ரெனால்ட் கார்களின் ஷோரூம் விலைகள் அதிரடியாக உயர்ந்தன!! புதிய விலைகளின் முழு விபரம் இதோ!

ரெனால்ட் இந்தியா நிறுவனம் க்விட், ட்ரைபர் & டஸ்டர் கார் மாடல்களின் எக்ஸ்ஷோரூம் விலைகளை அதிகரித்துள்ளது. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ரெனால்ட் கார்களின் ஷோரூம் விலைகள் அதிரடியாக உயர்ந்தன!! புதிய விலைகளின் முழு விபரம் இதோ!

ரெனால்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய விலைகளின்படி க்விட் ஹேட்ச்பேக்கின் விலை ரூ.3,12,800-ல் இருந்து ரூ.5,31,200 (டாப் க்ளைம்பர் (ஒ) ஏஎம்டி) வரையில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக க்விட்டின் விலை ரூ.18,500 அதிகரிக்கப்பட்டுள்ளது.

Kwid Old Price New Price Difference
STD 0.8-litre ₹2,99,800 ₹3,12,800 ₹13,000
RXE 0.8-litre ₹3,69,800 ₹3,82,800 ₹13,000
RXL 0.8-litre ₹3,99,800 ₹4,12,800 ₹13,000
Neotech 0.8-litre ₹4,29,000 ₹4,29,800 ₹800
RXT 0.8-litre ₹4,29,800 ₹4,42,800 ₹13,000
RXL 1.0-litre ₹4,21,800 ₹4,34,800 ₹13,000
Neotech 1.0-litre ₹4,51,000 ₹4,51,800 ₹800
RXL 1.0-litre AMT ₹4,53,800 ₹4,72,300 ₹18,500
RXT (O) 1.0-litre ₹4,59,500 ₹4,72,500 ₹13,000
Neotech 1.0-litre AMT ₹4,83,000 ₹4,83,800 ₹800
Climber (O) ₹4,80,700 ₹4,93,700 ₹13,000
RXT (O) 1.0-litre AMT ₹4,91,500 ₹5,10,000 ₹18,500
Climber (O) AMT ₹5,12,700 ₹5,31,200 ₹18,500
ரெனால்ட் கார்களின் ஷோரூம் விலைகள் அதிரடியாக உயர்ந்தன!! புதிய விலைகளின் முழு விபரம் இதோ!

ரெனால்ட் க்விட்டில் 999சிசி 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 5500 ஆர்பிஎம்-ல் 67 பிஎச்பி மற்றும் 4,250 ஆர்பிஎம்-ல் 91 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட இந்த பெட்ரோல் என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனுக்கு 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

ரெனால்ட் கார்களின் ஷோரூம் விலைகள் அதிரடியாக உயர்ந்தன!! புதிய விலைகளின் முழு விபரம் இதோ!

ஆரம்ப நிலையில் வேரியண்ட்டில் 800சிசி என்ஜின் வழங்கப்படுகிறது. ரெனால்ட் ட்ரைபரின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.5.20 லட்சத்தில் இருந்து ரூ.7.50 லட்சம் வரையில் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன் அதிகப்பட்ச விலையில் ஆர்எக்ஸ்இசட் ஏஎம்டி வேரியண்ட் வழங்கப்படுகிறது.

Triber Old Price New Price Difference
RXE ₹5.12 Lakh ₹5.20 Lakh ₹8,000
RXL ₹5.89 Lakh ₹5.98 Lakh ₹9,000
RXL AMT ₹6.29 Lakh ₹6.43 Lakh ₹14,000
RXT ₹6.39 Lakh ₹6.48 Lakh ₹9,000
RXT AMT ₹6.79 Lakh ₹6.93 Lakh ₹14,000
RXZ ₹6.94 Lakh ₹7.05 Lakh ₹10,000
RXZ AMT ₹7.34 Lakh ₹7.50 Lakh ₹16,000
ரெனால்ட் கார்களின் ஷோரூம் விலைகள் அதிரடியாக உயர்ந்தன!! புதிய விலைகளின் முழு விபரம் இதோ!

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு ட்ரைபரில் 1.0 லிட்டர், 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. 70 பிஎச்பி மற்றும் 96 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

ரெனால்ட் கார்களின் ஷோரூம் விலைகள் அதிரடியாக உயர்ந்தன!! புதிய விலைகளின் முழு விபரம் இதோ!

ஆரம்ப நிலை வேரியண்ட்டிற்கு புதிய 1.0 லிட்டர், 3-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினை வழங்கவும் ரெனால்ட் திட்டமிட்டு வருகிறது. டஸ்டர் எஸ்யூவி காரின் விலை ரூ.9.57 லட்சத்தில் இருந்து ரூ.13.87 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Duster Old Price New Price Difference
RXE ₹8.59 Lakh Discontinued -
RXS ₹9.39 Lakh ₹9.57 Lakh ₹18,000
RXZ ₹9.99 Lakh ₹10.17 Lakh ₹18,000
RXE Turbo ₹10.49 Lakh ₹10.89 Lakh ₹40,000
RXS Turbo ₹11.39 Lakh ₹11.67 Lakh ₹28,000
RXZ Turbo ₹11.99 Lakh ₹12.27 Lakh ₹28,000
RXS Turbo AT ₹12.99 Lakh ₹13.27 Lakh ₹28,000
RXZ Turbo AT ₹13.59 Lakh ₹13.87 Lakh ₹28,000
ரெனால்ட் கார்களின் ஷோரூம் விலைகள் அதிரடியாக உயர்ந்தன!! புதிய விலைகளின் முழு விபரம் இதோ!

ஆர்எக்ஸ்இசட் டர்போ ஆட்டோமேட்டிக் டஸ்டரின் விலைமிக்க வேரியண்ட்டாகும். ரெனால்ட் டஸ்டரின் விலை அதிகப்பட்சமாக ரூ.28,000 வரையில் உயர்த்தப்பட்டுள்ளது. ஆரம்ப நிலை 1.5 லிட்டர் பெட்ரோல் ஆர்எக்ஸ்இ வேரியண்ட்டின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

ரெனால்ட் கார்களின் ஷோரூம் விலைகள் அதிரடியாக உயர்ந்தன!! புதிய விலைகளின் முழு விபரம் இதோ!

க்விட், ட்ரைபர் எம்பிவி மற்றும் டஸ்டர் மாடல்களின் விலை அதிகரிப்பு, அதிகரித்துவரும் பாகங்களின் விலையை பொறுத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பு இவற்றின் விலைகளை எந்த அளவிற்கு பாதிக்கவுள்ளது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Most Read Articles

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault India Increases The Prices Of The Kwid, Triber & Duster: Here Are The New Prices
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X