ஒருபுறம் கார்களின் விலைகள் அதிகரிப்பு, மறுபக்கம் சலுகைகள் அறிவிப்பு!! ரெனால்ட்டின் மாஸ்டர் ப்ளான்...

இந்தியாவில் விற்பனை செய்துவரும் கார்களுக்கு ரெனால்ட் நிறுவனம் 2021 ஜூன் மாதத்திற்கான சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஒருபுறம் கார்களின் விலைகள் அதிகரிப்பு, மறுபக்கம் சலுகைகள் அறிவிப்பு!! ரெனால்ட்டின் மாஸ்டர் ப்ளான்...

நடப்பு ஜூன் மாதத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் ரெனால்ட் நிறுவனம் அறிவித்துள்ள இந்த சலுகையின்படி க்விட், ட்ரைபர், டஸ்டர் மற்றும் கைகர் என ரெனால்ட் கார்களின் எந்தவொரு வேரியண்ட்டை வாங்கும் வாடிக்கையாளரும் சலுகைகளை பெற முடியும்.

ஒருபுறம் கார்களின் விலைகள் அதிகரிப்பு, மறுபக்கம் சலுகைகள் அறிவிப்பு!! ரெனால்ட்டின் மாஸ்டர் ப்ளான்...

அதிகப்பட்சமாக ரூ.75,000 வரையிலான பணத்தை மிச்சப்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகைகளில் பணம் தள்ளுபடி, எக்ஸ்சேன்ஞ் போனஸ், லாயலிட்டி பயன்கள் உள்ளிட்டவை அடங்குகின்றன. மேலும், இந்த சலுகை & தள்ளுபடிகள் வருகிற ஜூன் 30ஆம் தேதி வரையில் மட்டுமே அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் கார்களின் விலைகள் அதிகரிப்பு, மறுபக்கம் சலுகைகள் அறிவிப்பு!! ரெனால்ட்டின் மாஸ்டர் ப்ளான்...

ரெனால்ட் பிராண்டில் இருந்து மலிவான விலையில் விற்பனை செய்யப்படும் க்விட் மாடலில் இருந்து ஆரம்பிப்போம். இந்த காம்பெக்ட் ஹேட்பேக் காருக்கு ரூ.52,000 வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ரூ.20,000 மதிப்பிலான பணம் தள்ளுபடியும், ரூ.20,000 எக்ஸ்சேன்ஞ் போனஸும், ரூ.10,000 வரையிலான லாயலிட்டி போனஸும் அடங்குகின்றன.

ஒருபுறம் கார்களின் விலைகள் அதிகரிப்பு, மறுபக்கம் சலுகைகள் அறிவிப்பு!! ரெனால்ட்டின் மாஸ்டர் ப்ளான்...

இவற்றுடன் இந்த காரை ஆன்லைனில் புக்கிங் செய்பவர்களுக்கு கூடுதல் தள்ளுபடியாக ரூ.2,000 அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆவணங்கள் சரிப்பார்ப்பிற்கு பிறகு, தகுதியுடைய வாடிக்கையாளர்கள் ரூ.10,000 கார்பிரேட் போனஸ் அல்லது ரூ.5,000 மதிப்பிலான கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கான சலுகையினை பெறலாம்.

ஒருபுறம் கார்களின் விலைகள் அதிகரிப்பு, மறுபக்கம் சலுகைகள் அறிவிப்பு!! ரெனால்ட்டின் மாஸ்டர் ப்ளான்...

2020ல் தயாரிக்கப்பட்ட 2020மை ரெனால்ட் ட்ரைபர் காம்பெக்ட்-எம்பிவி காரை வாங்குவோர் ரூ.55,000 வரையிலான பணத்தையும், 2021மை ட்ரைபர் கார்களை வாங்குவோர் ரூ.45,000 வரையிலும் சேமிக்கலாம். 2020மை மாடலுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகளில் ரூ.25,000 பணம் தள்ளுபடி, ரூ.20,000 எக்ஸ்சேன்ஞ் போனஸ் மற்றும் ரூ.10,000 வரையிலான லாயலிட்டி போனஸ் அடங்குகின்றன.

ஒருபுறம் கார்களின் விலைகள் அதிகரிப்பு, மறுபக்கம் சலுகைகள் அறிவிப்பு!! ரெனால்ட்டின் மாஸ்டர் ப்ளான்...

க்விட்டிற்கு அறிவிக்கப்பட்டுள்ள கார்ப்பிரேட் தள்ளுபடி மற்றும் கிராமப்புற வாடிக்கையாளர் போனஸ் உள்ளிட்டவற்றை ட்ரைபரின் 2020மை மாடலும் பெற்றுள்ளது. இந்த எம்பிவி மாடலின் 2021மை கார்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகளில் ரூ.10,000 பணம் தள்ளுபடி, ரூ.20,000 மதிப்பிலான எக்ஸ்சேன்ஞ் போனஸ் மற்றும் ரூ.10,000 வரையிலான லாயலிட்டி போனஸ் முதலியவை உள்ளன.

ஒருபுறம் கார்களின் விலைகள் அதிகரிப்பு, மறுபக்கம் சலுகைகள் அறிவிப்பு!! ரெனால்ட்டின் மாஸ்டர் ப்ளான்...

மேலும், ட்ரைபரை ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்கள் ரூ.5,000-ஐ போனஸாக பெறலாம். ரெனால்ட்டின் சமீபத்திய இந்திய அறிமுக மாடலான கைகருக்கு கார்ப்பிரேட் சலுகை அல்லது கிராமப்புற வாடிக்கையாளருக்கான போனஸ் என்கிற பெயரில் ரூ.10,000 பணம் தள்ளுபடி மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் கார்களின் விலைகள் அதிகரிப்பு, மறுபக்கம் சலுகைகள் அறிவிப்பு!! ரெனால்ட்டின் மாஸ்டர் ப்ளான்...

இவற்றுடன் கைகருக்கு 5-வருடம் அல்லது 1 லட்ச கிமீ உத்தரவாதத்தை ரெனால்ட் நிறுவனம் ஏற்கனவே வழங்கி வருகிறது. இந்த ஜூன் மாதத்திற்காக ரெனால்ட் தற்போது அறிவித்துள்ள சிறப்பு சலுகையில் அதிகப்பட்ச சலுகையினை (ரூ.75,000) நிறுவனத்தின் பிரதான எஸ்யூவி மாடலான டஸ்டர் பெற்றுள்ளது.

ஒருபுறம் கார்களின் விலைகள் அதிகரிப்பு, மறுபக்கம் சலுகைகள் அறிவிப்பு!! ரெனால்ட்டின் மாஸ்டர் ப்ளான்...

ஆனால் ரெனால்ட் டஸ்டர் காரின் விலைமிக்க டாப் வேரியண்ட்டை வாங்கும் வாடிக்கையாளர்கள் மட்டுமே ரூ.75,000 வரையிலான பணத்தை மிச்சப்படுத்த முடியும். 1.5 லிட்டர் என்ஜின் உடன் வழங்கப்படும் விலை குறைவான ஆரம்ப வேரியண்ட்களை வாங்குவோர் ரூ.60,000 வரையில் மட்டுமே சேமிக்க முடியும்.

ஒருபுறம் கார்களின் விலைகள் அதிகரிப்பு, மறுபக்கம் சலுகைகள் அறிவிப்பு!! ரெனால்ட்டின் மாஸ்டர் ப்ளான்...

டஸ்டரின் வேரியண்ட்கள் அனைத்திற்கும் ஒரே மாதிரியாக ரூ.30,000 எக்ஸ்சேன்ஞ் போனஸ், ரூ.15,000 லாயலிட்டி போனஸ் தான் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பணம் தள்ளுபடியில் வேரியண்ட்கள் வித்தியாசப்படுகின்றன. அதாவது விலை குறைவான வேரியண்ட்களுக்கு ரூ.15,000 வரையிலான பணம் தள்ளுபடியும், விலை மிக்க வேரியண்ட்களுக்கு ரூ.30,000 வரையிலான பணம் தள்ளுபடியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் கார்களின் விலைகள் அதிகரிப்பு, மறுபக்கம் சலுகைகள் அறிவிப்பு!! ரெனால்ட்டின் மாஸ்டர் ப்ளான்...

இவற்றுடன் டஸ்டர் எஸ்யூவி காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.30,000 மதிப்பிலான கார்ப்பிரேட் தள்ளுபடி அல்லது ரூ.15,000 மதிப்பிலான கிராமப்புற வாடிக்கையாளருக்கான சலுகையினையும் பெறலாம். இந்த சலுகை அறிவிப்புகளுக்கு மத்தியில் சமீபத்தில் தான் ரெனால்ட் நிறுவனம் அதன் கார்களின் விலைகளை ரூ.7,000ல் இருந்து ரூ.39,000 வரையில் அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault has announced offers and discounts on all models sold in India for the month of June 2021. All variants of the Kwid, Triber, Duster and the Kiger are eligible for the offers from the company this month.
Story first published: Sunday, June 6, 2021, 13:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X