Just In
- 53 min ago
மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...
- 2 hrs ago
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- 13 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- 14 hrs ago
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
Don't Miss!
- News
தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தடுப்பூசி
- Sports
3 விக்கெட்டுகள்... அரைசதம்... இந்திய அணியை தூக்கி நிறுத்திய இளம்வீரர்கள்.. செம ட்விஸ்ட்!
- Movies
மணிகர்னிகா ரிட்டர்ன்ஸ் இந்த புத்தகக் கதைதானாமே.. நடிகை கங்கனா மீது எழுத்தாளர் காப்புரிமை புகார்!
- Finance
அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
குறைந்த வட்டி, தள்ளுபடி விலை! வாடிக்கையாளர்களை கவர பிரபல கார் நிறுவனம் அதிரடி.. இந்த வாய்ப்ப மிஸ் பண்ண கூடாது!
குறைந்த வட்டி, தள்ளுபடி விலை என வாடிக்கையாளர்களைக் கவர எக்கசக்க சிறப்பு சலுகைகளை பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்று அறிவித்திருக்கின்றது.

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட், அதன் தயாரிப்புகளின் பக்கம் மக்களைக் கவரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இதற்காக சிறப்பு சலுகைகளை அது அறிவித்திருக்கின்றது. புத்தாண்டை முன்னிட்டும், ஜனவரி மாதத்தில் வரும் பண்டிகைத் தினங்களை முன்னிட்டும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

புதிய சலுகையின்மூலம் 95 ஆயிரம் ரூபாய் வரையிலான பலன்களைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. வேரியண்ட் மற்றும் மாடல் ஏற்ப இதன் சலுகைகள் மாறுபடும். ரெனால்ட் நிறுவனத்தின் புதிய கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இச்சலுகைப் பொருந்தும்.

குறிப்பாக க்விட், ட்ரைபர் மற்றும் டஸ்டர் ஆகிய கார்களுக்கே இந்த சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. பண சேமிப்பு, எக்ஸ்சேஞ் போனஸ், கார்பரேட் டிஸ்கவுண்ட், லாயல்டி போனஸ், பராமரிப்பு பேக்கேஜ் என பல்வேறு சலுகைகளை அது அறிவித்திருக்கின்றது.

இத்துடன், கிராமப்புறங்களில் இருந்து வரும் வாடிக்கையாளர்களைக் கூடுதலாக சிறப்பிக்கும் விதமாக சிறப்பு தள்ளுபடியும் வழங்க ரெனால்ட் திட்டமிட்டுள்ளது. இதுமட்டுமின்றி, க்விட் மற்றும் ட்ரைபர் கார்களை குறைந்த வட்டியில் கடன் திட்டத்தில் வழங்கவும் அது திட்டமிட்டிருக்கின்றது.

5.99 சதவீதம் என்ற குறைந்தபட்ச வட்டிக்கே அது வழங்க இருக்கின்றது. இந்த சிறப்பு சலுகைகள் வருகின்ற ஜனவரி 31ம் தேதி வரை மட்டுமே நிலுவையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. மாடல் வாரியாக சலுகை விபரத்தைக் கீழே காணலாம்.

ரெனால்ட் க்விட்:
ரெனால்ட் நிறுவனம் அதன் ஆரம்பநிலை ஹேட்ச்பேக் மாடலான க்விட் காருக்கு ரூ. 60 ஆயிரம் வரையிலான பலன் திட்டத்தை அறிவித்திருக்கின்றது. 20 ஆயிரம் ரூபாயை எக்ஸ்சேஞ்ஜ் திட்டத்தின்கீழும், 20 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியாகவும், ரூ. 10 ஆயிரம் வரை லாயல்டி பலனை வழங்க அது திட்டமிட்டிருக்கின்றது.

இதுமட்டுமின்றி ரூ. 10,000 ஆயிரம் கார்பரேட் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து, கிராமப்புற வாடிக்கையாளர்களைச் சிறப்பிக்கும் விதமாக அவர்களுக்கென பிரத்யேகமாக ரூ. 5 ஆயிரம் வரை கேஷ் போனஸ் வழங்கப்பட இருக்கின்றது. கார்பரேட் மற்றும் கிராமப்புற சலுகையைப் பெற குறிப்பிட்ட ஆவணங்களை அந்தந் வாடிக்கையாளர்கள் சமர்பிக்க வேண்டும் என கூறப்படுகின்றது.

ரெனால்ட் ட்ரைபர்:
ரெனால்ட் ட்ரைபர் ஓர் காம்பேக் எம்பிவி காராகும். இக்காருக்கு ரூ. 70 ஆயிரம் வரை சிறப்பு பலனை வழங்கவே ரெனால்ட் திட்டமிட்டிருக்கின்றது. இதில், 30 ஆயிரம் ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ஜ் போனஸாகவும், ரூ. 20 ஆயிரம் வரை சிறப்பு கேஷ் பலனாகவும், ரூ. 10 ஆயிரம் லாயல்டி போனஸாகவும் வழங்கப்பட இருக்கின்றது.

தொடர்ந்து, க்விட் காருக்கு அறிவிக்கப்பட்டதைப் போலவே ட்ரைபரை காரை வாங்கும் கார்பரேட் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் ஸ்பெஷல் டிஸ்கவுன்ட் மற்றும் கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு ரூ. 5000 ஆயிரம் சிறப்பு டிஸ்கவுண்ட் வழங்கப்பட இருக்கின்றது.

ரெனால்ட் டஸ்டர்:
ரெனால்ட் நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் டஸ்டர்-ம் ஒன்று. இக்காருக்கு ரூ. 95 ஆயிரம் வரையிலான சிறப்பு பலன்களை ரெனால்ட் அறிவித்திருக்கின்றது. ரூ. 30 ஆயிரம் எக்ஸ்சேஞ்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கும், ரூ. 15 ஆயிரத்தை லாயல்டி பலனாகவும் அது வழங்க இருக்கின்றது. இத்துடன், சிறப்பு பராமரிப்பை வழங்கவும் ரெனால்ட் திட்டமிட்டிருக்கின்றது.

இந்த மாடலுக்கே வேரியண்ட் வாரியாக சிறப்பு சலுகையை ரெனால்ட் அறிவித்திருக்கின்றது. மேலும், இக்காருக்கும் கார்பரேட் மற்றும் கிராமப்புறத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இது சற்று கூடுதலானதாக இருக்கின்றது.

கார்பரேட் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கு ரூ. 30 ஆயிரத்தையும், கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்ககு ரூ. 15 ஆயிரமும் சிறப்பு போனஸாக வழங்கப்பட இருக்கின்றது. புத்தாண்டில் அதிக வாடிக்கையாளர்களைப் பெறும் நோக்கில் ரெனால்ட் நிறுவனம் குறுகிய கால சலுகையை அறிவித்திருக்கின்றது.