டீலர்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தியது ரெனோ!

வாடிக்கையாளர்களுக்கு மிக நெருக்கமான சேவையை வழங்கும் விதமாக, இந்தியாவில் டீலர்களின் எண்ணிக்கையை மிக கணிசமாக அதிகரித்துள்ளது ரெனோ கார் நிறுவனம். இதுகுறித்த விரிவானத் தகவல்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

 டீலர்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தியது ரெனோ!

ரெனோ கார் நிறுவனம் இந்தியாவில் மிகச் சிறப்பான விற்பனை வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. விற்பனை வளர்ச்சியை வலுவான நிலையில் கொண்டு செல்வதற்கு ஏதுவாக இந்தியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், பல புதிய கார் மாடல்களை தொடர்ந்து களமிறக்கி வருவதுடன், டீலர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்து வருகிறது.

 டீலர்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தியது ரெனோ!

இதன்படி, கடந்த ஆண்டு மட்டும் புதிதாக 120 டீலர்களை நிஸான் நிறுவனம் திறந்துள்ளது. இதில், 500 விற்பனை மையங்கள், 200 நடமாடும் ஒர்க்ஷாப்களுடன் மொத்தம் 475 சர்வீஸ் மையங்களுடன் மிக வலுவான டீலர் மற்றும் சர்வீஸ் கட்டமைப்பை பெற்றுள்ளது ரெனோ கார் நிறுவனம்.

 டீலர்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தியது ரெனோ!

கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் புதிதாக 40 விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்களை ரெனோ கார் நிறுவனம் திறந்துள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடாகா, தெலங்கானா ஆகிய தென்மாநிலங்களில் அதிக அளவில் புதிய டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் திறக்கப்பட்டன.

 டீலர்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தியது ரெனோ!

இதேபோன்று, நாட்டின் பிற மாநிலங்களான ஒடிஷா, மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரபிரதேசம், பீகார், அசாம், குஜராத், ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் கடந்த ஆண்டு பல புதிய டீலர்களையும், சர்வீஸ் மையங்களையும் ரெனோ கார் நிறுவனம் திறந்துள்ளது.

 டீலர்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தியது ரெனோ!

இந்த புதிய டீலர்கள் மற்றும் சர்வீஸ் மையங்கள மூலமாக நாட்டின் அனைத்துப் பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கும், விற்பனைக்கு பின் சிறப்பான சேவையை வழங்குவதற்கும் உதவியாக இருக்கும் என்று ரெனோ கருதுகிறது.

 டீலர்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தியது ரெனோ!

இந்த நிலையில், வரும் 28ந் தேதி புதிய ரெனோ கைகர் எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடல் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட உள்ளது. மிக குறைவான பட்ஜெட்டில், அதிக தொழில்நுட்ப வசதிகள் மற்றும் அசதலான டிசைனில் வர இருப்பதால் வாடிக்கையாளர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

 டீலர்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தியது ரெனோ!

ரெனோ ட்ரைபர் காரின் எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகள் இந்த காரிலும் எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 28ந் தேதி இந்த கார் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault has added 120 new sales and service touchpoints across the country in last year, taking the total to over 975.
Story first published: Friday, January 22, 2021, 10:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X