ராபிட் செடான் காரின் தயாரிப்பை இந்தியாவில் நிறுத்தவுள்ளோம்... டுவிட்டரில் ஸ்கோடா சிஇஓ பதில்

ஃபோக்ஸ்வேகன் வெண்டோ செடான் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஸ்கோடா ராபிட் இந்தியாவில் கிட்டத்தட்ட 10 வருடங்களாக விற்பனையில் இருந்து வருகிறது.

ராபிட் செடான் காரின் தயாரிப்பை இந்தியாவில் நிறுத்தவுள்ளோம்... டுவிட்டரில் ஸ்கோடா சிஇஓ பதில்

ராபிட் செடான் காரின் விற்பனையில் ஸ்கோடா ஆரம்பத்திலேயே அனைத்து விதமான பயன்களையும் அடைந்துவிட்டது. இதனால் இது ராபிட்டிற்கு மாற்று மாடலை தயாரிப்பு நிறுவனம் கொண்டுவர வேண்டிய நேரம்.

ராபிட் செடான் காரின் தயாரிப்பை இந்தியாவில் நிறுத்தவுள்ளோம்... டுவிட்டரில் ஸ்கோடா சிஇஓ பதில்

இந்த நிலையில் தான் தற்போது ராபிட்டின் விற்பனை நிறுத்தப்பட உள்ள தினத்தை முடிவு செய்யும் பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதாக ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் சிஇஓ ஜாக் ஹோலிஸ் டுவிட்டரில் நெட்டிசன் ஒருவர் கேட்ட கேள்விக்கு தெரிவித்துள்ளார்.

ராபிட் செடான் காரின் தயாரிப்பை இந்தியாவில் நிறுத்தவுள்ளோம்... டுவிட்டரில் ஸ்கோடா சிஇஓ பதில்

ராபிட்டின் தயாரிப்பு நிறுத்தப்பட்டால், ஸ்கோடாவின் இந்திய கார்கள் வரிசையில் பெரிய வெற்றிடம் ஏற்படும். இந்த வெற்றிடத்தை நிரப்ப எந்த செடான் மாடலை இந்திய சந்தைக்கு ஸ்கோடா நிறுவனம் கொண்டுவரும் என்பது தற்போதைக்கு உறுதியாக தெரியவில்லை.

ராபிட் செடான் காரின் தயாரிப்பை இந்தியாவில் நிறுத்தவுள்ளோம்... டுவிட்டரில் ஸ்கோடா சிஇஓ பதில்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே புதிய தலைமுறை ராபிட் செடான் கார் இந்தியாவில் விற்பனைக்கு வராது என ஜாக் ஹோலிஸ் உறுதிப்படுத்தி இருந்தார். அதேநேரம் புதிய எம்க்யூபி ஏ0 (இந்தியா) ப்ளாட்ஃபாரத்தில் இந்திய சந்தைக்கென பெரிய தோற்றம் கொண்ட செடான் காரின் தயாரிப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.

ராபிட் செடான் காரின் தயாரிப்பை இந்தியாவில் நிறுத்தவுள்ளோம்... டுவிட்டரில் ஸ்கோடா சிஇஓ பதில்

ஸ்கோடாவின் இந்த எதிர்கால பெரிய தோற்றம் கொண்ட செடான் கார் ஏற்கனவே இந்திய சாலைகளில் சில முறை சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டுள்ளதை ஸ்பை படங்களில் பார்த்துள்ளோம். மிக விரைவில் அறிமுகமாகவுள்ள ஸ்கோடா குஷாக் எஸ்யூவி காரில் வழங்கப்படவுள்ள என்ஜின் & டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் தான் இந்த புதிய செடானிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராபிட் செடான் காரின் தயாரிப்பை இந்தியாவில் நிறுத்தவுள்ளோம்... டுவிட்டரில் ஸ்கோடா சிஇஓ பதில்

குஷாக் காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என இரு டிஎஸ்ஐ என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்படவுள்ளன. இதில் சிறிய 1.0 லிட்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 113 பிஎச்பி மற்றும் 175 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராபிட் செடான் காரின் தயாரிப்பை இந்தியாவில் நிறுத்தவுள்ளோம்... டுவிட்டரில் ஸ்கோடா சிஇஓ பதில்

1.5 லிட்டர் என்ஜின் 148 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக காருக்கு வழங்கக்கூடியதாக வெளிவரவுள்ளது. ஆனால் இந்த பெரியளவிலான டிஎஸ்ஐ என்ஜின் ஆகஸ்ட் மாதத்தில் தான் குஷாக்கில் அறிமுகப்படுத்தவுள்ளதாக சமீபத்தில் கூட செய்திகள் கசிந்திருந்தன.

ராபிட் செடான் காரின் தயாரிப்பை இந்தியாவில் நிறுத்தவுள்ளோம்... டுவிட்டரில் ஸ்கோடா சிஇஓ பதில்

இவற்றுடன் 6-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் நிலையாக வழங்கப்பட உள்ளது. அதேநேரம் சிறிய ரக என்ஜின் உடன் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டரும், பெரிய என்ஜின் உடன் 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸும் கூடுதல் தேர்வாக வழங்கப்பட உள்ளன. ரேபிட்டிற்கு மாற்றாக கொண்டுவரப்படும் செடானின் பெயர் ஸ்லாவியா என சூட்டப்படலாம் என செய்திகள் கூறுகின்றன.

ராபிட் செடான் காரின் தயாரிப்பை இந்தியாவில் நிறுத்தவுள்ளோம்... டுவிட்டரில் ஸ்கோடா சிஇஓ பதில்

ஏற்கனவே கூறியதுதான், இது தோற்றத்தில் பெரியதாக இருக்கும். இதன் காரணமாக உட்புறத்தில் கூடுதல் இட வசதியை நிச்சயம் எதிர்பார்க்கலாம். இந்த புதிய ஸ்கோடா செடான் காரின் இந்திய அறிமுகம் நடப்பு வருடத்தின் இறுதியிலோ அல்லது அடுத்த வருடத்தின் துவக்கத்திலோ இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Rapid End of production currently under discussion says Skoda CEO.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X