வாங்கப்படும் 2வது கார் பெரும்பாலும் செடான் தான்!! எஸ்யூவி-களில் உள்ள பிரச்சனை என்ன?

இதற்கு முன் நாம் பல ஒப்பீடுகளை பார்த்துள்ளோம். அவற்றில் சில ஒப்பீடுகள் சுவாரஸ்யமானதாகவும், சில ஒப்பீடுகள் சற்று போர் அடிப்பது போன்றும் இருந்திருக்கின்றன. ஆனால் நாம் இந்த செய்தியில் பார்க்கவுள்ள ஒப்பீடு நிச்சயம் சுவாரஸ்யமானதாக இருக்கும்.

வாங்கப்படும் 2வது கார் பெரும்பாலும் செடான் தான்!! எஸ்யூவி-களில் உள்ள பிரச்சனை என்ன?

செடான் vs எஸ்யூவி, ஒரு சமயத்தில் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதிலுமே செடான் கார்களாக தான் உலா வந்து கொண்டிருந்தன. ஆனால் தற்போது காலம் மாறிவிட்டது. தற்போதைய வாடிக்கையாளர்கள் கூடுதல் கம்பீரமான தோற்றம் கொண்ட எஸ்யூவி கார்களை வாங்கவே விரும்புகின்றனர்.

வாங்கப்படும் 2வது கார் பெரும்பாலும் செடான் தான்!! எஸ்யூவி-களில் உள்ள பிரச்சனை என்ன?

சவுகரியம், செயல்படுதிறன் போன்றவற்றில் செடான் கார்களே இப்போது வரையிலும் சிறப்பானவைகளாக உள்ளன. பெரும்பாலான செடான் கார்கள் மிகவும் நம்பகத்தன்மை கொண்டவைகளாக உள்ளன. இதனாலேயே பல ஆண்டுகளாக பல நாடுகளின் சந்தைகளை ஆட்டி படைத்து வந்தன.

வாங்கப்படும் 2வது கார் பெரும்பாலும் செடான் தான்!! எஸ்யூவி-களில் உள்ள பிரச்சனை என்ன?

மலிவான எஸ்யூவி கார்களே செடானின் வீழ்ச்சிக்கு காரணம் என்று சொல்ல வேண்டும். எல்லா அளவிலும் எஸ்யூவி கார்கள் கணக்கச்சித்தமாக இருப்பதே உலகளவிலான வாடிக்கையாளர்கள் கவரப்படுவதற்கு காரணம் ஆகும். இவ்வளவு ஏன், மைக்ரோ-எஸ்யூவி கார்கள் கூட தயாராகி வருகின்றன.

வாங்கப்படும் 2வது கார் பெரும்பாலும் செடான் தான்!! எஸ்யூவி-களில் உள்ள பிரச்சனை என்ன?

தொழிற்நுட்பங்கள் அதிகம் வழங்கப்படுவதும் எஸ்யூவி கார்களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும். விலைமிக்க எஸ்யூவி காருக்கும் அதே விலையிலான செடான் காருக்கும் பெரிதாக போட்டி வந்ததில்லை. ஏனெனில் சற்று விலை கொடுத்து கார் வாங்க தயார் என்றால், வாடிக்கையாளர்கள் நேரடியாக எஸ்யூவி பக்கமே செல்கின்றனர்.

வாங்கப்படும் 2வது கார் பெரும்பாலும் செடான் தான்!! எஸ்யூவி-களில் உள்ள பிரச்சனை என்ன?

பட்ஜெட் பார்த்து கார் எடுக்கும் மிடில் கிளாஸ் மத்தியில் தான் செடான் கார்கள் இன்னும் உயிர்ப்புடன் உள்ளன. அதேநேரம் குறைவான விலை கொண்ட எஸ்யூவி கார்களை வாங்குவோரும் இருக்க தான் செய்கின்றனர். செடான், எஸ்யூவி இவை இரண்டும் சில முக்கிய விஷயங்களில் எவ்வாறு வேறுப்படுகின்றன என்பதை இனி பார்ப்போம்.

வாங்கப்படும் 2வது கார் பெரும்பாலும் செடான் தான்!! எஸ்யூவி-களில் உள்ள பிரச்சனை என்ன?

இட வசதி

உட்புற இட வசதியை பொறுத்தவரையில், காம்பெக்ட் எஸ்யூவிகள் மற்றும் ஹேட்ச்பேக் கார்களை காட்டிலும் செடான்களில் தான் அதிகமாக கிடைப்பது வழக்கம். எஸ்யூவி கார்கள் நன்கு உயரமானவை, ஆதலால் அவற்றில் தானே கேபின் நன்கு பெரியதாக இருக்கும் என்று நீங்கள் கேட்கலாம், ஆனால் முன் மற்றும் பின்சக்கரங்களுக்கு இடையேயான தொலைவு செடான்களில் அதிகமாக வழங்கப்படுகிறது.

வாங்கப்படும் 2வது கார் பெரும்பாலும் செடான் தான்!! எஸ்யூவி-களில் உள்ள பிரச்சனை என்ன?

அதேபோல் செடான்களில் 3வது இருக்கை வரிசை கொண்டுவருவது மிக கடினம் என்பதால், பெரும்பாலும் 2-இருக்கை வரிசைகளுடனே வடிவமைக்கப்படுகின்றன. இதனால் உட்புறத்தில் இட வசதியை தயாரிப்பு நிறுவனங்கள் வாரி வழங்கி விடுகின்றன. ஆனால் பூட் ஸ்பேஸ் அளவை செடான் கார்களுக்கு இணையாக க்ரெட்டா, டஸ்டர் மற்றும் ஹெரியர் போன்ற எஸ்யூவிகளும் கொண்டுள்ளன.

வாங்கப்படும் 2வது கார் பெரும்பாலும் செடான் தான்!! எஸ்யூவி-களில் உள்ள பிரச்சனை என்ன?

பயண சவுகரியம்

பயண அனுபவத்தை வழங்குவதிலும் செடான் கார்களே சிறந்ததாக முன்னிலை வகிக்கின்றன. செடான் கார்களில் எப்போதுமே இருக்கை அமைப்பு கணக்கச்சிதமாக இருக்கும். அதேபோல் மென்மையான சஸ்பென்ஷன் யூனிட் வழங்கப்படுவதால் எஸ்யூவி கார்களை காட்டிலும் செடான்கள் குலுக்கலை வெகுவாக குறைக்கக்கூடியவை.

வாங்கப்படும் 2வது கார் பெரும்பாலும் செடான் தான்!! எஸ்யூவி-களில் உள்ள பிரச்சனை என்ன?

இதனாலேயே உலகின் மிகவும் லக்சரி கார்களை எடுத்து பார்த்தீர்கள் என்றால், அதில் பெரும்பான்மையானவை செடான் ரக கார்களாகவே இருக்கும். தொலைத்தூர பயணமாக இருந்தாலும் சரி, அல்லது குறுகிய நகர்புற பயணமாக இருந்தாலும் சரி செடான் கார்களை ஓட்ட கூட வேண்டாம், உள்ளே அமர்ந்து பயணம் செய்தாலே அப்படி ஒரு இனிமையான உணர்வு கிடைக்கும்.

வாங்கப்படும் 2வது கார் பெரும்பாலும் செடான் தான்!! எஸ்யூவி-களில் உள்ள பிரச்சனை என்ன?

செயல்திறன்

குறைந்த ஈர்ப்பு மையத்தினால் செயல்படுதிறன் காம்பெக்ட் & சப்-காம்பெக்ட் எஸ்யூவிகளை விட செடான் கார்களிலேயே பெரும்பாலும் சிறந்ததாக கிடைக்கிறது. ஆக்ரோஷமான வேகத்தில் மட்டுமல்லாமல், நெடுஞ்சாலை பயணங்களின் போதும் கூட செடான்களிடம் சிறந்த செயல்திறன் கிடைக்கிறது.

வாங்கப்படும் 2வது கார் பெரும்பாலும் செடான் தான்!! எஸ்யூவி-களில் உள்ள பிரச்சனை என்ன?

பெரிய பருமனான எஸ்யூவிகளுடன் ஒப்பிடும்போது குறைந்த உயரத்தினால் செடான்களில் இழுவை திறன் அதிகரிக்கிறது. அதாவது ஒரே நேரத்தில் அதிக கட்டுப்பாட்டை கார் கொண்டிருக்கும் போது நீங்கள் வேகமாக செல்ல முடியும்.

வாங்கப்படும் 2வது கார் பெரும்பாலும் செடான் தான்!! எஸ்யூவி-களில் உள்ள பிரச்சனை என்ன?

எரிபொருள் திறன்

இழுவை குணகத்தை குறைவாக கொண்டிருப்பதினால் செடான்கள் மிகவும் சிக்கனமாக இருக்கும். இதன் காரணமாகவே அதிக சக்திவாய்ந்த என்ஜின் பொருத்தப்பட்டிருந்தாலும், செடான்கள் சிறந்த எரிபொருள் திறன் புள்ளிவிபரங்களை எட்டுக்கின்றன.

வாங்கப்படும் 2வது கார் பெரும்பாலும் செடான் தான்!! எஸ்யூவி-களில் உள்ள பிரச்சனை என்ன?

அதாவது காரின் உயரம் அதிகமாக இருந்தால், எதிர்காற்றை கிழித்து கொண்டு அவ்வளவு பெரிய உருவத்தை முன்னோக்கி நகர்த்த அதிக எரிபொருள் தேவைப்படும். ஆகவே கார் வாங்கும்முன் எத்தகைய உடலமைப்பை கொண்ட காரை வாங்குவது என்பதில் தெளிவாக இருங்கள்.

Most Read Articles

English summary
Why Your Next Car Should Be A Sedan And Not An SUV.
Story first published: Sunday, September 12, 2021, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X