டெஸ்லா கார்களுக்கே சவால்விடும் இந்திய எலக்ட்ரிக் செடான் கார்!! பெயர், எக்ஸ்டிங்ஷன் எம்கே1...

பிரவைக் டைனாமிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதன் இவி எக்ஸ்டிங்ஷன் எம்கே1 என்ற எலக்ட்ரிக் காரின் உட்புற கேபினை பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளது. அவற்றை படங்களுடன் இந்த செய்தியில் பார்ப்போம்.

டெஸ்லா கார்களுக்கே சவால்விடும் இந்திய எலக்ட்ரிக் செடான் கார்!! பெயர், எக்ஸ்டிங்ஷன் எம்கே1...

பெங்களூரை சேர்ந்த இவி ஸ்டார்ட்அப் நிறுவனமான பிரவைக் டைனாமிக்ஸ் அதன் முதல் எலக்ட்ரிக் வாகனமாக எக்ஸ்டிங்ஷன் எம்கே1 காரை கொண்டுவருகிறது. முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த எலக்ட்ரிக் செடான் காரை விபரங்கள் கடந்த 2020 டிசம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டன.

டெஸ்லா கார்களுக்கே சவால்விடும் இந்திய எலக்ட்ரிக் செடான் கார்!! பெயர், எக்ஸ்டிங்ஷன் எம்கே1...

அதனை தொடர்ந்து தற்போது எக்ஸ்டிங்ஷன் எம்கே1 காரின் உட்புற கேபினின் ஸ்கெட்ச் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த படங்களின் மூலம் உட்புறத்தில் இந்த இவி கார் கார்பன்-டை-ஆக்ஸைடை பத்து மடங்கிற்கு மேல் குறைக்கும் பிஎம் 2.5 காற்று வடிக்கட்டியை பெற்றுள்ளதை பார்க்க முடிகிறது.

டெஸ்லா கார்களுக்கே சவால்விடும் இந்திய எலக்ட்ரிக் செடான் கார்!! பெயர், எக்ஸ்டிங்ஷன் எம்கே1...

பின்பக்க பயணிகளுக்கும் சேர்த்து வடிக்கட்டி அனைத்து பயணிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 4 நபர்கள் இந்த காரில் அமரலாம். முன் இருக்கை பயணிகளுக்கும், பின் இருக்கை பயணிகளுக்கும் இடையில் பெரிய அளவில் இடைவெளி இருப்பதை இந்த ஸ்கெட்ச் படங்கள் வெளிக்காட்டுகின்றன.

டெஸ்லா கார்களுக்கே சவால்விடும் இந்திய எலக்ட்ரிக் செடான் கார்!! பெயர், எக்ஸ்டிங்ஷன் எம்கே1...

காற்று வடிக்கட்டி மட்டுமில்லாமல் பின் இருக்கை பயணிகளுக்கும் திரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் சவுகரியத்திற்காக பின் இருக்கைகள் நன்கு விசாலமானதாக வழங்கப்பட்டுள்ளன. வருடத்திற்கு 2,500 எக்ஸ்டிங்ஷன் எம்கே1 எலக்ட்ரிக் செடான் காரை விற்பனை செய்ய பிரவைக் டைனாமிக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

டெஸ்லா கார்களுக்கே சவால்விடும் இந்திய எலக்ட்ரிக் செடான் கார்!! பெயர், எக்ஸ்டிங்ஷன் எம்கே1...

96kWh பேட்டரியுடன் வழங்கப்படவுள்ள இந்த எலக்ட்ரிக் கார் அதிகப்பட்சமாக 200 எச்பி பவரில் இயங்கக்கூடியதாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 5.4 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த கார் அதிகப்பட்சமாக 196kmph வேகத்தில் இயங்கும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெஸ்லா கார்களுக்கே சவால்விடும் இந்திய எலக்ட்ரிக் செடான் கார்!! பெயர், எக்ஸ்டிங்ஷன் எம்கே1...

மேலும் சிங்கிள்-முழு சார்ஜில் இந்த கார் 500கிமீ தூரம் வரையில் இயங்கும் எனவும் பிரவைக் டைனாமிக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. இத்தகைய திறன்களினால் எலக்ட்ரிக் வாகன உலகின் எக்ஸ்டிங்ஷன் எம்கே1 வேகமாக பிரபலமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்லா கார்களுக்கே சவால்விடும் இந்திய எலக்ட்ரிக் செடான் கார்!! பெயர், எக்ஸ்டிங்ஷன் எம்கே1...

குறிப்பாக 500 ரேஞ்ச் என்பது தற்போதைக்கு எந்தவொரு இந்திய எலக்ட்ரிக் வாகன நிறுவனமும் தொடாத உயரமாகும். 500 ரேஞ்ச்சை கொண்டிருக்கும் மற்ற முன்னணி கார் பிராண்ட்களின் தயாரிப்புகள் கூட விரல் விட்டு எண்ணிவிடும் அளவிலேயே உள்ளன.

டெஸ்லா கார்களுக்கே சவால்விடும் இந்திய எலக்ட்ரிக் செடான் கார்!! பெயர், எக்ஸ்டிங்ஷன் எம்கே1...

ஃபோக்ஸ்வேகன் ஐடி.3 சிங்கிள்-முழு சார்ஜில் 500கிமீ தூரத்தை அரிதாக எட்டுகிறது. டெஸ்லா மாடல் 3-இன் ரேஞ்ச் 507கிமீ ஆகும். இந்தியாவை பொறுத்தவரையில் தற்சமயம் விற்பனையில் உள்ள ஹூண்டாய் கோனா இவி காரின் ரேஞ்ச் 452கிமீ-ஆக உள்ளது. எக்ஸ்டிங்ஷன் எம்கே1-இன் அறிமுகம் இந்த 2021ஆம் ஆண்டில் இருக்கலாம்.

Most Read Articles

English summary
Pravaig Dynamics reveals interior details of its Made in India EV Extinction MK1
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X