Just In
- 18 min ago
புதிய பெயரை பெறுகிறது டாடாவின் பிரபல மின்சார கார்... பெயர் மட்டுமல்ல ரேஞ்ஜும் அதிகமாயிடுச்சு... அப்போ விலை?..
- 2 hrs ago
உலகின் முதல் லிடார் தொழில்நுட்பம் கொண்ட மின்சார கார்... இது எந்த நாட்டின் நிறுவன தயாரிப்பு தெரியுமா?
- 2 hrs ago
மெர்சிடிஸின் அடுத்த எலக்ட்ரிக் செடான்... இக்யுஎஸ்!! 700கிமீ ரேஞ்ச் உடன் தயாரிப்பு!
- 2 hrs ago
குட் நியூஸ்... சென்னையில் விற்பனைக்கு வருகிறது பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
Don't Miss!
- Finance
1,400 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ஜிஎம் நிறுவனம்.. என்ன காரணம்..?!
- News
மகன் மறைவுக்கு பிறகு மன அழுத்தத்திலேயே இருந்தார் விவேக்... அவரது மறைவு பேரிழப்பு - பிரேமலதா
- Lifestyle
ஓட்ஸ் சாப்பிடும்போது நாம் செய்யும் இந்த தவறுகள் நமக்கே ஆபத்தாக முடிய வாய்ப்பிருக்காம்...!
- Education
ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு ரயில்வேயில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Movies
விவேக் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்...தமிழக அரசு உத்தரவு
- Sports
குறி வைத்த கோலி.. தமிழக வீரரை இந்திய அணிக்கு தட்டி தூக்க ரெடி.. முதல் "பவர்-ஹிட்டர்" பேட்ஸ்மேன்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புதிய ரெனோ கார்களுக்கு ரூ.75,000 வரை தள்ளுபடி சலுகை... விபரம் உள்ளே!
வாடிக்கையாளர்களை கவரும் விதமாக, ரெனோ கார்களுக்கு ரூ.75,000 வரை தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ரெனோ கார் நிறுவனம் இந்திய கார் சந்தையில் முக்கிய இடத்தை பிடிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது. முதல்முறையாக நிறுவனத்தை லாபகரமான வளர்ச்சிப் பாதையில் நிலைநிறுத்துவதற்கான கற்ற வித்தைகளும் போட்டு வருகிறது. அண்மையில் கைகர் என்ற புதிய எஸ்யூவியை களமிறக்கி உள்ள ரெனோ நிறுவனம் பிற கார்களின் விற்பனையுடன் விற்பனையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பெறுவதற்கு திட்டமிட்டுள்ளது.

கைகர் தவிர்த்து, பிற ரெனோ டஸ்ட்டர், ட்ரைபர், க்விட் என கார்களுக்கு ரூ.75,000 வரை தள்ளுபடியை வாடிக்கையாளர்கள் பெறும் வாய்ப்பை ரெனோ வழங்குகிறது. மாரச் மாதத்திற்கான சலுகைகள் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ரெனோ க்விட்
ரெனோ க்விட் காருக்கு ரூ.40,000 வரை சேமிப்புச் சலுகைகள் பெற முடியும். 2020ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு இருப்பில் உள்ள கார்களுக்கு ரூ.20,000 தள்ளுபடியும், ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆஃபராகவும் பெற முடியும். 2021ம் ஆண்டு தயாரிப்பு மாடலுக்கு ரூ.10,000 தள்ளுபடியும், ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும் பெறும் வாய்ப்பு இருக்கிறது.

ரெனோ ட்ரைபர்
ரெனோ ட்ரைபர் காருக்கு ரூ.15,000 தள்ளுபடியும், ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.10,000 கார்ப்பரேட் போனஸாக வழங்கப்பபடுகிறது. இந்த காருக்கு 5.99 சதவீதம் என்ற மிக குறைவான வட்டியில் 3.89 லட்சம் வரை கடன் திட்டமும் வழங்கப்படுகிறது. இதனால், அதிகபட்ச சேமிப்பை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

ரெனோ டஸ்ட்டர்
ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவிக்கு ரூ.75,000 வரை தள்ளுபடி பெற முடியும். ரூ.30,000 தள்ளுபடியும், ரூ.30,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையையும் பெறும் வாய்ப்பு இருக்கிறது. பழைய ரெனோ கார் வாடிக்கையாளர்கள் கூடுதலாக ரூ.15,000 வரை லாயல்டி போனஸாகவும் பெறும் வாய்ப்பு இருக்கிறது.

ஆஃபர் காலம்
கடந்த 1ந் தேதி முதல் வரும் 31ந் தேதி வரை புதிய ரெனோ கார்களை முன்பதிவு செய்வோர் இந்த சிறப்பு தள்ளுபடி மற்றும் சேமிப்புச் சலுகைகளை பெற முடியும். கூடுதல் தகவல்களுக்கு அருகாமையிலுள்ள ரெனோ கார் ஷோரூமை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.