆண்டிற்குள்ளாக வாங்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

குற்றவாளியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நிஸான் ஜிடி-ஆர்!! அரசாங்க வாகனமாக மாறிய கதை...!

இருப்பினும் உரிமையாளரே எளிதாக அடையாளம் காண முடியாதபடி, ஸ்டிக்கர்களினால் உடற் உறுப்பு போக்குவரத்திற்கு ஏற்ற வாகனமாக இந்த ஜிடி-ஆர் காரின் தோற்றம் மாற்றப்பட்டுள்ளது. நிஸான் ஜிடி-ஆர் போன்ற சூப்பர் கார்கள் இவ்வாறான பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுவது ஒன்றும் புதிதல்ல.

குற்றவாளியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நிஸான் ஜிடி-ஆர்!! அரசாங்க வாகனமாக மாறிய கதை...!

சமீபத்தில் கூட இத்தாலியன் போலீஸ் லம்போர்கினி கல்லார்டோ காரை ரோமில் இருந்து கிட்டத்தட்ட 500கிமீ தொலைவில் உள்ள படுவா நகரத்திற்கு கிட்னியை எடுத்த செல்ல பயன்படுத்தியதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

குற்றவாளியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நிஸான் ஜிடி-ஆர்!! அரசாங்க வாகனமாக மாறிய கதை...!

இந்த தொலைவை இந்த லம்போர்கினி கார் சராசரியாக 145kmph என்ற வேகத்தில் சென்று, வெறும் இரண்டு மணிநேரத்தில் எட்டியது. 3.8 லிட்டர் வி6 என்ஜின் உடன் விற்பனை செய்யப்படுகின்ற நிஸான் ஜிடி-ஆர் ஸ்போர்ட்ஸ் காரின் விலை சர்வதேச சந்தைகளில் ரூ.2.2 கோடி என்ற அளவில் உள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Portugal’s National Guard Turns Seized Nissan GT-R Into An Organ Transporter. Read In Tamil.
Story first published: Tuesday, March 23, 2021, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X