இது வானத்தில் பறக்காது... கட்டிட கலைஞர் உருவாக்கிய வித்தியாசமான வாகனம்... சூப்பர் திறமை!!

கட்டிட கலைஞர் ஒருவர் ரஃபேல் போர் விமானத்தின் உருவத்திலான வாகனத்தை உருவாக்கியிருக்கின்றார். இந்த வாகனம் பற்றிய கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

இது வானத்தில் பறக்காது... கட்டிட கலைஞர் உருவாக்கிய வித்தியாசமான வாகனம்... சூப்பர் திறமை!!

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் கட்டிடக் கலைஞர் அதிநவீன போர் விமானமான ரஃபேர் ஏர்கிராஃப்டை தழுவி ஓர் வாகனத்தை வடிவமைத்திருக்கின்றார். இந்த வாகனத்திற்கு 'ராம் பால் ஏர்லைன்ஸ்' எனும் பெயரை அவர் வைத்திருக்கின்றார். ஆனால், நெட்டிசன்கள் சிலரோ, ரஃபேல் போர் விமானத்தை தழுவி இவ்வாகனம் உருவாக்கப்பட்டிருக்கின்ற காரணத்தினால் 'பஞ்சாப் ரஃபேல்' என்ற பெயரை வைத்திருக்கின்றனர்.

இது வானத்தில் பறக்காது... கட்டிட கலைஞர் உருவாக்கிய வித்தியாசமான வாகனம்... சூப்பர் திறமை!!

பஞ்சாப் மாநிலத்தின் பதிண்டா பகுதியைச் சேர்ந்தவர் ராம்பால் பெஹ்னிவல். இவரே விமானம் அடிப்படையிலான சாலையில் செல்ல கூடிய வாகனத்தை உருவாக்கிய கட்டிடக் கலைஞர் ஆவார். இவர் உருவாக்கியிரு்கும் இந்த வாகனம் மணிக்கு 15 கிமீ முதல் 20 கிமீ வரையிலான வேகத்தில் பயணிக்கக் கூடியது.

இது வானத்தில் பறக்காது... கட்டிட கலைஞர் உருவாக்கிய வித்தியாசமான வாகனம்... சூப்பர் திறமை!!

இதற்காக எந்த வாகனத்தின் எஞ்ஜினை அவர் பயன்படுத்தியிருக்கின்றார் என்பது பற்றிய தகவல் வெளி வரவில்லை. இந்த வாகனத்தை உருவாக்குவதற்காக அவர் சுமார் 3 லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது. அண்மையில், ஏஎன்ஐ செய்தி தளத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இத்தகவலை அவரே தெரிவித்தார்.

இது வானத்தில் பறக்காது... கட்டிட கலைஞர் உருவாக்கிய வித்தியாசமான வாகனம்... சூப்பர் திறமை!!

ஸ்டியரிங் வீல், முன் பக்க கண்ணாடி மற்றும் சைடு மிர்ரர் என அனைத்து பாகங்களையுமே கஸ்டமைசேஷன் வாயிலாக பெற்றே ராம்பால் பயன்படுத்தியிருக்கின்றார். எனவேதான் இத்தகைய அதிகபட்ச செலவு இந்த வாகனத்தை கட்டமைக்க அவருக்கு ஏற்பட்டிருக்கின்றது.

இது வானத்தில் பறக்காது... கட்டிட கலைஞர் உருவாக்கிய வித்தியாசமான வாகனம்... சூப்பர் திறமை!!

இந்த வாகனத்திற்கு அவர் மேற்கூரையை வழங்கவில்லை. விமானத்தின் தோற்றத்தை சீர்குலைத்துவிடும் என்ற நோக்கத்திற்காக இதனை அவர் நிறுவவில்லை என கூறப்படுகின்றது. தற்போது இவ்வாகனத்தைக் கொண்டு உள்ளூர் சிறுவர்கள் மற்றும் வாகன ஆர்வலர்களை மகிழ்விக்கும் வகையில் ஜாலி ரைடு செய்து வருகின்றார் ராம்பால்.

இது வானத்தில் பறக்காது... கட்டிட கலைஞர் உருவாக்கிய வித்தியாசமான வாகனம்... சூப்பர் திறமை!!

விரைவில், வாகனத்தைக் காட்சிப் பொருளாக மாற்றவும் அவர் திட்டமிட்டிருக்கின்றார். அண்டை மற்றும் எதிரி நாடுகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வந்த வேலையில் டஸால்ட் நிறுவனத்தன் அதி-திறன் வாய்ந்த ரஃபேல் போர் விமானங்களை இந்திய அரசு தனது படையில் சேர்த்தது.

2020 வருடத்தின் செப்டம்பர் மாதத்திலேயே இவ்வாகனங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டன. இவ்விமானத்தின் அடிப்படை உருவத்திலேயே சாலையில் செல்லக் கூடிய வாகனத்தை ராம்பால் கட்டமைத்திருக்கின்றார்.

Most Read Articles

English summary
Punjab Architect Builds Jet-Shaped Vehicle Calling It 'Punjab Rafale'. Read In Tamil.
Story first published: Friday, March 5, 2021, 16:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X