ஆசிய லீ மான்ஸ் கார் பந்தயத்தில் 5-வது இடம் பிடித்தது இந்திய ரேஸிங் அணி!

ஐக்கிய அமீரகத்தில் நடந்த ஆசிய லீ மான் கார் பந்தயத்தில் முதல்முறையாக பங்கேற்ற இந்திய ரேஸிங் அணி 5வது இடத்தை பிடித்தது. 24 ஹவர்ஸ் லீமான்ஸ் கார் பந்தயத்தில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு அருகி போனாலும், இந்திய வீரர்கள் மிகச் சிறப்பாக இந்த பந்தயத்தில் செயல்பட்டனர்.

ஆசிய லீ மான்ஸ் கார் பந்தயத்தில் இந்திய அணிக்கு 5வது இடம்!

உலக அளவில் புகழ்பெற்ற 24 ஹவர்ஸ் லீ மான்ஸ் கார் பந்தயம் வாகனம் மற்றும் வீரர்களின் தாங்கும் ஆற்றலை பரிசோதிக்கும் விதத்தில், நீண்ட நேரம் நடைபெறும் பந்தயமாக வரையறுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் 24 ஹவர்ஸ் லீமான்ஸ் கார் பந்தயத்தில் பங்கேற்பதற்கு, பிராந்திய அளவில் ஒவ்வொரு கண்டத்திலும் லீ மான்ஸ் கார் பந்தயங்கள் நடத்தப்படுகின்றன.

அந்த வகையில், ஆசிய லீ மான்ஸ் கார் பந்தயம் அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபி நகரங்களில் நடத்தப்பட்டது. இந்த பந்தயத்தில் முதல்முறையாக இந்தியா சார்பில் புதிய அணி பங்கேற்றது. ரேஸிங் டீம் இந்தியா என்ற பெயரில் உருவாக்கப்பட்டது.

இந்த அணியில் நமது நாட்டின் பிரபலமான கார் பந்தய வீரர்களான நரேன் கார்த்திகேயன், அர்ஜுன் மெய்னி மற்றும் நவீன் ராவ் ஆகியோர் பங்கேற்றனர். ஒரேகா 07 எல்எம்பி-2 கார் மாடலை இந்திய அணி வீரர்கள் பயன்படுத்தினர். ஜேகே டயர்ஸ் நிறுவனம் ஸ்பான்சர் வழங்கியது.

கடந்த 13 மற்றும் 14 தேதிகளில் துபாயில் முதல்கட்ட பந்தயங்கள் நடந்தன. இந்த போட்டியில் ரேஸிங் டீம் இந்தியா அணி நான்காவது இடத்தை பிடித்தது. முன்னெச்சரிக்கையாக ஒருமுறை பிட்ஸ்டாப்பில் நிறுத்தியதும், 5 வினாடிகள் தண்டனையாக அளிக்கப்பட்டதால், இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது.

இந்த நிலையில், கடந்த 20 மற்றும் 21 தேதிகளில் ஆசிய லீ மான்ஸ் போட்டியின் இறுதி கட்ட பந்தயங்கள் அபுதாபியில் நடந்தது. இதில், முதல் இடத்தை பிடித்தால், பிரான்ஸ் நாட்டில் நடைபெற இருக்கும் 24 ஹவர்ஸ் லீமான்ஸ் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால், அபுதாபி பந்தயங்களில் 5வது இடத்தை மட்டுமே இந்திய அணி பிடித்தது.

ஆசிய லீ மான்ஸ் கார் பந்தயத்தில் 5-வது இடம் பிடித்தது இந்திய ரேஸிங் அணி!

பயிற்சி போட்டியின்போது இந்திய வீரர் நரேன் கார்த்திகேயன் ஓட்டிச் சென்ற கார் விபத்தில் சிக்கியதால், காரில் தொழில்நுட்ப அளவில் சறுக்கல் ஏற்பட்டது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. எனினும், குறுகிய நேரத்தில் காரை சரிசெய்து இந்திய அணி வீரர்கள் பயன்படுத்தினர். ஆனாலும், 5வது இடத்தையே இந்த சீசனில் பிடிக்க முடிந்தது. இதனால், இந்த ஆண்டுக்கான 24 ஹவர்ஸ் லீமான்ஸ் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு அருகி போய்விட்டது.

எனினும், இந்திய அணி நேரடியாக இந்த என்டியூரன்ஸ் வகை கார் பந்தயத்தில் கலந்து கொண்டு இருப்பது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விஷயமாக அமைந்துள்ளது. அத்துடன், அடுத்த சீசனில் சிறப்பாக இந்திய அணியும், வீரர்களும் செயல்படுவதற்கான அனுபவம் இந்த சீசன் மூலமாக கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்க விஷயமாக இருக்கிறது.

Most Read Articles
English summary
Racing Team India finishes fifth in the Asian Le Mans Series championship held in UAE.
Story first published: Tuesday, February 23, 2021, 14:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X