Just In
- 8 hrs ago
எஃப்.இசட் வரிசையில் புதிய அட்வென்ச்சர் பைக்!! யமஹாவின் அதிரடி மூவ்!
- 10 hrs ago
பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி எப்படி இருக்கிறது?- டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!
- 11 hrs ago
25கிமீ சைக்கிள் மிதித்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்த நடிகர்!! தளபதி விஜய் எஃபெக்ட் போல...
- 12 hrs ago
ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 9 பட ட்ரைலர் வெளியீடு!! இந்த கார்கள் எல்லாம் படத்தில் பயன்படுத்தப்பட்டுருக்கா?
Don't Miss!
- News
ஜெட் வேகத்தில் கொரோனா.. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தொற்று உறுதி!
- Sports
என்னப்பா நடக்குது இங்க.. விக்கெட்டில் விளையாடிய அம்பயர்.. விழிப்பிதுங்கிய டூப்ளசிஸ் வேடிக்கை சம்பவம்
- Movies
எல்லா விஷயமும் பேசலாம்… புதிய யூட்யூப் சேனலை தொடங்கிய ரேகா !
- Finance
பிட்காயின்-ஐ தடை செய்த துருக்கி.. இந்தியா என்ன செய்யப் போகிறது..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Lifestyle
கொரோனா தடுப்பூசி குறிப்பாக பெண்களுக்கு என்னென்ன பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது தெரியுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரெனோ கார்களுக்கு தொடரும் தள்ளுபடி... ஏப்ரல் மாத ஆஃபர் விபரம்!
வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ரெனோ கார்களுக்கு தொடர்ந்து சிறப்பு சேமிப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த மாதத்திற்கு வழங்கப்படும் ஆஃபர் விபரங்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

ரெனோ கார் நிறுவனம் விற்பனையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. விற்பனை வளர்ச்சியை தக்க வைப்பதற்காக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் தொடர்ந்து சேமிப்புச் சலுகைகளை மாதா மாதம் வழங்கி வருகிறது. அந்த வகையில், அதிகபட்சமாக ரூ.75,000 வரை மதிப்பிலான சேமிப்புச் சலுகைகளை ரெனோ கார் நிறுவனம் வழங்குகிறது.

ரெனோ க்விட்
ரெனோ க்விட் காருக்கு ரூ.60,000 மதிப்புடைய சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது. இதில் கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்டு இருப்பில் உள்ள க்விட் கார்களுக்கு ரூ.20,000 வரை தள்ளுபடியும், இந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட க்விட் கார்களுக்கு ரூ.10,000 வரை தள்ளுபடியும் பெற முடியும்.

கூடுதலாக ரூ.20,000 மதிப்புடைய எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையையும் பழைய காரை கொடுத்து க்விட் கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் பெற முடியும். மேலும், ஏற்கனவே ரெனோ கார்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ரூ.10,000 லாயல்டி போனஸாக பெறும் வாய்ப்பும், ஊரகப் பகுதி வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,000 சிறப்பு தள்ளுபடியும் கொடுக்கப்படுகிறது.

ரெனோ ட்ரைபர்
ரெனோ ட்ரைபர் காருக்கு ரூ.65,000 மதிப்புடைய சேமிப்புச் சலுகைகளை பெற முடியும். கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்டு இருப்பில் உள்ள ட்ரைபர் கார்களுக்கு ரூ.25,000 வரை தள்ளுபடியும், நடப்பு ஆண்டு தயாரிக்கப்பட்ட கார்களுக்கு ரூ.15,000 தள்ளுபடியும் கொடுக்கப்படுகிறது.

அதேபோன்று, பழைய காரை கொடுத்து புதிய ட்ரைபர் காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.25,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் பெறும் வாய்ப்பு இருக்கிறது. ரூ.10,000 கார்ப்பரேட் போனஸாகவும், ஊரகப் பகுதி வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,000 தள்ளுபடி பெறும் வாய்ப்பும் உள்ளது. மேலும், 6.99 சதவீத வட்டி விகிதத்தில் சிறப்பு கடன் திட்டத்தையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

ரெனோ டஸ்ட்டர்
புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவிக்கு ரூ.75,000 வரையிலான சேமிப்பை பெறும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் மாடலை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.45,000 வரை தள்ளுபடி பெற முடியும்.

ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவிக்கு ரூ.30,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.15,000 வரை லாயல்டி போனஸ், ரூ.30,000 வரை கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் ஆகியவற்றை பெறும் வாய்ப்பு இருக்கிறது. ஊரகப் பகுதி வாடிக்கையாளர்களுக்கு ரூ.15,000 சிறப்பு தள்ளுபடியும் உள்ளது.

ரெனோ டஸ்ட்டர் 1.3 லிட்டர் பெட்ரோல் மாடலுக்கு ரூ.30,000 தள்ளுபடியும், ரூ.30,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸும் பெறும் வாய்ப்பு இருக்கிறது. ரூ.15,000 வரை லாயல்டி போனஸ் சேமிப்பும் உள்ளது.

ரெனோ நிறுவனம் விற்பனையை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் விதத்தில், தொடர்ந்து சிறப்புச் சேமிப்புச் சலுகைகளை வழங்கி வருகிறது. வரும் 30ந் தேதி வரை இந்த சேமிப்புச் சலுகைகளை ரெனோ க்விட், ட்ரைபர் மற்றும் டஸ்ட்டர் கார்களுக்கு பெற முடியும். அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட கைகர் எஸ்யூவியின் விற்பனை சிறப்பாக இருந்து வருகிறது. எனவே, அந்த காருக்கு எந்த விதமான சலுகைகளையும் இப்போதைக்கு இல்லை. இதுகுறித்த கூடுதல் விபரங்களை அருகாமையிலுள்ள ரெனோ டீலரை தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளலாம்.