க்விட் அடிப்படையிலான செடான் கார் திட்டம்... அதிரடி முடிவு எடுத்த ரெனோ!

க்விட் அடிப்படையிலான செடான் கார் மாடலை உருவாக்குவது குறித்து அதிரடி முடிவு ஒன்றை ரெனோ கார் நிறுவனம் எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.

க்விட் அடிப்படையிலான செடான் கார்... ரெனோ அதிரடி முடிவு

இந்தியாவில் காம்பேக்ட் செடான் கார்களுக்கு என பெரிய அளவிலான சந்தை இருந்து வருகிறது. இந்த சந்தையில் உள்ள பெரும்பாலான கார்கள் ஹேட்ச்பேக் கார்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாடல்களாகத்தான் உள்ளன.

இந்த சூழலில், இந்த சந்தையில் உள்ள வர்த்தக வளத்தை கணக்கில்கொண்டு ரெனோ கார் நிறுவனமும் புதிய காம்பேக்ட் ரக செடான் கார் மாடலை உருவாக்க திட்டமிட்டது. கடந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவிலேயே இந்த மாடல் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், எஸ்யூவி கார்கள் மீதான மோகம் காரணமாக, அந்த சந்தையில் முழு கவனத்தையும் ரெனோ கார் நிறுவனம் திருப்பியது. இதனால், காம்பேக்ட் செடான் கார் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இது வருமா, வராதா என்ற நிலை இருந்து வருகிறது.

இந்த நிலையில், க்விட் அடிப்படையிலான காம்பேக்ட் செடான் கார் அறிமுகம் குறித்து ரெனோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வெங்கட்ராம் மமில்லப்பல்லே முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து எக்கனாமிக் டைம்ஸ் தளத்திடம் அவர் கூறுகையில்,"புதிய செடான் கார்களை உருவாக்குவதற்கு முதலீடு செய்வது இந்த தருணத்தில் தேவையற்றதாகவே கருதுகிறோம். ரூ.10 லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட்டில் புதிய கார் மாடல்களை களமிறக்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம். தற்போதைக்கு புதிய செடான் கார் உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை," என்று தெரிவித்துள்ளார்.

இதனால், க்விட் அடிப்படையிலான புதிய செடான் கார் மாடல் குறித்த கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனினும், எதிர்காலத்தில் தேவை ஏற்படும்பட்சத்தில், இந்த புதிய செடான் கார் திட்டத்தை ரெனோ கையில் எடுக்க வாய்ப்புள்ளது.

அப்படி வரும்பட்சத்தில், செக்மென்ட்டிலேயே மிக சவாலான விலையில் அதிக வசதிகளுடன் எதிர்பார்க்கலாம். அத்துடன், நிஸான் மேக்னைட் மற்றும் ரெனோ கைகர் கார்களில் பயன்படுத்தப்படும் அதே 1.0 லிட்டர் சாதாரண பெட்ரோல் எஞ்சின் மற்றும் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் பயன்படுத்தப்படும். மேனுவல், ஏஎம்டி மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளும் கொடுக்கப்படும்.

Most Read Articles

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault has decided to cancel sub compact car project in India.
Story first published: Saturday, February 20, 2021, 13:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X