புதிய ரெனோ கார்களுக்கான பிப்ரவரி மாத ஆஃபர் விபரம்!

கார் விற்பனையை அதிகரிப்பதற்காக ரெனோ கார் நிறுவனம் தனது கார்களுக்கு சிறப்பு சேமிப்பு மற்றும் தள்ளுபடி சலுகைகளை வழங்குகிறது. அதன் விபரங்களை தொடர்ந்து இந்த செய்தியில் விபரமாக பார்க்கலாம்.

 புதிய ரெனோ கார்களுக்கான பிப்ரவரி மாத ஆஃபர் விபரம்!

கொரோனாவுக்கு பிறகான சூழலை மனதில் வைத்து கார் விற்பனையை தொடர்ந்து அதிகரிக்கும் முயற்சிகளில் கார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதற்காக, வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை வழங்கும் விதத்தில், தள்ளுபடி சலுகைகளையும் வழங்குகின்றன. அந்த வகையில், ரெனோ கார் நிறுவனமும் தனது கார் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது.

 புதிய ரெனோ கார்களுக்கான பிப்ரவரி மாத ஆஃபர் விபரம்!

ரெனோ க்விட்

ரெனோ க்விட் காரின் 2020ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட யூனிட்டுகளுக்கு ரூ.20,000 மதிப்புடைய நேரடி தள்ளுபடியையும், 2021ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட யூனிட்டுகளுக்கு ரூ.10,000 நேரடி தள்ளுபடியையும் வழங்குகிறது.

 புதிய ரெனோ கார்களுக்கான பிப்ரவரி மாத ஆஃபர் விபரம்!

இதுதவிர்த்து, ரூ.10,000 லாயல்டி போனசாகவும், ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும், ரூ.10,000 கார்ப்பரேட் போனசாகவும் வழங்கப்படுகிறது. ஊரகப் பகுதி வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,000 கூடுதல் தள்ளுபடியும் கொடுக்கப்படுகிறது.

 புதிய ரெனோ கார்களுக்கான பிப்ரவரி மாத ஆஃபர் விபரம்!

ரெனோ க்விட் காரில் 800சிசி மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. 800சிசி மாடல் 54 பிஎஸ் பவரையும், 72 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 1.0 லிட்டர் பெட்ரோல் மாடல் 68 பிஎஸ் பவரையும், 91 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ரெனோ க்விட் கார் ரூ.3.12 லட்சம் முதல் ரூ.5.31 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது.

 புதிய ரெனோ கார்களுக்கான பிப்ரவரி மாத ஆஃபர் விபரம்!

ரெனோ ட்ரைபர்

ரெனோ ட்ரைபர் மினி எம்பிவி காரின் மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட்டுகளுக்கு ரூ.15,000 வரையிலும், ஏஎம்டி வேரியண்ட்டுகளுக்கு ரூ.30,000 வரையிலும் தள்ளுபடி சலுகைகள் பெறும் வாய்ப்பு இருக்கிறது. மேலும், லாயல்டி போனசாக ரூ.10,000 வரையிலும், எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூ.20,000 வரையிலும் பெற முடியும். ரூ.10,000 வரை கார்ப்பரேட் தள்ளுபடியாகவும், ரூ.5,000 வரையில் ஊரகப் பகுதி வாடிக்கையாளர்களுக்கான சலுகையாகவும் வழங்கப்படுகிறது.

 புதிய ரெனோ கார்களுக்கான பிப்ரவரி மாத ஆஃபர் விபரம்!

ரெனோ ட்ரைபர் காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 72 பிஎஸ் பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். இந்த கார் 4 வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

 புதிய ரெனோ கார்களுக்கான பிப்ரவரி மாத ஆஃபர் விபரம்!

ரெனோ டஸ்ட்டர்

ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடலுக்கு ரூ.65,000 வரையிலும், சாதாரண பெட்ரோல் மாடலுக்கு ரூ.45,000 வரையிலும் தள்ளுபடி பெற முடியும். டர்போ பெட்ரோல் ரூ.20,000 நேரடி தள்ளுபடியாக கொடுக்கப்படுகிறது. தவிரவும், லாயல்டி போனஸாக ரூ.10,000 வரையிலும், எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூ.30,000 வரையிலும் பெற முடியும். தவிரவும், கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் சலுகையாக ரூ.30,000 வரையிலும், ஊரகப் பகுதி வாடிக்கையாளர்களுக்காக ரூ.15,000 வரையிலும் தள்ளுபடி பெற முடியும்.

 புதிய ரெனோ கார்களுக்கான பிப்ரவரி மாத ஆஃபர் விபரம்!

டஸ்ட்டர் எஸ்யூவியில் இருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 106 பிஎஸ் பவரையும், 142 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது. டர்போ பெட்ரோல் மாடல் அதிகபட்சமாக 156 பிஎஸ் பவரையும், 254 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

Most Read Articles
--

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault is offering discounts and savings offers Upto Rs.65,000 on Duster, Kwid And Triber cars in India.
Story first published: Monday, February 8, 2021, 17:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X