சாலையை அதிர வைத்த பேரணி! ஒரே நேரத்தில் குவிந்த 100 கணக்கான மலிவு விலை கைகர் கார்கள்... ஏன் தெரியுமா?

மலிவு விலை ரெனால்ட் கைகர் காருக்கு அமோகமான வரவேற்பு கிடைத்து வருகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் அரங்கேறிய ஓர் தரமான சம்பவம் பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

சாலையை அதிர வைத்த பேரணி! ஒரே நேரத்தில் குவிந்த 100 கணக்கான மலிவு விலை கைகர் கார்கள்... ஏன் தெரியுமா?

ரெனால்ட் நிறுவனம் மிக சமீபத்தில் அறிமுகம் செய்த கைகர் காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல அமோகமான வரவேற்பு கிடைத்து வருகின்றது. இது ஓர் மலிவு விலை காம்பேக்ட் எஸ்யூவி ரக காராகும். இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்புக் கிடைத்து வருவதாக தகவல்கள் வெளி வருகின்றன.

சாலையை அதிர வைத்த பேரணி! ஒரே நேரத்தில் குவிந்த 100 கணக்கான மலிவு விலை கைகர் கார்கள்... ஏன் தெரியுமா?

இந்த நிலையிலேயே ஒரே நேரத்தில் 100 கணக்கான கைகர் கார்கள் அணி வகுத்து சென்ற சம்பவம்குறித்த தகவல் வெளியாகியிருக்கின்றது. இந்த காட்சியைப் பார்த்த பலர் இதனை முதலில் கார் பேரணி என்றே நினைத்தனர். ஆனால், இது கார் பேரணி அல்ல.

சாலையை அதிர வைத்த பேரணி! ஒரே நேரத்தில் குவிந்த 100 கணக்கான மலிவு விலை கைகர் கார்கள்... ஏன் தெரியுமா?

அண்மையில் கைகர் காரை புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி கொடுப்பதற்காகவே இக்கார்கள் சாலையில் அணி வகுத்துச் சென்றிருக்கின்றன. தெலங்கானா மாநிலத்திலேயே இந்த கார் அணி வகுப்பு சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. இச்சம்பவம் குறித்த வீடியோவை பிபிஎஸ் ரெனால்ட் எனும் யுட்யூப் தளம் வெளியிட்டுள்ளது.

சாலையை அதிர வைத்த பேரணி! ஒரே நேரத்தில் குவிந்த 100 கணக்கான மலிவு விலை கைகர் கார்கள்... ஏன் தெரியுமா?

ரெனால்ட் கைகர் கார் நாட்டின் மிகவும் விலைக் குறைந்த காம்பேக்ட் எஸ்யூவி ரக காராகும். இதில், சிறப்பு அம்சங்களும் ஏராளமாக இடம் பெற்றிருக்கின்றன. எனவேதான் இந்தியர்கள் மத்தியில் நம்ப முடியா வகையில் அமோகமான வரேவற்பைப் பெற்று வருகின்றது. ரூ. 5.45 லட்சம் என்ற தொடக்க விலையில் கைகர் கார் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

சாலையை அதிர வைத்த பேரணி! ஒரே நேரத்தில் குவிந்த 100 கணக்கான மலிவு விலை கைகர் கார்கள்... ஏன் தெரியுமா?

இதன் அதிகபட்ச விலை ரூ. 9.72 லட்சம் ஆகும். இவையிரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இந்த குறைந்தபட்ச விலையை ரெனால்ட் கைகர் கார் கொண்டிருக்கின்ற காரணத்தினால் நிஸான் மேக்னைட், கியா சொனெட், டாடா நெக்ஸான், ஃபோர்டு ஈகோஸ்போர்ட் மற்றும் ஹூண்டாய் வென்யூ ஆகிய கார்களுக்கு கடுமையான போட்டியை வழங்கி வருகின்றது.

சாலையை அதிர வைத்த பேரணி! ஒரே நேரத்தில் குவிந்த 100 கணக்கான மலிவு விலை கைகர் கார்கள்... ஏன் தெரியுமா?

ரெனால்ட் கைகர் 4 விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அவை ஆர்எக்ஸ்இ, ஆர்எக்ஸ்எல், ஆர்எக்ஸ்டி மற்ரும் ஆர்எக்ஸ்இசட் ஆகும். இதில் ஆர்எக்ஸ்இ வேரியண்டே ஆரம்ப நிலை தேர்வாகும். இதுவே, ரூ. 5.45 லட்சம் என்ற மிக குறைந்த எக்ஸ்-ஷோரும் விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

சாலையை அதிர வைத்த பேரணி! ஒரே நேரத்தில் குவிந்த 100 கணக்கான மலிவு விலை கைகர் கார்கள்... ஏன் தெரியுமா?

இதுதவிர, இரு விதமான எஞ்ஜின் தேர்வில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 1.0 லிட்டர், 3 சிலிண்டர் நேட்சுரல்லி அஸ்பயர்ட் மற்றும் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் ஆகிய இரு வித மோட்டார்களிலேயே கைகர் விற்கப்பட்டு வருகின்றது.

Image Courtesy: PPS Renault

இதில், வழக்கமான எஞ்ஜின் 72 பிஎஸ் மற்றும் 96 என்எம் டார்க்கை வெளியேற்றும். அதேசமயம், டர்போசார்ஜட் எஞ்ஜின் 100 பிஎஸ் மற்றும் 160 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடியது. இவ்விரு எஞ்ஜின்களும் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் தானியங்கி கியர்பாக்ஸ் தேர்விலும் விற்பனைக்கு கிடைத்து வருகின்றது.

சாலையை அதிர வைத்த பேரணி! ஒரே நேரத்தில் குவிந்த 100 கணக்கான மலிவு விலை கைகர் கார்கள்... ஏன் தெரியுமா?

இதுதவிர தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல், எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி பகல்நேர மின் விளக்கு, புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், 8 இன்சிலான இன்ஃபோடயெின்மென்ட் சிஸ்டம், எலெக்ட்ரானிக் மூலம் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய கண்ணாடிகள், கீலெஸ் என்ட்ரீ, பின் பக்கத்தில் ஏசி வென்ட், பார்க்கிங் சென்சார் என பல்வேறு சிறப்பு பிரீமியம் அம்சங்களும் இக்காரில் இடம்பெற்றிருக்கின்றன.

Most Read Articles

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault Delivers 100 Unit Kiger SUVs In A One Day. Read In Tamil.
Story first published: Thursday, March 11, 2021, 15:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X