புதிய கார் வாங்க போறீங்களா? தற்சமயம் அதிகம் விற்பனையாகும் ஹேட்ச்பேக் கார் எதுவென்று தெரிஞ்சிக்கிட்டு போங்க!!

கடந்த 2021 ஏப்ரலில் விற்பனை செய்யப்பட்ட ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய கார் வாங்க போறீங்களா? தற்சமயம் அதிகம் விற்பனையாகும் ஹேட்ச்பேக் கார் எதுவென்று தெரிஞ்சிக்கிட்டு போங்க!!

கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட ப்ரீமியம் ஹேட்ச்பேக் காராக மாருதி பலேனோ முதலிடம் பிடித்துள்ளது. மொத்தம் 16,384 பலேனோ கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

புதிய கார் வாங்க போறீங்களா? தற்சமயம் அதிகம் விற்பனையாகும் ஹேட்ச்பேக் கார் எதுவென்று தெரிஞ்சிக்கிட்டு போங்க!!

ஆனால் இதற்கு முந்தைய 2021 மார்ச்சில் 21,217 பலேனோ கார்கள் விற்கப்பட்டு இருந்தன. இருப்பினும் இந்த எண்ணிக்கை இந்த வரிசையில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள டாடா அல்ட்ராஸை காட்டிலும் கிட்டத்தட்ட 9,700 யூனிட்கள் அதிகமாகும்.

புதிய கார் வாங்க போறீங்களா? தற்சமயம் அதிகம் விற்பனையாகும் ஹேட்ச்பேக் கார் எதுவென்று தெரிஞ்சிக்கிட்டு போங்க!!

ஏனெனில் கடந்த மாதத்தில் 6649 அல்ட்ராஸ் கார்களையே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதன் விற்பனையும் முந்தைய மார்ச் மாதத்தை காட்டிலும் 12 சதவீதம் குறைவாகும்.

புதிய கார் வாங்க போறீங்களா? தற்சமயம் அதிகம் விற்பனையாகும் ஹேட்ச்பேக் கார் எதுவென்று தெரிஞ்சிக்கிட்டு போங்க!!
Rank Model

Apr'21

Mar'21 Growth (%)
1 Maruti Baleno 16,384 21,217 -23
2 Tata Altroz 6,649 7,550 -12
3 Hyundai i20 5,002 9,045 -45
4 Toyota Glanza 2,182 2,989 -27
5 Volkswagen Polo 1,197 1,888 -37
6 Honda Jazz 830 707 17
7 Ford Freestyle 635 689 -8

Source: Autopunditz

வருடம்-வருடம் ஒப்பீடு இல்லை. ஏனெனில் கொரோனாவினால் கடந்த ஆண்டு ஏப்ரலில் எந்தவொரு வாகனமும் விற்பனை செய்யப்படவில்லை. கடந்த ஏப்ரலில் அதிகம் விற்பனையான ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்களின் வரிசையில் மூன்றாவது இடத்தில் ஹூண்டாய் ஐ20 உள்ளது.

புதிய கார் வாங்க போறீங்களா? தற்சமயம் அதிகம் விற்பனையாகும் ஹேட்ச்பேக் கார் எதுவென்று தெரிஞ்சிக்கிட்டு போங்க!!

கடந்த மாதத்தில் ஏறக்குறைய 5 ஆயிரம் ஐ20 கார்கள் விற்கப்பட்டுள்ளன. நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் டொயோட்டா க்ளான்ஸா மற்றும் ஃபோக்ஸ்வேகன் போலோ கார்கள் உள்ளன. இவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை முறையே 2182 மற்றும் 1197 ஆகும்.

புதிய கார் வாங்க போறீங்களா? தற்சமயம் அதிகம் விற்பனையாகும் ஹேட்ச்பேக் கார் எதுவென்று தெரிஞ்சிக்கிட்டு போங்க!!

இவற்றிற்கு அடுத்துள்ள ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்கள் அவ்வளவாக விற்பனையில் சோபிப்பதில்லை. ஏனெனில் இவற்றின் விற்பனை ஒரு மாதத்திற்கு 1000 யூனிட்களை கூட பெரும்பாலும் கடப்பதில்லை.

புதிய கார் வாங்க போறீங்களா? தற்சமயம் அதிகம் விற்பனையாகும் ஹேட்ச்பேக் கார் எதுவென்று தெரிஞ்சிக்கிட்டு போங்க!!

இருப்பினும் ஆறாவது இடத்தில் உள்ள ஹோண்டா ஜாஸ் கார்களின் விற்பனை தற்போதைய கொரோனா சூழலிலும் 2021 மார்ச் மாதத்தை காட்டிலும் கடந்த ஏப்ரலில் 17 சதவீதமாக இருந்துள்ளது. பிரபலமான ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்களில் நேர்மறையான சதவீதத்தை விற்பனையில் பெற்றது ஜாஸ் மட்டுமே.

புதிய கார் வாங்க போறீங்களா? தற்சமயம் அதிகம் விற்பனையாகும் ஹேட்ச்பேக் கார் எதுவென்று தெரிஞ்சிக்கிட்டு போங்க!!

ஏழாவது இடத்தில் உள்ள ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார்களின் விற்பனையும் பெரிய அளவில் சரியவில்லை. தற்போதைக்கு இந்த ஏழு மாடல்கள் மட்டுமே ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்களாக இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன.

புதிய கார் வாங்க போறீங்களா? தற்சமயம் அதிகம் விற்பனையாகும் ஹேட்ச்பேக் கார் எதுவென்று தெரிஞ்சிக்கிட்டு போங்க!!

ஒட்டு மொத்தமாக கடந்த 2021 ஏப்ரல் மாதத்தில் 32,879 ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த மார்ச் மாதத்தில் 44,085 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஏப்ரல் மாதத்துடையது 25 சதவீதம் குறைவாகும்.

Most Read Articles

மேலும்... #விற்பனை #sales
English summary
Premium Hatchback Sales April. Maruti Baleno, Altroz, Hyundai i20 In Top.
Story first published: Wednesday, May 5, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X