விரைவில் அறிமுகமாகிறது ரெனால்ட் மேகேன் மின்சார கார்! எந்த மாசத்தில் தெரியுமா? இதோ முழு விபரம்!

ரெனால்ட் நிறுவனம் அதன் மேகேன் மின்சார காரை வெளியீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

விரைவில் அறிமுகமாகிறது ரெனால்ட் மேகேன் மின்சார கார்! எந்த மாசத்தில் தெரியுமா? காத்திருப்பிற்கு முற்று புள்ளி வைங்க!

ஃப்ரெஞ்சு நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் ரெனால்ட் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் மேகேன் இ-விஷன் (Megane eVision) எனும் பெயரில் ஓர் கான்செப்ட் மின்சார கார் மாடலை காட்சிப்படுத்தியிருந்தது. இது நிறுவனத்தின் இரண்டாம் எலெக்ட்ரிக் வாகனமாகும்.

விரைவில் அறிமுகமாகிறது ரெனால்ட் மேகேன் மின்சார கார்! எந்த மாசத்தில் தெரியுமா? காத்திருப்பிற்கு முற்று புள்ளி வைங்க!

இந்த காரையே வரும் செப்டம்பர் 6ம் தேதி அன்று ஜெர்மனி நாட்டில் உள்ள முனிச் பகுதியில் அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், இக்காரை மேகேன் இவி டெக் எலெக்ட்ரிக் எனும் பெயரில் விற்பனைக்குக் களமிறக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரைவில் அறிமுகமாகிறது ரெனால்ட் மேகேன் மின்சார கார்! எந்த மாசத்தில் தெரியுமா? காத்திருப்பிற்கு முற்று புள்ளி வைங்க!

ஏற்கனவே மேகேன் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இத்துடன், மின்சார தேர்வையும் விற்பனைக்கு வழங்கும் வகையில் நிறுவனம் விரைவில் மேகேன் எலெக்ட்ரிக் காரை நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

விரைவில் அறிமுகமாகிறது ரெனால்ட் மேகேன் மின்சார கார்! எந்த மாசத்தில் தெரியுமா? காத்திருப்பிற்கு முற்று புள்ளி வைங்க!

ரெனால்ட் நிறுவனம் ஏற்கனவே ஜோயி இவி (Zoe EV) என்ற பெயரில் ஓர் மின் வாகனத்தை உலக நாடுகள் சிலவற்றில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இக்காரை இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த காருக்கு அடுத்தபடியாகவே மேகேன் மின்சார காரை நிறுவனம் விற்பனைக்குக் களமிறக்க தயாராகி வருகின்றது.

விரைவில் அறிமுகமாகிறது ரெனால்ட் மேகேன் மின்சார கார்! எந்த மாசத்தில் தெரியுமா? காத்திருப்பிற்கு முற்று புள்ளி வைங்க!

சிஎம்எஃப்-இவி பிளாட்பாரத்தை பயன்படுத்தி மேகேன் உருவாக்கப்பட்டு வருகின்றது. பிரத்யேகமாக மின் வாகனத்தை வடிவமைப்பதற்கு என்றே இந்த பிளாட்பாரத்தை நிறுவனம் உருவாக்கியுள்ளது. மேகேன் மின்சார கார் 217 எச்பி வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த காருக்கு தேவையான மின்சார திறனை 60kWh பேட்டரி வழங்கும்.

விரைவில் அறிமுகமாகிறது ரெனால்ட் மேகேன் மின்சார கார்! எந்த மாசத்தில் தெரியுமா? காத்திருப்பிற்கு முற்று புள்ளி வைங்க!

இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 450 கிமீ தூரம் வரை பயணிக்கும். இதுபோன்று பல்வேறு சிறப்பு வசதிகளுடன் மேகேன் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், என்னென்ன சிறப்பு வசதிகள் இடம்பெற இருக்கின்றன என்பது பற்றிய துள்ளியமான தகவல்கள் வழங்கப்படவில்லை.

விரைவில் அறிமுகமாகிறது ரெனால்ட் மேகேன் மின்சார கார்! எந்த மாசத்தில் தெரியுமா? காத்திருப்பிற்கு முற்று புள்ளி வைங்க!

தற்போது 30 யூனிட் மேகேன் மின்சார கார்களை கொண்டு சோதனையோட்டம் பணியில் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. விரைவில் இந்த பணிகள் அனைத்தும் முடிவடைய உள்ள நிலை உருவாகியிருப்பதால் அறிமுகத்திற்கான பணியில் நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது.

விரைவில் அறிமுகமாகிறது ரெனால்ட் மேகேன் மின்சார கார்! எந்த மாசத்தில் தெரியுமா? காத்திருப்பிற்கு முற்று புள்ளி வைங்க!

இந்த அறிமுகதக்திற்கு பின்னரே இந்திய வருகை பற்றிய விபரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault Announced That It Will Unveil The Megane e-Car On September 6. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X