இந்தியாவில் வாடிக்கையாளர்கள் அதிகளவில் தேர்வு செய்யும் ப்ரீமியம் ஹேட்ச்பேக் எது தெரியுமா? ஜூன் மாத விற்பனை

இந்திய சந்தையில் முக்கியமான பிரிவுகளுள் ஒன்றாக விளங்கும் ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்களின் விற்பனை கடந்த சில வருடங்களாக பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது.

இந்தியாவில் வாடிக்கையாளர்கள் அதிகளவில் தேர்வு செய்யும் ப்ரீமியம் ஹேட்ச்பேக் எது தெரியுமா? ஜூன் மாத விற்பனை

இந்தியாவில் கார்களை விற்பனை செய்யும் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நிறுவனங்களுள் குறைந்தது ஒரு ப்ரீமியம் ஹேட்ச்பேக் காரையாவது விற்பனை செய்து வருகின்றன.

இந்தியாவில் வாடிக்கையாளர்கள் அதிகளவில் தேர்வு செய்யும் ப்ரீமியம் ஹேட்ச்பேக் எது தெரியுமா? ஜூன் மாத விற்பனை

இதில் தென்கொரிய நிறுவனமான ஹூண்டாய், ஐ20 மாடலின் மூன்றாம் தலைமுறையை கடந்த ஆண்டில் விற்பனைக்கு கொண்டுவந்தது. அப்கிரேடினால் புதிய ஐ20-இன் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் வாடிக்கையாளர்கள் அதிகளவில் தேர்வு செய்யும் ப்ரீமியம் ஹேட்ச்பேக் எது தெரியுமா? ஜூன் மாத விற்பனை

இதனால் வரும் வாரங்களில் ஐ20-இன் புதிய மலிவான ஆரம்ப நிலை வேரியண்ட்டை அறிமுகப்படுத்த ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய வேரியண்ட் ஏற்கனவே டீலர்ஷிப் வளாகங்களை வந்தடைய துவங்கிவிட்டது.

இந்தியாவில் வாடிக்கையாளர்கள் அதிகளவில் தேர்வு செய்யும் ப்ரீமியம் ஹேட்ச்பேக் எது தெரியுமா? ஜூன் மாத விற்பனை

இருப்பினும் தற்போதைக்கு அதிகளவில் விற்பனையாகும் ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார் என்றால் அது மாருதி சுஸுகி பலேனோ தான். இந்த பி2-ஹேட்ச்பேக் பிரிவிலும் மாருதி சுஸுகி நிறுவனம் தனது ஆதிக்கத்தை தொடர்ந்துள்ளது.

இந்தியாவில் வாடிக்கையாளர்கள் அதிகளவில் தேர்வு செய்யும் ப்ரீமியம் ஹேட்ச்பேக் எது தெரியுமா? ஜூன் மாத விற்பனை

கடந்த 2021 ஜூன் மாதத்தில் மொத்தம் 14,701 பலேனோ கார்கள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை 2020 ஜூன் மாதத்தை காட்டிலும் சுமார் 242 சதவீதம் அதிகமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் வெறும் 4,300 பலேனோ கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்தியாவில் வாடிக்கையாளர்கள் அதிகளவில் தேர்வு செய்யும் ப்ரீமியம் ஹேட்ச்பேக் எது தெரியுமா? ஜூன் மாத விற்பனை

டாடா அல்ட்ராஸ் இந்த வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டாடா அல்ட்ராஸ் மற்ற ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்களுக்கு விற்பனையில் சரியான போட்டி மாடலாக விளங்கி வருகிறது.

இந்தியாவில் வாடிக்கையாளர்கள் அதிகளவில் தேர்வு செய்யும் ப்ரீமியம் ஹேட்ச்பேக் எது தெரியுமா? ஜூன் மாத விற்பனை

இதற்கு ஓர் உதாரணமே இதன் கடந்த ஜூன் மாத விற்பனை ஆகும். கடந்த மாதத்தில் 6,350 அல்ட்ராஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2020 ஜூன் மாதத்தில் 3,104 அல்ட்ராஸ் கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்தியாவில் வாடிக்கையாளர்கள் அதிகளவில் தேர்வு செய்யும் ப்ரீமியம் ஹேட்ச்பேக் எது தெரியுமா? ஜூன் மாத விற்பனை

அல்ட்ராஸின் தொடர் விற்பனை முன்னேற்றத்திற்கு அதன் உலகளாவிய என்கேப் மோதல் சோதனையின் முடிவுகள் முக்கியமான காரணங்களாக விளங்குகின்றன. ஏனெனில் இந்த சோதனையில் முழு 5-நட்சத்திரங்களையும் இந்த டாடா தயாரிப்பு வாகனம் பெற்று ஆச்சிரியப்படுத்தி இருந்தது.

இந்தியாவில் வாடிக்கையாளர்கள் அதிகளவில் தேர்வு செய்யும் ப்ரீமியம் ஹேட்ச்பேக் எது தெரியுமா? ஜூன் மாத விற்பனை

ஹூண்டாய் ஐ20, அல்ட்ராஸை காட்டிலும் மிகவும் சில யூனிட்கள் மட்டுமே குறைவாக, 6,333 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இந்த லிஸ்ட்டில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. 2020 ஜூனில் ஐ20-இன் விற்பனை எண்ணிக்கை 2,718 ஆகும்.

Rank Model June 2021 June 2020 Growth (%)
1 Maruti Baleno 14,701 4,300 242
2 Tata Altroz 6,350 3,104 105
3 Hyundai i20 6,333 2,718 133
4 Toyota Glanza 2,586 914 182.9
5 Volkswagen Polo 1,303 1,228 6.1
6 Honda Jazz 243 0 -

நான்காவது இடத்தில் யாரும் எதிர்பார்க்காத மாடலாக டொயோட்டா க்ளான்ஸா உள்ளது.

இந்தியாவில் வாடிக்கையாளர்கள் அதிகளவில் தேர்வு செய்யும் ப்ரீமியம் ஹேட்ச்பேக் எது தெரியுமா? ஜூன் மாத விற்பனை

மாருதி பலேனோவின் ரீபேட்ஜ்டு வெர்சனான க்ளான்ஸா 2020 ஜூனில் வெறும் 914 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. ஆனால் கடந்த மாதத்தில் 2,586 க்ளான்ஸா கார்களை டொயோட்டா விற்பனை செய்துள்ளது. இந்த லிஸ்ட்டில் கடைசி இரு இடங்களில் ஃபோக்ஸ்வேகன் போலோ (1,303) மற்றும் ஹோண்டா ஜாஸ் (243) கார்கள் உள்ளன.

Most Read Articles
மேலும்... #விற்பனை #sales
English summary
Premium Hatchback Cars Sales In June 2021. Baleno, i20, Altroz, Polo, Glanza.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X